உல்லன் பர்ஸ் - பாகம் 1

தேதி: October 4, 2012

5
Average: 4.3 (4 votes)

 

உல்லன் நூல் - 1 (சிறிய பர்ஸிற்கு)
குரோசே ஊசி
லயனிங் துணி (பர்ஸின் அளவுக்கேற்ப)
பர்ஸின் அளவிற்கேற்ப ஜிப்
துணி தைக்கும் ஊசி மற்றும் நூல்

 

பர்ஸ் பின்னுவதற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். (இதில் உபயோகிக்கப்பட்டுள்ள பின்னல்களை இந்த லிங்க்கில் பார்க்கவும் : http://www.arusuvai.com/tamil/node/9919).
உல்லன் நூலில் ஒரு சிறிய முடிச்சுப் போட்டு அதற்குள் ஊசியை விடவும்.
இப்பொழுது வலது கையில் ஊசியைப் பிடித்துக் கொண்டு இடது கையில் நூலைச் சுற்றிக் கொண்டு ஊசியில் நூலைச்சுற்றி அந்த சிறிய முடிச்சின் வழியாக இழுக்கவும். ஒரு செயின் போன்ற பின்னல் கிடைக்கும். அதேபோல் மீண்டும் ஊசியில் நூல் சுற்றி முந்தைய செயினில் இழுக்கவும்.
பர்ஸ் எவ்வளவு நீளத்திற்கு தேவையோ அந்த அளவிற்கு செயின்களைப் பின்னிக் கொள்ளவும். (இந்த பின்னல் தான் சங்கிலிப் பின்னல் (செயின் ஸ்டிச்)).
இப்பொழுது ஊசியில் நூலைச் சுற்றி கடைசியாக பின்னிய செயினிலிருந்து மூன்றாவது செயினிற்குள் ஊசியை விடவும் (பின்னோக்கி வரவும்).
ஊசியில் நூல் சுற்றி அதை வெளியே இழுக்க வேண்டும்.
மீண்டும் ஊசியில் நூல் சுற்றவும்.
ஊசியில் சுற்றிய நூலை அதற்கு முன்பு உள்ள செயின் வழியாக இழுக்கவும்.
மீண்டும் ஊசியில் நூல் சுற்றவும்.
சுற்றிய நூலை அதன் முன் உள்ள செயின்களில் இழுக்கவும் (இந்த பின்னல் தான் இரட்டை குரோசே பின்னல் (டபுள் குரோசே)).
இப்பொழுது ஒரு செயின் மட்டும் ஊசியில் இருக்கும்.
இதேபோல் அடுத்துள்ள செயின்களிலும் பின்னவும்.
இதேபோல் கடைசி செயின் வரை ஒவ்வொரு செயினிலும் ஒரு பின்னலாக பின்னிக் கொள்ளவும். இப்பொழுது கடைசியில் உள்ள நூலை இடது கையால் பிடித்துக் கொண்டு ஊசியில் நூலைச் சுற்றவும்.
கடைசி செயினில் ஊசியை விடவும்.
ஊசியில் நூல் சுற்றி வெளியே இழுத்து ஒரு டபுள் குரோசே பின்னல் பின்னவும்.
அதே செயினில் இன்னொரு டபுள் குரோசே பின்னலை பின்னவும். இப்பொழுது முன்பு பின்னிய பின்னலின் அடிப்பக்கத்திற்கு ஊசி திரும்பியிருக்கும். (அதாவது செயினின் அடிப்பக்கத்திற்கு).
இப்பொழுது டபுள் குரோசே பின்னலை அடுத்தடுத்த பின்னலின் இடையே பின்னவும்.
அந்த வரி முழுவதும் கடைசி பின்னல் வரை அதே பின்னலைப் பின்னவும்.(பட்டையாக தோன்றும் இது தான் பர்ஸின் அடிப்பக்கம்).

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்