சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 4

சமைத்து அசத்தலாம் பகுதி 3 வெற்றிகரமாக முடித்த தோழிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு பகுதி 4 இன்று முதல் துவங்குவோம்.

வாங்க உங்க ஆதரவை கொடுத்து அசத்துங்க.

இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புக்கள்:

http://www.arusuvai.com/tamil/expert/5754 - Rasiya Nisina - 67
http://www.arusuvai.com/tamil/expert/7 - sumathi_thiru - 29
http://www.arusuvai.com/tamil/expert/19824 - anujai - 12
http://www.arusuvai.com/tamil/expert/23304 - Kalpana Saravanan - 11

இன்று முதல் (அக்டோபர் 7) துவங்கி அக்டோபர் 14 வரை சமைக்கும் குறிப்புகளுடன் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு விரும்பினாலும் சமைக்கலாம். அதிகமாக சமைத்து அசத்தும் தோழிகளுக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

நம்ம கணக்குபிள்ள ஸ்கந்தாவும் தயாரா இருக்காங்க உங்களுக்கு கணக்கு வழங்க அவங்களையும் உற்ச்சாகம் படுத்தி சமைத்து அசத்த வாங்க... .

போட்டி ஆரம்பம்.... :)

உங்களின் ஆதரவுடன் சமைத்து அசத்தலாம் பகுதி - 4 தொடங்குகிறது அனைவரும் போட்டிக்கி தயாரா :)

உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... அசத்துவோம் வாங்க..

அன்புடன்,
லலிதா

லலிதா, பகுதி நான்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்...

ரேவதி.பி குறிப்புகள் ஏற்கனவே பகுதி ஒன்றில் செய்தாச்சுன்னு நினைக்கிறேன்... ஒரு தடவை எதற்கும் செக் செய்துக் கொள்ளுங்கள்... :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

Anbu Lalitha and skandha ku indha pagudhiyayum vetrigaramaga nadatha vazhthukkal... Pangu pera irukum thozhigalukkum kurippugal vazhangi irukum thozhigalukkum vazhthukkal... Lalitha, samaithu asathalam 1 il revathy.p in kurippugal samaichaachu pa... Vera yarayavadhu add pannikonga...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

பிந்து,நித்யா மிக்க நன்றி.... ஆமாங்க ரேவதி.பி குறிப்புகளை நம்ம ஏற்கனவே பகுதி - 1 முடிச்சாச்சு நல்லவேலை ஞாபகம் படித்தியதற்க்கு நன்றி... இப்பொ மாத்திட்டேன் :)

அன்புடன்,
லலிதா

இன்று என் கணக்கு

சுமதி திருவின் - கொண்டைக்கடலை சுண்டல்

கல்பனாவின் - பொட்டுக்கடலை குழம்பு

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சென்றமுறைபோல் அனைவரும் சமைத்து அசத்த என் வாழ்த்துக்கள்.
எனது இன்றைய கணக்கு

கல்பனாவின் -----முட்டைபொடிமாஸ் .
சுமதியின் ---இனிப்புஅவல்
.
சேர்த்துகொள்ளுங்க ஸ்கந்தா..

சுவர்ணா உங்க முதல் கணக்கு ஆரம்பமாயிடுச்சு இனி தொடர வேண்டியதுதான்... வாழ்த்துக்கள். இந்த பகுதியிலும் உங்கள் ஆதரவை தந்ததுர்க்கு நன்றி....

நம்ம செல்வியும் அவங்க கணக்க ஆரம்மிச்சுடாங்க... தினமும் சமைத்து அசத்துங்க... நன்றி மீண்டும் வருக... :)

ஸ்கந்தா உங்க கணக்க ஆரம்பிங்க :)

அன்புடன்,
லலிதா

சுவர்ணா (2): கொண்டைக்கடலை சுண்டல், பொட்டுக்கடலை குழம்பு
செல்வி (2): முட்டைபொடிமாஸ், இனிப்புஅவல்

லலிதா / ஸ்கந்தா,
என் அக்கவுன்ட் ஒப்பன் செய்யுங்கள்....

நான் இன்று கல்பனாவின் தக்காளி சாதம் செய்தேன் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

கல்பனாவின் - புதினா புலாவ் ,ரசகுல்லா.

அனுஜெய் - கோசுமல்லி(செட்டிநாடு)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்