கோங்குரா டால் ப்ரை

தேதி: September 5, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புளிச்ச கீரை - ஒரு கட்டு
சின்ன வெங்காயம் - ஐம்பது கிராம்
தக்காளி - இரண்டு
பச்சை மிளகாய் - மூன்று
துவரம் பருப்பு - நூறு கிராம்
எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
உப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்


 

துவரம் பருப்பில் இருநூறு மில்லி தண்ணீர், மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.
கீரையில் உள்ள நரம்பை நீக்கி நறுக்கி ஒரு டீஸ்பூன் எண்ணெயில் நன்கு வதக்கி வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை நீள நீளமாகவும், பச்சை மிளகாயை இரண்டாக வாய் பிளந்தும் வைக்கவும்.
பருப்பு நன்கு வெந்ததும் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
பின் கீரையைப் போட்டு மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
அடுப்பில் ஒரு சிறிய வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து கொட்டி இறுக மூடவும்.


மேலும் சில குறிப்புகள்