பயண உணவுகள் - 2 வயது குழந்தைக்கு

அன்பு தோழிகளுக்கு,

என் இரண்டு வயது மகன் அர்னிஸ்க்கு 2 நாள் கார் பயணத்திற்க்கு தேவையான உணவு மற்றும் விளையாட்டு (கார் சீட்டில் இருந்தபடி விளையாட) பற்றி அனுபவமுள்ளவர்கள் சொல்லுங்கள் தயவு செய்து.(சைவம் - எதுனாலும்)

அன்புடன்
அனிதாமுத்து

sappathi idiyappam idli

நன்றி , இட்லி 2 நாள் தாங்குமா? ஆனால் நான் செய்யும் இட்லி கண்டிப்பாக தாங்காது.

குழந்தைக்கு பிடிச்ச ஃப்ளேவர்ட் மில்க் & யோகர்ட்ஸ் வாங்கிக்கலாம். பிஸ்கட்ஸ், ப்ரெட் ஜாம் பட்டர், சப்பாத்தி, முதல் நாள் சாப்பிட எதாவது புளி அல்லது எலுமிச்சை சாதம் (எண்ணெய் பிரிய கொதிக்க வைத்து, கை படாமல் கிளற வேண்டும்), நூடில்ஸ் பிடிக்கும் என்றால் கப் நூடில்ஸ், ஃப்ளாஸ்க்கில் கொஞம் சுடு தண்ணி, குடிக்க நீர், சர்க்கரை.... இவை போதுமானதா இருக்கும்.

விளையாட அவரோட ஃபேவரட் டாய்ஸ் தான்... சின்ன கார்ஸ், ரைம்ஸ், புக்ஸ், கலர் க்ரயான்ஸ் & கொஞ்சம் கலரிங் புக்ஸ், அவருக்கு எது இண்ட்ரஸ்இங்கோ அது எடுத்துக்கங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இட்லி அரைக்கும் போது கொஞ்சம் அவல் ஊற வைத்து அர்ரைதல் நண்றாக இருக்கும்

வனிதா ரொம்ப ரொம்ப நன்றி.
நீங்க சொன்னபடி நான் செய்து பார்கிறேன். இது சரியாவரும் என நினைக்கிறேன்.
இன்னிக்குத்தான் நிறைய புக்க்ஸ் வாங்கி வந்தேன்.ஒரு வாரமாக யோசித்தேன். அப்புறம் அருசுவை இருக்க பயம் இல்லை என வந்தேன்.
மிகவும் நன்றி

அன்புடன்
அனிதா

நன்றி பாலா
இதுவரை இட்லிக்கு அவல் போட்டதில்லை. ஆப்பத்திற்கு மட்டும் தான் போடுவேன். இனி என் இட்லியும் நல்லா இருக்குமில்ல....

அன்புடன்
அனிதா

மேலும் சில பதிவுகள்