தேதி: October 1, 2012
ப்ளாஸ்டிக் பாட்டில்கள்
கத்தரிக்கோல்
கொரடு
கம்பி
குயிக் ஃபிக்ஸ் / ஹாட் க்ளூ
மணிகள் / கற்கள்
மெழுகுவர்த்தி
பேப்பர், பென்சில்
மார்க்கர் - விரும்பும் வண்ணம்
பாட்டிலின் அடி பாகம், மேல் பாகம், நடு பாகம் என தனி தனியாக வெட்டி எடுக்கவும்.

பாட்டிலின் நடு பகுதியை விரித்துக்கொண்டு 1.5 இன்ச், 1 இன்ச், 0.5 இன்ச் என பல அளவுகளில் சதுரங்களாக வெட்டி எடுத்து கொள்ளவும்.

ஒவ்வொரு அளவுக்கேற்ப பூ இதழ்களை பேப்பரில் வரைந்து வெட்டி எடுத்து அதை சதுரங்களாக வெட்டி வைத்துள்ள ப்ளாஸ்டிக்கின் மேல் வைத்து பிளாஸ்டிக்கை பூ வடிவத்தில் வெட்டி எடுக்கவும்.

இப்போது எல்லா அளவிலும் ப்ளாஸ்டிக்கில் பூ இதழ்கள் தயார். (சிறிது பிசுறுகள் இருந்தால் பரவாயில்லை, தீயில் காட்டும் போது சரியாகிவிடும். ஓரங்களில் இருக்கும் சொரசொரப்பும் போய் விடும்)

மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு பூ இதழ்களை அதில் ஒவ்வொரு இதழாக காட்டி லேசாக சூடு செய்யவும். சூடு ஆறும் முன் கொரடால் இதழ்களை விருப்பம் போல் வளைத்து விரும்பிய வடிவம் கொடுக்கவும்.

பூ இதழில் எந்த பக்கம் உள் பக்கமாக வேண்டுமோ அந்த பக்கத்தை தீயில் காட்ட வேண்டும். தீ படும் போது ப்ளாஸ்டிக் வளைந்து குவியும். மெழுகோ, விளக்கோ தீ அதிகமில்லாமல் இருப்பது அவசியம், அப்போது தான் புகை படிந்து கருப்பாகாது. எல்லா இதழ்களையும் இதேபோல் வளைத்து தயார் செய்யவும்.

எல்லா இதழ்களிலும் உங்களுக்கு விருப்பமான நிறத்தில் மார்க்கர் கொண்டு வண்ணம் தீட்டவும் (ப்ளாஸ்டிக் பாட்டில் வண்ணம் கொண்டவையாக இருப்பின் இது தேவையில்லை).

இப்போது ஒரு விரிந்த இதழின் மேல் சற்று குவிந்த இதழ் / சிறிய இதழ் ஒன்றை வைத்து க்ளூ கொண்டு ஒட்டி விடவும்.

நடு பகுதியில் மகரந்தத்திற்கு மணிகள் / கற்கள் ஒட்டிவிடவும்.

இது போல் பூக்கள் செய்து ப்ரோச் க்ளிப், தலைக்கு போடும் க்ளிப், ஆர்டிஃபிஷியல் நகைகள் செய்யும்போதும் கம்மல், செயின் போன்றவைகளில் ஹேங்கிங் என விருப்பம் போல் செய்யலாம்.

இது பாட்டிலின் அடி பாகத்தை ஒட்ட வெட்டி எடுத்து மெழுகில் காட்டி வடிவம் கொடுத்தது. இதன் நடுவில் கம்பியை சூடு செய்து இரண்டு ஓட்டை இட்டிருக்கிறேன். அதில் கம்பியை விட்டு வளைத்திருக்கிறேன்.

Sprite பாட்டிலில் இலைகள் வெட்டி வளைத்திருக்கிறேன். அதனால் கலர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இப்போது பூ மற்றும் இலையை சேர்த்து கம்பியில் பச்சை நிற டேப் ஒட்டினால் பூ தயார். நடுவில் விருப்பம் போல் மணிகள் ஒட்டவும்.

பூக்கள் செய்து க்ளிப்பில் ஒட்ட இது போல் இலைகள் செய்து அடியில் ஒட்டிவிடலாம். உங்களிடம் ப்ளெயினாக இருக்கும் பர்ஸ், ஹேண்ட் பேக் போன்றவற்றை அலங்கரிக்கவும் இவற்றை பயன்படுத்தலாம்.

இது ப்ரோச் பின்னில் ஒட்டியது. இவை அடிப்படை மட்டுமே. முதன் முதலாக செய்ய துவங்குபவர்கள் சுலபமாக செய்யும் முறை. இதை பயன்படுத்தி இன்னும் பல விதமாக அழகாக வடிவங்கள் செய்து கொள்ளலாம்.

இது போல் செய்து வீட்டில் அலங்கரிக்க, க்றிஸ்மஸ் ட்ரீயில் அலங்கரிக்க பயன்படுத்தும் சின்ன சீரியல் விளக்குகளில் கூட பயன்படுத்தலாம். கலர் கலர் ப்ளாஸ்டிக் பூக்கள், பட்டாம்பூச்சிகள் செய்து மாட்டினால் விளக்கு வெளிச்சத்தில் அழகாக இருக்கும்.

Comments
வனிதா,
மிக அழகாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
REALLY GOOD
REALLY GOOD
மிகவும் அருமையான ஒரு
மிகவும் அருமையான ஒரு ரோஸ்................இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிப்பிங்களா????????????? மிகவும் அழகு..........................
by,
AnuGopi,
Be happy and Make others happy........
வனிதா அக்கா
ரொம்ப அழகாக இருக்கிறது.பார்த்தவுடனே நினைத்தேன் நிச்சியம் நீஙக தான் அக்கா சூப்பர் வாழ்த்துக்கள்.
கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;
with
**Karthika**
வனிதா
என்ன சொல்லனே தெரியல போங்க... உங்கள பாராட்டி பாராட்டி எனக்கு டயர்டு ஆகிடுச்சி.. வழக்கம் போல சூப்பரோ சூப்பர் வாழ்த்துக்கள்...
Love Makes Life Beautiful...
With Love,
Indira.
வனி.....
ரொம்ப அழகா இருக்குங்க..... நல்லதொரு recycle ........ வாழ்த்துக்கள்....
வனி
வனி
ரொம்ப நல்லா இருக்குங்க..
நல்லா பொறுமையா செய்து இருக்கிங்க. மலரின் வடிவமும் நல்லா வந்திருக்கு.
வாழ்த்துக்கள் :)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
வனி கண்ணு....
அதெப்படி வனி மார்க்கர் வெச்சே நீங்க இவ்வளவு அழகா கலர் பண்ணிட்டீங்க? நிஜமாகவே அந்த கத்திரி வைத்து தான் கட் பண்ணீங்களா? ரொம்ப பொறுமைங்க......இங்கே எதுகெடுத்தாலும் ஒரு டூல் இருக்கும். அதை வைத்து எல்லாத்தையும் கச்சிதமா பண்ணிடலாம். அம்மா வீட்டுக்கு போயும் சும்மா இல்லை......வசு கூட சேர்ந்து அடங்க மாட்டீங்களா? அசத்தலா இருக்கு. வாழ்த்துக்கள்.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
வனி
வனி!
தண்ணி குடுச்சுட்டு குப்பைல போடற பாட்டில்ல
இவ்வளவு அழகான மலர்க்கொத்து,
என்னத்த சொல்றது போங்கோ!
பாராட்டுகள் பல.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
நன்றி
கைவினையை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
செபா ஆண்ட்டி
ஆண்ட்டி... மிக்க நன்றி :) நலமா இருக்கீங்களா?
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சுஜாதா
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அனு கோபி
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சென்னை கார்த்திகா
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இந்திரா
மிக்க நன்றி. //உங்கள பாராட்டி பாராட்டி எனக்கு டயர்டு ஆகிடுச்சி.// - இப்ப மாலே வரும் வரை குறிப்பெல்லாம் அனுப்ப நேரம் இல்லையே... ரெஸ்ட் எடுங்க :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
தீபா
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரம்யா
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
லாவி
அதே கத்திரி தான் பயன்படுத்தியது. நமக்கு இங்க டூல்ஸ் வாங்க எல்லாம் அனுமதி இல்லைங்க... இருக்குறதை வைத்து எதாவது செய்வதென்றால் மட்டுமே அனுமதி உண்டு. :) அதனால் வேறு வழியே இல்லை.
இதெல்லாம் மாலேவில் செய்து அனுப்பியது லாவி, இங்க வந்ததில் இருந்து இன்னும் கிச்சன் பக்கமும் போகல, க்ராஃப்ட்டும் தொடல. 3 குட்டீஸ் கூட டைட்டா போகுது. திரும்ப மாலே போய் தான் எதாவது செய்யணும். :) மிக்க நன்றி லாவி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அருட்செல்வி
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வாழ்த்துக்கள்
மிக மிக அழகாக உள்ளது. வாழ்த்துக்கள்.
vanitha akka
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப......சூப்பர்
இன்னும் நிறைய ரொம்ப சொல்லனும் போல் உள்ளது ஆனால் கை வலிக்குது வனிதா அக்கா.
உங்கள் திறமையை பார்த்து எனக்கே பிரம்மிப்பா இருக்கு போங்க.
இதுனால யாருடைய திருஷ்ட்டியும் வனிதா அக்கா மேல் படாமல் இருக்க நான் இப்பவே சுத்தி போட்டுடுறேன்
////மாஷா அல்லாஹ் சூ////
SSaifudeen:)
kavi shini
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சமீஹா
மிக்க நன்றி :) பாராட்டுக்கும், சுத்திப்போட்டதுக்கும் சேர்த்து. எனக்கு ஒரு சந்தேகம்... அதை அரட்டையில் கேட்கிறேன்... பதில் சொல்லுங்க ப்ளீஸ்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சூப்பர்
ரொம்ப சூப்பர்,அசத்தலா இருக்கு,வாழ்த்துக்கள்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
musi
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பிளாஸ்டிக் பூ
அழகான பூக்கள். மிக அருமை.
இதுவும் கடந்து போகும்.
lakshmi
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
beauty
ரொம்ப ரொம்ப அழகாக இருக்கு. madame
shagila
ப்ளாஸ்டிக் பூ
அழ...கா இருக்கு வனி. கலர் சூப்பர்.
- இமா க்றிஸ்
shagila
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இமா
மிக்க நன்றி. *திடீர்னு பயணம் எல்லாம் போன மாதிரி இருக்கு :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா அக்கா...
ப்ளாஸ்டிக் பாட்டிலில் பூ!!! மிக அழகா இருக்கு... வாழ்த்துக்கள்... உங்களுக்கு நிறைய நிறைய பொறுமை இருக்குன்னு நினைக்கிறேன்... எப்படி நீங்க எது செஞ்சாலும் இவ்ளோ அழகா இருக்கு.. உங்களால் தான் எனக்கு கைவினையிலும், சமையலிலும் ஆர்வம் வந்திருக்கு...
கலை
கலை
மிக்க நன்றி :) //உங்களுக்கு நிறைய நிறைய பொறுமை இருக்குன்னு நினைக்கிறேன்// - ஹிஹிஹீ. எங்க வீட்டில் சொல்லிப்போடாதீங்கோ... சிரிக்க போறாங்க. //உங்களால் தான் எனக்கு கைவினையிலும், சமையலிலும் ஆர்வம் வந்திருக்கு...// - இது மகிழ்ச்சியே... :) நன்றி நன்றி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
good idea
good idea
great
nice recycling.. try butterfly, bangles etc with the same
சுரேஸ்னி
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ப்ரதீபா
மிக்க நன்றி... யோசனைகளுக்கு நன்றி, ட்ரை பண்றேன். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
flower
sooooo good akka............
very nice.......
very nice.......
சங்கீதா
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சாந்தி
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா