எங்க ஏரியா - பகுதி 4

அரட்டையை இங்க தொடருங்க மக்களே... :) இனி யாரும் தூங்க கூடாது.

ரூல் நம்பர் 1: உங்க பதிவு தமிழில் மட்டும் இருக்க வேண்டும்.

** நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம் :)

அன்பு தோழிகளே... அரட்டையை, கதையை இங்கே தொடருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஏன் ஏன் சமீஹா... ஏன் இம்புட்டு சோகம்??!! வந்துட்டாங்க தானே... சிரிச்சு போடுங்க பதிவை :)

பானு... நானும் அவரை விட்டுட்டு தனியா தான் இருக்கேன் 4 வருஷமா... :) சும்மா இல்லைங்க... வயிற்றில் பிள்ளையோடும், கை பிள்ளை முகத்தை நேரில் அவருக்கு காட்ட முடியாமலும்... பிரசவ சமயத்தில் அவர் என் அருகில் இல்லாமலும்... நிறைய. மனசுக்கு கஷ்டமா தான் இருக்கு... என்ன செய்ய... விதி விளையாடுதுன்னு விட்டுட்டேன். இப்ப தான் போய் போய் கொஞ்சம் நாள் இருக்கேன். யாருடைய வருத்தமும் புரியாமல் அல்ல... நல்லா புரியும். கவலை வேண்டாம்... எல்லாம் நன்மைக்கே, சீக்கிரம் உங்க கணவரோடு இணைந்து வாழும் பாக்கியம் கிடைக்கும். கவலையை விடுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அச்சச்சோ வனிதா நம்ம கதைய படிச்சுட்டாங்க பா....

All For The Best

நித்தி ஒரு வாரத்துக்கே அழுகையா?
இதெல்லாம் ரொம்ப ஓஓஓவர்....
இரிங்க இரிங்க எங்க வீட்டுக்காரர்கிட்ட சொல்லி அண்ணாக்கு foreign ல ஒரு வேலை ஏற்பாடு பண்ண சொல்றேன்.

All For The Best

ஹஹஹ.... நான் மட்டும் தான் படிச்சேனா?? உலகமே படிச்சிருக்குமே ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு இப்போ பவர் கட்... அப்பறம் வரேன்... பை :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Shameeha... Adhu parka epdi irukum nu theriyala. But naanga chinna vayasula periya arasamarathadiyila thaan vilayaduvom. Appo andha vidhai pachaya irundhappo parthiruken. Ippo adhai naattu marundhu kadaila epdi vikkiranga nu theriyala. Kaaya vechu thaan vippanga nu nenaikiren. Keattu parunga. Ammila araikiradhu best pa. Nice ah araikkanume?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நாங்க பாட்டுக்கு ஒரு ஓரமா தானே பேசிட்டிருந்தோம்...
எங்க கதைய ஏன் முதல் பக்கத்துல பிரசுரம் பண்ணீங்க?
இட்ஸ் டூ பேட்..... :(

All For The Best

Ingayum powercut... Ha... Ha... Haaaa...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Andha vidhai kulla kutty kutty ah ravai size la neraya kurunai madhiri irukum nu nyabagam. Adhu oru periya nellikkaai vidhaiyai vida konjam chinna size ah irukum. Neenga keattu vaangi thaan parungalen. Kudikka kastama irundha mookka moodi gappunu adichirunga ok? Daily two times kudinga. Innaike start pannidunga. Enaku oru naal avara pirinju irukuradhe kastam. So one week enaku jasthi thaan shameeha.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்