சந்தோஷத்தை கொண்டாடமுடியவில்லை

அனைவருக்கும் மிக்க நன்றி. நான் என்னை மாற்றி கொள்ள முயற்சி செய்கிறேன். நேரம் இன்மையால் மறுபடி பதிவு இடுகிறேன். நன்றி

யாஸ்மின்..விடுங்க இதெல்லாம் மறைந்து போகக் கூடிய ப்ரச்சனைகள் இப்பத்திக்கி அட்ஜஸ்ட் பண்ணிக்கிங்க..கூடவே அம்மா இருந்தாலும் முதல் இரண்டு மாதம் கஷ்டம் தான்..எத்தனையோ பேருக்கு வயசான அம்மா இருப்பாங்க அவங்களால் பிள்ளையை தூக்கி வைக்க மட்டும் தான் முடியும்..இன்னும் நிறைய பேருக்கு சிசேரியனுக்கு கூட ஆள் இருக்க மாட்டாங்க..அந்த வகையில் நீங்க பரவாயில்லைன்னு சமாதானப்படுங்க...வலிக்கு நீங்க மருத்துவரிடம் சொல்லி நல்ல ஆயின்ட்மென்ட் மருந்து வாங்கிக்குங்க கொஞ்ச நாளில் சரியாகிடும்..குழந்தைக்கு உங்களுக்கு முடியும்போது மேல் துடைச்சு விடுங்க..அப்ப தான் குழந்தை நல்லா தூங்கும்...பால் இல்லை என்பதெல்லாம் பிரம்மை...குழந்தைக்கு பால் கொடுக்க கொடுக்க தான் அதிகரிக்கும்..எனக்கென்னமோ உங்க மாமியார் லேட்டா சமைச்சாலும் அட்லீஸ்ட் சமைச்சு தராங்களே என்பதே பெரிய விஷயமா இருக்கு..நிறைய வீடுகளில் வெங்காயம் கூட நறுக்க மாட்டாங்க...நீங்க மற்ற எந்த உதவியும் எதிர்பார்க்காமல் தந்ததை சாப்பிட்டு உங்க பக்கத்திலயே பழங்கள் நிறைய வச்சுக்குங்க..பசிக்கும்போது பழம் ஆரஞ் ஆப்பில்னு எடுத்து சாப்பிடுங்க..பிறகு நிறைய தண்ணி குடிச்சுட்டு பால் கொடுக்க கொடுக்க அதிகரிக்கும்..அடிக்கடி ஃபார்முலா கொடுக்காதீங்க அது ஒரு அவசரத்துக்கு வேணா ஓ கே.குழந்தை இன்னும் கொஞ்சம் வளர்ந்தால் நீங்க இதெல்லாம் மறந்துடுவீங்க

பட்டியில் பதிவு போட வேண்டி இருந்த போதும் எனக்கு என்னவோ இந்த இழையில் முதலில் பதிவிடவே தோன்றியது.

குழந்தை பிறந்தவுடன் பெண்களுக்கே உண்டாகும் பிரச்சனைகள் தான். சாதரணமாக பெண்களுக்கு குழந்தை உண்டானதிலிருந்து அம்மாவின் ஞாபகம் தான் இருந்திருக்கும். அதுவும் உங்களால் அவர்களுடன் இருக்க முடியாத சூழ்நிலையில் இன்னமும் இருக்கவே செய்யும். குழந்தை பிறந்தவுடன் நம்முள் ஏற்ப்படும் மாற்றம், ஹார்மோன் இது எல்லாமே சேர்ந்து நம் மேலே நமக்கு ஒரு சுய பச்சாதாபத்தை ஏற்படுத்தும். நம்மை உலகமே சேர்ந்து கவனித்தாலும் கூட நமக்கு பத்தாது. அதுவும் இல்லாமல் இத்தனை நாள் நிம்மதியாக தனி ஆளாக இருந்திருப்போம் ஆனால் இப்பொழுது நம்முடைய முழு நேரத்தையும் இழுத்துக் கொள்ள ஒரு ஆள் வந்தாச்சு. அதுவும் குழந்தை விடாமல் அழுதாலும் அதை சமாளிக்க தெரியாமல் திணறும் போது இன்னமும் வேதனையாகவே இருக்கும். தளிகா சொன்னது போல் உங்களின் நிலைமை ரொம்பவே மேல். குழந்தை பிறந்தவுடன் கூட ஒத்தாசைக்கு யாருமே இல்லாமல் கணவனின் சப்போர்ட் இல்லாமலும் இருக்கும் பெண்கள் இங்கே ஏராளம். இதுவும் கடந்து போகும்.

சந்தோஷத்தை கொண்டாமுடியவில்லை என்பதெல்லாம் பிரம்மை. எல்லாம் உங்களின் கையில் தான் இருக்கிறது. இதை எல்லாத்தையும் ஒதுக்கி வைத்து குழந்தையை நீங்கள் மட்டும் தான் நன்றாக கவனிக்க முடியும் என்பதை மனதில் கொள்ளுங்கள். அந்த குழந்தை உங்களை மட்டுமே நம்பி இந்த உலகத்தில் வந்துள்ளது. இங்கே வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கூட ஒத்தாசைக்கு அம்மா கிடையாது மாமியார் கிடையாது. அவர்களே வீடு வேலையும் செய்து சமைத்து குழந்தையும் பார்த்து வேலைக்கும் போகணும். உங்களுக்கு இப்பொழுது இருக்கும் ஒரே வேலை குழந்தையை மட்டும் பார்த்துக் கொள்வது தான். அதனால் அதை பற்றி ஒருபொழுதும் பேசவே கூடாது. இது கடமை என்று நினைக்க வேண்டாம். இதற்க்கு மாற்றே கிடையாது இதை கண்டிப்பாக நீங்கள் மட்டும் தான் செய்தாக வேண்டும். இங்குள்ள அனைத்து பெண்களும் இதை தான் செய்தனர்.

முதலில் உங்களுக்கு hemorrhage இருக்கா என்று மருத்துவரிடன் சென்று காண்பிக்கவும். அது சரியானால் பாதி பிரச்சனை சரியாகி விடும்.

இரண்டாவது குழந்தை பசிக்கு மட்டுமே அழாது. பால் குடித்து முடித்த பின்னரும் அழுதுக் கொண்டே இருந்தால் தான் பால் இன்னமும் வேண்டும் என்று அழுகிரதாக அர்த்தம். இல்லையென்றால் எதாவது வலி, கடித்திருக்கலாம்.

மூன்றாவது பசும் பால் குடித்துக் கொண்டே இருந்தால் மட்டும் தான் பால் சுரக்கும் என்றில்லை. இரண்டு கப் பால் ஒரு நாளைக்கு போதுமானது. மீன் என்றில்லை பால் சுரக்க வெந்தயம், சீரகம், கீரைகள், காலிபிளவர், பருப்பு மற்றும் இரும்பு சத்துள்ள நீர் சத்துள்ள காய்கறிகளை சாபிட்டாலே போதுமானது. உங்களுக்கு பசித்தால் நீங்கள் பழங்கள் சாப்பிடவும்.

குழந்தை இந்த நேரத்தில் இதை செய்யும் அதை செய்யும் என்று அட்டவணை ஏதும் இந்த உலகத்தில் இல்லை. Expect the unexpected. இந்த பருவத்தை மனதை குழப்பி கொள்ளாமல் அனுபியுங்கள். இருக்கேவே இருக்கு அறுசுவை. அதில் உள்ள குழந்தை வளர்ப்பு பற்றி படித்து பார்த்தீங்கன்னா நீங்களே மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்ற அளவுக்கு ஆயிடுவீங்க. சரியா? இப்பொழுது மனது சந்தோஷமாக இருப்பது தான் முக்கியம். அப்படி இருந்தால் தான் குழந்தையும் நன்றாக கவனிக்க முடியும். பாலும் நன்றாக சுரக்கும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

-

பால் சிலருக்கு வராது தான்... ஆனா அதுக்கு நம்மோட உணவும் ஒரு காரணம். நேரத்துக்கு நல்ல சத்தான உணவு இல்லை எனும் போது பால் கிடைப்பது சிரமமே. ஓட்ஸ் எல்லாம் சாப்பிட்டா என்ன சொல்ல... சரி கஷ்டத்தில் ஒரு நல்லது உங்க கணவர் புரிஞ்சுக்குறது. அவரை எதாவது உங்களுக்கு பிடிச்ச உணவை வாங்கி தர சொல்லுங்க. பழங்கள் சாப்பிடுங்க. ஆனா அது குழந்தைக்கு ஒத்துக்குதான்னு பாருங்க. ஃபார்முலா குடிப்பதால் தான் உங்க குழந்தை வலியால் அழும். உட்கார்ந்து எழும்போது பக்குவமா செய்யுங்க... அது மேற் கொண்டு புண் ஆகாம இருக்க உதவும். சீக்கிரம் ஆறவும் செய்யும். நிறைய நீர் குடிங்க. நேரம் கிடைச்சா பூண்டு கொண்டு வந்து ரூமில் ஃப்ரீயா இருக்கும் போது உரிச்சு வைங்க. இரவில் பால் மட்டும் பூண்டு போட்டு உங்களுக்கு நீங்களே காய்ச்சுக்கங்க. இது குழந்தைக்கு பால் கிடைக்க உதவும். குழந்தையை தினமும் துணியால் சுடு நீர் முக்கி பிழிந்து துடைச்சு விடுங்க. அப்ப தான் குழந்தை இப்படி அழாம இருக்கும்.

இறைவன் துணை இருப்பான்... கவலைப்படாதீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Mela namma akka's sonnadha follow pannunga. Enaku andha alavu edhuvum solla theriyala. But unga kayathukku marundhu mattum sollalam nu thaan vandhen. enaku delivery ku piragu stitch potta idathula problem aachu. adhuku Dr. enaku T-BACT nu oinment prescribe panninaanga. adha adikkadi apply pannunga. 2 days la sariya poidum. its true pa... ellaa kaayathukkum super marundhu...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

முதலில் தாய் ஆகி இருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
பையன் பெயர் என்ன வைத்துள்ளீர்கள்...........உங்கள் மாமியார் எவ்வளஓ பரவாஇல்லை ஒரு சில மாமியார்கள்
பால் கொடுக்காமல் இருக்கிறாள் என் மருமகள் நான் சொன்னாள் கேட்கமாட்டாள் நீங்கள் சொல்லுங்கள் என குழந்தையைப் பார்க்கவரும் ஆண்களிடமும்,பெண்களிடமும் சொல்லி அவர்களும் சிறிதும் யோசிக்காமல் அந்த பெண்ணிடம் ஆண்,பெண் அனைவரும் சொல்வார்கள்.........இதைவிட கொடுமை என்ன இருக்கிறது??????
இதுவரை நடத்ததை விடுங்கள்
mother horlicks குடிங்க நல்லா பால் வரும்...........
இல்லனா டாக்டர் கிட்ட சொல்லி பால் சுறக்கமாத்திரை சாப்பிடுங்க அது நல்ல பலன் தரும்..........lactogen tablet

காயம் உள்ள இடத்தில் சூடுதண்ணீரில் சிறிது dettol கழந்து இரவில் சுத்தம் செய்துகொள்ளுங்கள்...........வலி இல்லாமல் இருக்கும் விருப்பம் இருந்தால் செய்யவும். நான் அப்படிதான் தினமும் செய்தேன் தைய்யல் விரைவில் ஆறியது............

by,
AnuGopi,
Be happy and Make others happy........

முதலில் என்னுடைய வாழ்த்துக்கள் யாஸ்மின். கவலைபடுவதை விட்டுவிட்டு அதற்குள்ள தீர்வை யோசியுங்கள். வருத்தபட்டுக் கொண்டிருந்தால் மனமும் உடலும் சோர்ந்து தான் போகும். ப்ரெட், ரஸ்க், நட்ஸ் இவற்றை சாப்பிட்டாலுமே பால் நன்றாக இருக்கும். வருத்தபாடதீங்க. சந்தோஷமா இருங்க.

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

டியர் யாஸ்மின்,

உங்களுக்கு (post natal depression) என்று நினைக்கிறேன் ,இது பொதுவாக பிரசவத்திற்க்குப் பின் அநேகப் பெண்களுக்கு வரும் ஒரு வித மன உளைச்சல்(unable to cope up) என்றும் சொல்லலாம்.

மாமியாரின் செய்கைகள் பற்றி இப்போதைக்கு எதுவும் யோசிக்க வேண்டாம்.

முதலில் ,உங்கள் ஆரோக்கியத்தைப் பாருங்கள் .ஒவ்வொரு முறையும் யூரின் மற்றும் டாய்லட் கழித்து விட்டு வெது வெதுப்பான நீரில் சிறிது டெட்டால் கலந்து கழுவவும். அதன் பின் டெட்டால் ஆயின்ட்மென்ட் இருந்தால் தையல் போட்ட இடத்தில் தடவவும்.நிறைய தண்ணீர் குடியுங்கள், பாலூட்டுவதால் உங்கள் உடலில் உள்ள நீர் சத்து சீராக்கும். மேலும் யூரின் போகும் போது அதிக எரிச்சல் இருக்காது ,வலிக்கு PARACETAMOL 1000mg (calpol) சாப்பிடுங்கள் .BRUFEN மாத்திரையும் சாப்பிடலாம்.வேறு எந்த மாத்திரைகளும் மருத்துவரின் ஆலோசனைப் படிதான் சாப்பிட வேண்டும்.

முடிந்த வரை உங்கள் அறை கதவைப் பூட்டிக் கொண்டு சிறிது நேரம் தையல் போட்ட இடத்தை காற்று படும் படியாக திறந்து வைக்கவும் ,தையல் போட்ட இடம் எக்காரணத்தைக் கொண்டும் ஈரமாக இருக்க கூடாது,மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்,மலம் இறுகி விட்டால் போகும் போது வலிப்பதோடு மட்டுமல்லாமல் தையல் பிரியவும் வாய்ப்பு அதிகம்.உங்கள் கணவரை பழங்கள் வாங்கித் தரச் சொல்லி சாப்பிடவும்.

காலையில் முடிந்த வரைக்கும் ஹெவியாக ஏதாவது சாப்பிடவும்,(இட்லி ,தோசை etc )

குழந்தைக்கு பாலூட்டியதும் தோளில் போட்டு தட்டி ஏப்பம் எடுக்க வேண்டும் ,சில சமயம் வயிறு வலியினாலும் குழந்தை அழும்

நம் நாட்டில் தான் பிரசவத்திற்க்கு முன்னும் பின்னும் அம்மாவின் உதவி,ஆனால் மேற்க்கத்திய நாடுகளில் கணவர் தான் மனைவியையும் குழந்தையையும் கவனிப்பார்கள், ஆகவே அம்மா உதவி இல்லை என்ற எண்ணத்தை விட்டு விடும்மா. உனக்காவது புரிந்து கொள்ள உன் கணவர் இருக்கிறார்,எனக்கு தெரிந்து இங்கு (UK)யில் எத்தனையோ பெண்கள் யாருடைய உதவியும் இல்லாமல்,தனியே கஷ்டப் பட்டதை நான் பார்த்திருக்கிரேன்,அதில் நம் நாட்டு பெண்களும் அடங்கும்.இங்கு பிரசவம் முடிந்த 24 முதல் 48 மணி நேரத்தில் வீட்டிற்க்கு அனுப்பி விடுவார்கள்,3வது அல்லது 4 வது நாளில் தடுப்பூசி போட குளிரிலும் ,மழையிலும் தனியே குழந்தையோடு செல்லும் தோழிகளைப் பார்த்துள்ளேன்.

ஓரு நிமிடம் கண்களை மூடி,இந்த குழந்தை எப்படி கருவாகி,உருவாகி இந்த உலகிற்க்கு வந்தது என்பதை நினைத்துப் பாருங்கள்,தாய்மையின் மகிழ்ச்சியை அனுபவித்துப் பாருங்கள் ,உங்களுக்கிருக்கும் வலியெல்லாம் மறைந்து விடும், வீணாக எதையும் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருங்கள்.குழந்தை தூங்கும் போதெல்லாம் நீங்களும் தூங்குங்கள். உங்களுக்கு பிடித்தமான பாடல்கள் மற்றும் மெல்லிசைகளை கேட்டு மகிழுங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும்
உங்கள் கதையை படித்துவிட்டு வெறும் பார்வையோடு செல்ல மனம் வர வில்லை. இருந்தாலும் உங்களுக்கு ஆலோசனை கூறும் அளவுக்குக் எனக்கு அனுபவம் இல்லை ஏனென்றால் எனக்கு மாமியாரும் இல்லை குழந்தையும் இல்லை.

மேலே நம் தோழிகள் அருமையான ஆலோசனை கூறி உள்ளார்கள் அதையே ஃபாலோ பண்ணுங்க.

நம் வாழ்க்கைக்கு முக்கிய சந்தோசமே கணவரும் குழந்தையும் தான் அதை ஆன்டவன் உங்களுக்கு அழகா தந்து உள்ளான் அதை கொண்டு சந்தோசப்படுங்க.

இன்று அடுப்பில் வைத்து சமைக்காத எத்தனையோ சத்தான ஆகாரம் உள்ளது அதை உங்கல் கணவரிடம் சொல்லி வாங்கி உங்கள் அருகிலே வைத்து அப்பப்போ சாப்பிடுங்கள்.

பையன் எப்படி இருக்கான்?உங்களை போலவா அண்ணா மாதிரியா?

SSaifudeen:)

மேலும் சில பதிவுகள்