House plan

Where I can get Indian type house plan (online).or is any online architect available how much he will charge.

நீங்க எந்த ஊரு?உங்க ஊர் பேரை வச்சு ஆர்கிடெக்ட் கூகிளில் தேடுங்க.ஆன்லைனில் நிறைய ப்லான்ஸ் கிடைக்கும் தான் ஆனால் அது உங்கள் தேவைக்கு தகுந்த மாதிரி வருமான்னு பார்க்கனும் மட்டுமல்லாது உங்க கான்ட்ரேக்டர் அதை சரியா கொண்டு வரணும்..உங்கள தேவை எப்படி என்பதை முடிவு செஞ்சுக்குங்க.
நிறைய செலவு செய்யாமல் பட்ஜெட்டில் ஒரு வீடு என்றால் நல்ல கான்ட்ரேக்டரை கொண்டு ப்லேன் கொடுத்து வீடு கட்டலாம்
அல்லது ஒண்ணே ஒண்ணு நல்லபடியா திருதியா கட்டணும் என்றால் ஆர்கிடெக்டுக்கு கொடுங்க..ஏ டூ சீ அவங்களே பாத்துக்குவாங்க உங்களுக்கு அலைச்சல் வேலையே இல்லை..வீடு நம் தேவை எப்படியோ அதே மாதிரி திருய்ப்தியா செய்து தருவாங்க

Thanx thalika I search a lot but I didn't got our tamilnadu type house so that I am asking our friends.

அஸ்பர் சீட் என்று யாராவது கேள்வி பட்டு இருக்கிங்களா?

எங்கள் வீட்டு மாடிக்கு போடலாம் என்று உள்ளோம்.

ஆனால் எங்கே யாரை கூப்பிட்டு போடுவது என்று ஒரே குழப்பமாக உள்ளது.

இதை பற்றி கூகுளில் செர்ச் பண்ணி பார்க்கலாம் என்று பார்த்தால் வரமாட்டேங்குது.
அஸ்பர் சீட் என்பதற்கு வேறு ஏதும் பேரு உண்டா?ப்ளீஸ் தெரிந்தவங்க பதில் போடவும்:)

சரியான அளவு தெரிய வில்லை எப்படியும் எங்கள் வீட்டு மாடியின் அளவு 60 க்கு 30 இருக்கும் என்று நினைக்கிறேன்...
இதற்க்கு எவ்வளவு செலவு ஆகும் இதன் விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும்....

SSaifudeen:)

ஆஸ்பெஸ்டாஸ் சீட்-னு சொல்வாங்க.. அதை தான் கேக்குறீங்களோ? சிமெண்ட் ஷீட் இது. மழை காலத்தில் ஓகே. வெயில் காலத்தில் வெயில் கொளுத்தி தள்ளிடும். தவிர, இதை போட வேண்டும் என முடிவு செய்து விட்டால் வீட்டுக்கு பக்கத்தில் தென்னை மரங்கள் இல்லையென்றால் போடலாம். தென்னை மரங்கள் இருந்தால் அடிக்கடி தேங்காய் விழுந்து ஷீட் உடைய வாய்ப்புள்ளது. எங்களின் பழைய வீட்டில் போட்ட அனுபவம் உண்டு. இரண்டு பக்க வீடுகளிலும் தென்னை மரங்கள் வளர்த்தாங்க. தேங்காய் விழுந்து விழுந்தே ஓடு ஒரு வழி ஆனது ;(அதில் வெறுத்து போய் தான் இன்னொரு வீடு கட்டினோம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி:)இங்கே எல்லோரும் இதை ஆஸ்பர் சீட் அப்படின்னு சொல்லுராங்க சோ இதான் இதுக்கு பேருன்னு நினைத்து இப்படியே கூகுளில் டைப் பண்ணிட்டேன் அக்கா...

இப்போ ஆஸ்பெஸ்டாஸ் சீட் தகரத்தில் வருதுக்கா.இதற்க்கு லட்ச்சங்கள் செலவாகுன்னு சொல்லுறாங்க.சோ இதை பற்றி கொஞ்சம் தெரிந்தால் சொல்லுங்க....

தோழீஸ் உங்களுக்கும் மேலும் இதை பற்றி தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ் ....

SSaifudeen:)

நீங்க Truss workசொல்றீங்கன்னு நினைக்கிறேன்..துணி காயப் போட ஊஞ்சல் கட்ட விளையாட ரெஸ்ட் எடுக்கன்னு நிழலுக்கு+மழை நீர் தங்காமல் இருக்க போடும் இரும்பு ஷீட்..அதை சமீபத்தில் உறவினர் வீட்டுக்கு போட்டுட்டு 2 லட்சம் ஆச்சுன்னு சொன்னாங்க

ம்ம்ம் truss work இதான்க்கா .கூகுள் இமேஜசில் தட்டியதும் வருது.உங்கள் பதிலிற்கு மிக்க நன்றி:)

எங்க வீடு புது வீடு தான் பட் என்னான்னு தெரியலை நல்லா ஒழுகுது...
போன மழைக்கே கொஞ்சம் ஒழுகியது தட்டுக்கள் மாத்தி நல்லா கொத்தி விட்டு ஜல்லி கற்கள் எல்லாம் போட்டு மூடினோம் .

ஆனால் இந்த மழைக்கு மாற்றமே இல்லை அப்படியே தான் இருக்கு சொல்ல போனால் வேறு வேறு இடங்களிலும் ஒழுகுதுக்கா.சும்மா லோக்கல் எஞ்நியர்ச்சைலாம் கூபிட்டு காட்டியாச்சி அவங்க ஆஸ்பர் சீட் தான்(truss work) போடணும்ன்னு சொல்லிட்டாங்க.

அக்கா உங்க உறவினர் வீடு எவ்வளவு அடி இருக்கும்?

எங்க வீட்டுக்கும் 2லட்சம் தான் ஆகும்ன்னு சொல்லுறாங்க....

தோழீஸ் இதை பற்றிய விவரம் மேலும் உங்களுக்கு தெரிந்தால் இங்கே பதிவிடவும்:)

SSaifudeen:)

எங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு போடலாம் என்று உள்ளோம்.ஆனால் சில பேர் இந்த போடாதிங்க இதுக்கு கேன்சர் வரும் என்கின்றனர்.இது உண்மையா?தோழிகளே!

எங்கள் குழப்பத்தை தயவு செய்து சீக்கிரம் தீர்த்து வையுங்கள்.ஆஸ்பெஸ்டாஸ் டீலர்சிடம் பேசிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு செய்தியை காதில் கேட்டதும் ஒரே குழப்பமாவும் பயமாகவும் உள்ளது.

SSaifudeen:)

அப்படி கேள்விபட்டுஇருக்கேன்பா ஆனால் உண்மையான்னு தெரியல ஷமீஹா.
ரொம்ப ரொம்ப வெயிலின் தாக்கம் அதிகமா தெரியும்.வெயில் காலத்தில் இருக்க முடியாதுபா

ஆமாம் முன்னாடி எங்க வீட்டிலேயும் போட்ருந்தோம் வெய்யில் ரொம்ப தெரியும் அதனால அது மேல தென்னைஒலை போட்டிருந்தோம். ஆனா நீங்க சொல்றது அது இல்லைனு நினைகிறேன் அது ஒண்ணும் அவ்வளவு costly இல்லை.எதுக்கும் ஒரு முறை அது போட்டவுங்க வீட்டை போய் பாருங்க.

மேலும் சில பதிவுகள்