காகித கூடை 2 - பகுதி 1

தேதி: September 24, 2012

3
Average: 3 (3 votes)

 

A4 காகிதம்
டிசைனர் பேப்பர்
க்ளூ
பென்சில்
கத்தரிக்கோல்

 

தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். டிசைனர் பேப்பரை A4 அளவுக்கு வெட்டி வைக்கவும்.
இரண்டு காகிதத்தையும் நீளவாட்டில் இரண்டாக மடிக்கவும். மடித்த காகிதத்தை குறுக்கு அளவில் 6” அளந்து கொண்டு மீதத்தை வெட்டி விடவும்.
இப்போது 6” உள்ள காகிதத்தில் இடது பக்கம் மேலே 2” மற்றும் வலது பக்கம் கீழே 2” படத்தில் உள்ளது போல் அளந்து மார்க் செய்து கோடுகள் வரையவும். இதை நறுக்கி எடுக்கவும். பக்கத்தில் 2” போட்டு வைத்து முக்கோணமாக கிடைக்கும் பகுதி தேவையற்றது.
இப்போது இரண்டு காகிதத்திலும் நடுவில் இருந்து வெட்டி எடுத்த பகுதியை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கவும் (அதாவது காகிதங்களின் ஒரு பக்கம் மடிப்பு இருக்கும், ஒரு பக்கம் மடிப்பு இல்லாமல் இருக்கும். மடிப்பு உள்ள பக்கங்கள் இரண்டும் கீழ் பக்கம் வரும்படி அதுவும் ‘V’ வடிவில் இணைவது போல் வைத்து கொள்ளவும். படம் 6ல் உள்ளது போல்.) ஒன்றன் மேல் ஒன்று ஓவர்லேப் ஆகி இருக்கும் இடத்தை மட்டும் 5 ஆக பிரித்து கோடுகள் வரையவும்.
இரண்டு காகிதத்தை இதே போல் வரைந்து அதை கத்தரி கொண்டு நறுக்கி வைக்கவும். மடிப்பு உள்ள பகுதி அதாவது காகிதத்தின் 3/4 பாகம் நறுக்கப்பட்டிருக்கும். மேல் பக்கம் 1/4 பாகம் நறுக்காமல் அப்படியே இருக்கும்.
எப்படி வைத்து கோடுகள் வரைந்தோமோ அப்படியே மீண்டும் ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கவும். இப்போது ஒரு காகிதத்தில் உள்ள கோடுகள் இன்னொரு காகிதத்தின் கோடுகளோடு “X” வடிவில் பொருந்தும்.
முதலில் வெள்ளை காகிதத்தின் முதல் முனையை டிசைனர் காகிதத்தின் முதல் முனையின் உள்ளே நுழைக்கவும்.
பின் டிசைனர் காகிதத்தின் இரண்டாவது முனையை வெள்ளை காகிதத்தின் முதல் முனையில் நுழைக்கவும். இப்படியே ஆல்டர்னேடிவாக கோர்த்துக்கொண்டே போகவும்.
வெள்ளை காகிதத்தின் ஒரு முனையை முழுவதுமாக எல்லா டிசைனர் காகிதத்தின் முனையோடு கோர்த்த பின், மீண்டும் வெள்ளை காகிதத்தின் இரண்டாவது முனையை இதே போல் கோர்க்கவும்.
இரண்டாவது முனையை கோர்க்கும் போது முதல் முனை உள்ளே விட்டதால் இரண்டாவது முனை மேலே வருவது போல் துவங்க வேண்டும்.
முதல் காகிதம் கோர்த்தது போலவே இரண்டாவதையும் கோர்த்து முடிக்கவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்