குழந்தைக்கு என்ன சொல்லி குடுக்கலாம்

,
அன்பு தோழிகளே என் பைய்யன் முதல் வகுப்பு படிக்கிறான்,தினமும் ஹோம் வொர்க் ஒழுங்காக வேகமாக செய்து முடித்துவிட்டு டிவி பார்த்து கொண்டே இருப்பான்,நாங்கள்,U.A.E வசிப்பதால் யார் வீட்டுக்கும் போய் விளையாட முடியாது,வேறு என்ன மாதிரி பயனுள்ள விஷயங்கள் கற்று கொடுக்கலாம்,அதாவது அவனது பொது அறிவை வளர்க்கும் விதமாக,எதிர்கால தேவைக்கு உபயோகமாக என்ன சொல்லி குடுக்கலாம்,ஆலோசனை சொல்லுங்கள் தோழிகளே,உங்கள் பதிலுக்காக காத்தி இருக்கிறேன்

ஒன்றாம் வகுப்பு படிக்கின்ற பையன் எவ்வளவு நேரம் படிச்சுக்கிட்டே இருக்கணும் னு நினைக்கிறீங்க... நீங்களே தான் ஹோம் வொர்க் ஒழுங்கா வேகமா செய்து முடிச்சுடுறான் னு சொல்றீங்க... இதுலயே உங்க பையன் ரொம்ப active and smart னு தெரியுதே... ஆனா சின்ன வயதிலே அதிகமா tv addict ஆகாமா இருக்கணும். அது சரி தான்.... அவனோட interest எதுலனு பாருங்க. singing, drawing, dancing.... இப்படி ஏதாச்சும்.... அதை கற்று கொடுக்க முயற்சி பண்ணுங்க.. பொது அறிவை வளர்க்க இன்னும் கொஞ்சம் வருடம் போகட்டும்..... இப்பவே நிறைய படிக்க சொல்லி படிப்பு மேல வெறுப்பை உண்டாக்க வேண்டாமே !!!! இது சின்ன ஆலோசனை மட்டுமே... குழந்தை வளர்க்கும் பலர் உங்களுக்கு இதை விட நல்ல ஆலோசனை வழங்குவார்கள்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

என் மகளுக்கு நிறைய புக் படிச்சு கொடுப்பேன் சின்ன சின்ன புக்ஸ் வாங்கி கொடுப்பேன் விரும்பி படிப்பாள்.பொண்ணு அதனால கம்பேர் பண்ண முடியாது அவளுக்கு கொஞ்சம் கலர் பேப்பர் பேனா செக்வின்ஸ் ஜுகினா எல்லாம் கொடுத்தா அதில முழு நேரமும் இருந்துக்குவா...நீங்க உங பைய்யன் முன்னாடி உக்காந்து அது மதிரி க்லூ ஒட்டி வரைஞ்சு எழுதி அழகா கார்ட் செஞ்சு பைய்யனுக்கு கொடுங்க அதுல இன்ஸ்பயர் ஆனால் அது மாதிரி அவங்களா நிறைய நேரம் தனியா உக்காந்து செய்வாங்க..ஆனால் பசங்களுக்கு இந்த இன்டெரெஸ்ட் வருமா தெரியல..சைக்கிள் அல்லது ஸ்கூட்டி வாங்கி கொடுங்க .எதாவது ஆக்டிவிட்டி சேத்து விடுங்க.

ஹாய் கார்த்திகா,தளிகா
ரொம்ப நன்றிப்பா,உங்க பதிலுக்கு வேறு ஐடியா இருந்தாலும் கூறவும்

மேலும் சில பதிவுகள்