டூனா மீன் கட்லெட்

தேதி: September 26, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

டூனா மீன் - ஒரு டின்
முட்டை - இரண்டு
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1 (அ) பொட்டேடோ ப்யூரி பவுடர் - 2 மேசைக்கரண்டி
வெங்காயம்
பச்சை மிளகாய் - ஒன்று
கேரட் - ஒன்று
இஞ்சி, பூண்டு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு, மல்லி தழை - சிறிது
எண்ணெய் - பொரிக்க


 

வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி தழை ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். கேரட் துருவி வைக்கவும். டூனா மீன் டின்னை உடைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
முட்டையை உடைத்து ஊற்றவும். பிறகு எல்லா தூள் வகைகளையும் சேர்த்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி தழை, மற்றும் கேரட்டையும் சேர்க்கவும்.
வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கு (அ) பொட்டேடோ ப்யூரி பவுடர் எல்லாம் சேர்த்து ஒன்றாக பிசைந்து கொள்ளவும்.
பின் வட்டமாக தட்டி சிறிது எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சுவையான டூனா மீன் கட்லெட் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அட... எங்க ஏரியா ரெசிபி ;) டூனா மீன் டின்னை சொன்னேங்க. அவசியம் ஊருக்கு போய் செய்துடுறேன் ஒரு பார்ட்டிக்கு. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட அறுசுவை டீமிர்க்கு நன்றி.
நன்றி, வனிதா அவசியம் செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மீன்ல கட்லட் நான் ஊருக்கு போறப்ப செயது பார்க்கிறேன்

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

நன்றி கார்திகா,அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஹாய் முசி டூனா மீன்ன வைத்து என்ன பண்ணலாம்னு நினைத்து கொண்டிருந்தேன் நல்ல குறிப்பு கொடுத்து இருக்கீங்க நன்றி வாழ்த்துக்கள்

சுவையான மீன் கட்லெட் சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வருகைக்கும்,வாழ்த்திக்கும்,நன்றி நஸ்ரின்.
ரொம்ப நன்றி இந்திரா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் முஹ்சினா டூனா மீன் கட்லெட் அருமை இங்கு டின் மீன் கிடைக்காது கிடைத்தால் அவசியம் செய்து பார்க்கிறேன்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

மிக்க நன்றி,ஹலிலா.கிடைக்கும் போது அவசியம் செய்துபருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

டூனா மீன் கட்லெட் ரொம்ப அருமயா இருந்தது முசி நன்றி

Meen katlat super musi