ஆப்பிள் சிடர் வினிகர் பற்றி தெரிந்தவர்கள் கூறுங்கள் தோழிகளே.....

ஆப்பிள் சிடர் வினிகர் உடல் எடை குறைக்க எப்படி அருந்த வேண்டும்..இதில் யாருகாவது எடை குறைந்து உள்ளதா தோழிகளே..???

ஆப்பிள் சிடர் வினிகர் உடலுக்கு ரொம்பவே நல்லது. உடலின் பி எச் லெவலை சரியா வெச்சுக்கும்.டாக்சின் வெளியேற்ற உதவும்.
உடலின் எடையையும் கணிசமாக குறைக்கும். உடனே பலன் தெரியாது.தொடர்ந்து எடுத்துக் கொண்டால் ஒரு மாதம் கழித்து தெரிய தொடங்கும். கிருமி நாசினி, பொடுகு தொல்லைக்கு நல்ல மருந்து. ஸ்கின் அலர்ஜிக்கு பயன்படுத்தலாம். இன்னும் பல வழிகளில் பயன்படும். வீட்டில் இருக்க வேண்டிய மருந்து பொருள் அது.

ஆர்கானிக் தான் வாங்க வேண்டும். பில்டர் செய்யாதது தான் நல்லது. பாட்டலின் கீழே துகள்கள் படிந்து இருக்கும். ப்ராக் ஒரு சிறந்து பிராண்ட். Braag organinc ஆப்பிள் cider vinegar ...
தினமும் ஒரு டம்பளர் கிரீன் டி அல்லது டம்பளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கலந்து குடிக்கலாம். இல்லைனா ஒரு பாட்டில் தண்ணியில் இரண்டு ஸ்பூன் கலந்து கொஞ்சம் கொஞ்சமா நாள் முழுதும் சிப் பண்ணலாம். ஒரு நாளைக்கு இரண்டு ஸ்பூன் வரை தான் எடுத்துக்கணும். நேரிடையா அப்படியே அதை பயன்படுத்த கூடாது. வாய் வழியே குடிக்க எதில் வேணாலும் ஒரு ஸ்பூன் மட்டும் கலக்கலாம்.ஆனால் தலைக்கே, ஸ்கின்க்கோ போட ஒரு ஸ்புனுக்கு மூன்று ஸ்பூன் 1 ஈஸ்ட் 3 என்ற வீதத்தில் கலந்து தான் தேய்க்கணும். பொடுகு ஓடியே போயிடும். அனைவரும் பயன்படுத்த வேண்டியே ஒரு அருமருந்து. எந்த பிரான்ட் என்றாலும், அன் பில்டர் ஆர்கானிக் பயன்படுத்ததும்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

தெளிவான பதிலுக்கு ரொம்ப நன்றி ரம்யா...நான் பில்டர் வினிகர் வாங்கிட்டேன்.அதை உபயோகிக்கலாமா?எத்தனை லிட்டர் தண்ணீரில் சேர்த்து குடிக்கணும் கொஞ்சம் சொல்லுங்கள் ரம்யா...காலையில் வெறும் வயிற்றில் குடிக்கனுமா?இல்லை சாப்பாட்டுக்கு முன் குடிக்கனுமா?தலைக்கு எப்படி உஸ் பண்ணனும்?முகத்திற்கும் உஸ் பண்ணலாமா?நிறைய கேள்வி கேட்டுட்டேன்,பதில் சொல்லுங்க ரம்யா ப்ளீஸ்.....

நீங்க எங்க வாங்குனீங்க Pls help me

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

தீபா
பில்டர்ட் வாங்கிவிட்டால், பரவாயில்லை அதை கறையை கிளீன் பண்ணவும், மீட் டெண்டரைஸ் பண்ணவும் பயன்படுத்தலாம்.
ஆனால் அன்பில்டர் தான் உடலுக்கு நல்லது. தினமும் ஓவ்வொரு முறையும் சாப்பிட்ட பின் ஒரு பெரிய ஜூஸ் குடிக்கும் டம்பளர் நீரில் ஒரு ஸ்பூன் அலது சுவைக்கு ஏற்ப குறைத்து , கலக்கி குடிங்க.ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமாக இருக்கலாம் . இது போல மூன்று வேளையும் செய்யலாம்.இல்லைனா கிரீன் டீயில் இதே போல கலக்கி குடித்தால் இன்னும் நல்லது. இப்படி செய்ய பிடிக்கவில்லை எனில், ஒரு பாட்டில் வாட்டர் கேனில் ஒன்னரை ஸ்பூன் (நார்மல் சைஸ் ஸ்பூன் தான் ) சேர்த்து அந்த தண்ணியை அப்பப்ப நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சம் சிப் பண்ணி குடிங்க. லிட்டர் அளவெல்லாம் கிடையாதுங்க. உங்களுக்கு பிடித்த மாதிரி செய்யலாம். ஆனால் அப்படியே குடிக்க கூடாது , ஒரு நாளைக்கு 2 இல்லைனா 3 டி ஸ்பூன் தான் சேர்த்துக்கனும். இந்த இரண்டை மட்டும் கடைபிடிங்க.

தலைக்கோ இல்லைனா உடம்பு, முகத்துக்கோ பயன்படுத்துவதாக இருந்தால், நான் சொன்னது போல 1 ஈஸ்ட் 3 , அதாவது ஒரு டேபிள் ஸ்பூன் வினிகர் எடுத்துக் கொண்டு, அதில் மூன்று டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து தேய்க்கணும். கண்ணில் படாம பார்த்துக் கொள்ளனும்.பரு இருந்தால் போன உடன் பயன்படுத்தவும். அவ்வளவு தான்.இதன் பலன் எல்லாம் ஆர்கானிக் அன்பில்டரில் மட்டுமே கிடைக்கும்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எல்லா டிபட்மேண்டல் கடையிலும் கிடைக்கும் கார்த்திகா

நன்றி ரம்யா எல்லாம் தெளிவாக விளக்கியதற்கு.....நான் ஆர்கானிக் அன்பில்டர் வாங்கி உஸ் பண்றேன்...மீண்டும் ஒரு நன்றி உங்க பதிலுக்கு...

மிக்க நன்றி

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

ரொம்ப நன்றி தீபா, ரொம்ப நாளாகவே நான் கேட்க நினைத்த கேள்வியை கேட்டு உதவியதற்கு. அத்துடன் அதற்கு அருமையாக விளக்கம் தந்த ரம்யாவிற்கும் நன்றி.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

hi mam apple cider vinegar how many days it will reduce the weight

அன்பு ரம்யா,
எனக்கு 1 சந்தேகம்,எனக்கு உடம்பில் அதாவது முதுகு கழுத்து பின்புறம் தொடை பகுதிகளில் கருப்பு கருப்பு திட்டுகள் உள்ளது,இதற்கு சிவப்பு வெங்காயத்துடன்,வினிகர் கலந்து தேய்த்தால் சரியாகும் என்று கேள்விபட்டேன்,இது உண்மையா?அப்படி உபயோகிக்கலாம் என்றால் வினிகரை எந்த அளவில் உபயோகிக்கலாம்,எவ்வளவு நேரம் ஊறவைக்க வேண்டும்?? வாரத்தில் எத்தனை நாட்கள் உபயோகிக்க வேண்டும்,கூறமுடியுமா?

மேலும் சில பதிவுகள்