பேஸிக் க்வில்லிங் (Quilling)

தேதி: September 27, 2012

5
Average: 4.4 (9 votes)

 

க்வில்லிங் பேப்பர் ஸ்ட்ரிப்
க்வில்லிங் டூல்
கம்

 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
க்வில்லிங் டூல் ஊசி போல இருக்கும். ஆனால் நுனியில் பிளவுப்பட்டு பேப்பரை நுழைக்க ஏதுவாக அமைந்திருக்கும். இதனுள் பேப்பரை நுழைத்து சீராக சுற்றவும்.
இறுக்கமாக சுற்றி எடுத்து கம் கொண்டு முனையை ஒட்டவும்.
படத்தில் உள்ளதை போன்ற பூக்கள் செய்யலாம்.
சுற்றியதை இறுக்காமல் பக்குவமாக இலகுவாக்கினால் படத்தில் உள்ளது போல விரிந்து நிற்கும். முனையை கம் கொண்டு ஒட்டவும்.
இப்போது படத்தில் உள்ளதை போன்ற பூக்கள் செய்யலாம்.
இந்த மார்க்கர் ஒரே அளவில் இதழ்களிருக்க உதவுகிறது. மேலும் ஒட்டியதை குண்டூசி மூலம் குத்தி நிறுத்தி காய வைக்கவும் உதவும். மற்ற டிசைன்கள் செய்யவும் உதவும். மையப்புள்ளியை ஊசிக் கொண்டு இழுத்து வெளிப்புற சுற்றோடு சேர்த்து குத்தி கம் தடவவும்.
இப்போது படத்தில் உள்ளதை போன்ற டிசைனில் பூக்கள் செய்யலாம்.
மேலும் அந்த வட்டமான சுருளின் ஒரு புறத்தை கையால் பிடித்துக் கொண்டு, மறுபுறத்தை கூர்மையாக மடித்து அழுத்தவும். அதனை மலரின் இதழ்களாகவும், இலையாகவும் பயன்படுத்தலாம்.
வட்ட சுருளின் இருபுறமும் சமமாக மடித்தால் படத்தில் உள்ளதை போல கிடைக்கும்.
வட்ட சுருளின் ஒரு பக்கம் மேல் நோக்கியும், மறுபக்கம் கீழ் நோக்கியும் மடித்து அழுத்தினால் படத்தில் உள்ளதை போன்ற டிசைனை பெறலாம்.
க்வில்லிங் செய்யும் போது நேராக சுற்றாமல் கொஞ்சம் கோபுரம் போன்று சுற்றியும் எடுக்கலாம்.
அதே போல் சுற்றினால் படத்தில் உள்ளதை போல கிடைக்கும்.
வட்ட சுருளின் ஒரு பக்கத்தை பிடித்துக் கொண்டு, மறுபுறம் கூர்மையாக மடிக்காமல், நடுவில் அழுத்தி பிளவுபடுத்தலாம்.
அப்படி செய்தால் படத்தில் உள்ளதை போன்ற பூக்கள் செய்யலாம் (மேலே சொன்ன அனைத்தும் க்வில்லிங் பேஸிக்ஸ்)
அதை கொண்டு நம் கற்பனை திறனுக்கு ஏற்றபடி பல வகையான பூக்கள் செய்யலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

க்வில்லிங் மிகவும் அழகாக உள்ளது. நீங்க எடுத்து இருக்கிற கலர் கூட சூப்பர்

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

ரொம்ப அழகா செய்திருக்கீங்க ரம்யா அந்த க்ரீன் கார்ட்டில் செய்திருப்பது ஹைலைட்டா இருக்கு. பூக்கள் பூத்திருப்பது போலவே இருக்கு

ரொம்ப நல்லா இருக்குங்க. மாலேவில் இருக்கும் போது க்வில்லிங் பண்ண ஆசைப்பட்டு டூல்ஸ்கு ட்ரை பண்ணேன், கிடைக்கல. சென்னையில் எல்லாம் இருக்கு, செய்ய தான் நேரமில்லை. வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகா செய்து இருக்கீங்க. க்ரீட்டிங் கார்ட்ல செய்து இருக்குறது சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள். க்வில்லிங் பேப்பர்ல காந்தி தாத்தாவா! அசத்தலா இருக்குமே ரம்ஸ் யாராவது செய்து இருக்காங்களா?

ரம்யா இந்த க்வில்லிங்க எனக்கும் செய்ய தெரியுமே ஆனா உங்க அளவுக்குலாம் நிறைய வித்தியாசம்காட்டிலாம் செய்ய தெரியாது. ரவுண்ட் மட்டும் செய்து பூ செய்திருக்கேன் அவ்வளவு தான் உங்களோடது சூப்பரா இருக்கு.

ரம்ஸ்,

ரொம்ப அழகா, நீட்டா செய்து காட்டியிருக்கிங்க. ஒரே குறிப்பிலேயே பலவிதமான பூ டிசைன்ஸ் செய்து காண்பித்திருப்பது வெகு அருமை. எடுத்துக்கொண்ட பேப்பர்ஸ் கலரும் அட்டகாசமா இருக்கு!
வாழ்த்துக்கள் ரம்ஸ்!

கொஞ்சநாள் முன் இந்த க்வில்லிங் மெத்தடை நானும் என் பொண்ணும் வேற ஏதோ நெட்டில் தேடும்பொது எதேச்சையா கிடைத்து விரும்பி பார்த்துக்கொண்டு இருந்தோம். :) இதையும் அவளிடம் காட்ட‌றேன்.

அன்புடன்
சுஸ்ரீ

நன்றி
எனது குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி ;)

கார்த்திகா
ரொம்ப நன்றிங்க ;)

உமா
மிக்க நன்றி ;)

வனி
நான் ஆன் லைனில் வாங்கினேன்.பிறகு தான் தெரிந்தது இங்கு பக்கத்திலேயே எல்லாவித கைவினை பொருட்களும் கிடைக்கிறது என.
எனக்கு க்வில்லிங் அடிக்ட் ஆகிவிட்டது . அவசியம் கிடைத்தால் செய்து பாருங்கள். உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என நினைக்கிறேன்.
:)

வினு
ரொம்ப நன்றி :).
ஆமாம். மினியேச்சர் வகையை சேர்ந்தது.நானா செய்த இதெல்லாம் ரொம்ப சாதாரணம்.பக்காவா செய்கிறவர்கள் இருக்கிறார்கள். :)

வீணா
ரொம்ப நன்றிங்க. இது மிகவும் சுலபம் தான. பொறுமை தான் தேவை .:)

சுஜா
அவசியம் காட்டுங்க. பிடிக்கும் என நினைக்கிறேன்.ஆம் நெட்டில் ஏகப்பட்டது இருக்கு. அத்தனை அழகா செய்து இருப்பாங்க. :) நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா,

எளிமையான முறையில்,பளிச் படங்களுடன் தந்து இருக்கீங்க..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

க்வில்லிங் மிக அழகா செய்து இருக்கீங்க!!! இதற்கு உபயோகப்படுத்தும் டூல்ஸ் எல்லா இடங்களிலும் கிடைக்குமா? க்வில்லிங் டூல்ஸ் - ன்னு கேட்கனுமா? நானும் செய்து பார்க்கனும்னு ஆசை....

கலை

கவி
ரொம்ப நன்றிங்க ;)

கலை
ஹாபி லாபியில் கிடைக்கும் பாருங்க.க்வில்லிங் டுல்னு கேளுங்க.
இல்லைனா அம்சான்ல ஆர்டர் செய்ங்க.:)
ரொம்ப நன்றிங்க :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப அழகா இருக்கு ரம்யா. எனக்கெல்லாம் இத பத்தி எதுமே தெரியாது பாத்து ரசிக்க மட்டும் தான் தெரியும்.க்வில்லிங்னா என்னனே தெரியாதுங்க.சொன்னா யாரும் சிரிக்கக்கூடாது இப்போ தான் இந்த வார்த்தையையே முதன் முதலா கேள்விப்படுறேன்.வாழ்த்துக்கள்.....

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

அழகாக செய்து காட்டி இருக்கீங்க ரம்ஸ். பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்