டக் டேப் ரோஸ்

தேதி: October 8, 2012

4
Average: 3.8 (11 votes)

 

டக் டேப் விரும்பிய வண்ணத்தில்
ஸ்டிக் விரும்பியது
கத்தரிக்கோல்

 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
இரண்டு இன்ச் அளவில் டேப்பை வெட்டி கொள்ளவும்.
கீழே ஒட்ட சிறிது இடம் விட்டு ஒரு புறம் முக்கோணமாக மடிக்கவும்.
பிறகு மறுபுறமும் மடித்து ஒட்டிக் கொள்ளவும்.
பின் மேல் பக்க முனையை வளைவாக வெட்டவும். பூவின் இதழ் தயார்.
இதேபோல் தேவையான எண்ணிக்கையில் இதழ்களை தயார் செய்து கொள்ளவும்.
இப்பொழுது குச்சியை நன்றாக பிடித்துக் கொண்டு ஒரு இதழை அதன் மீது சுற்றி ஒட்டவும். நான் க்ரில் ஸ்டிக்கை பயன்படுத்தியுள்ளேன். தென்னை ஓலை குச்சியின் மொத்தமான அடிப்பக்கத்தையும் பயன்படுத்தலாம்.
இது பூவின் உள்பகுதி.
மீண்டும் இன்னொரு இதழை எடுத்து, ஏற்கனவே ஒட்டிய இதழ் முடிந்த பகுதியில் இருந்து தொடங்கி சுற்றி ஒட்டவும்.
அடுத்த இதழையும் அதே போல் ஒட்டவும். கீழே பசை இருக்கும் இடத்தை குச்சியில் பிடித்து அழுத்தி ஒட்டவும். அப்போது தான் இதழ் விரிந்து வரும். பசை உள்ள இடம் போன போக்கில் ஓட்டினால் இதழ் விரிந்து மலர் போல வராமல் மொட்டு போலவே இருக்கும்.
மலரின் வெளிப்புறம் வர வர, இதழின் இரு முனைகளையும் ஒட்டவும். பின் இதழின் அடிப்பகுதியில் தெரியும் இடைவெளியை சரிசெய்து ஒட்டிவிடவும். (அதாவது பசை இருக்கும் இடம் முழுவதையும் அப்படியே சுற்றி ஒட்டாமல் படத்தில் காட்டியபடி இரு முனைகளை ஒட்டியபின் தெரியும் இடைவெளியை சரிசெய்து ஒட்டவும்).
மலரின் முன் பக்கம் படத்தில் உள்ளவாறு இருக்கும். இதழின் முனையை வெட்டியதால் வெள்ளை நிற ஓரங்களுடன் இதழ் அழகாக இருக்கும்.
காம்பு பகுதிக்கு குச்சி முழுவதையும் பச்சை டேப் கொண்டு ஒட்டிவிடவும்.
இரண்டு இன்ச் பச்சை டேப்பை நீளவாக்கில் இரண்டாக மடிக்கவும். இங்கேயும் ஒட்டிக் கொள்ள சிறிது இடம் விடவும்.
படத்தில் காட்டியுள்ளபடி முக்கோணமாக தொடர்ந்து வெட்டிக் கொள்ளவும்.
மலரின் அடிப்பக்கத்தில் காம்பில் படத்தில் காட்டியவாறு அதனை ஒட்டிக் கொள்ளவும்.
பார்க்க உண்மையான ரோஜா போலவே இருக்கும். பூ ஜாடியில் வைத்து அலங்கரிக்கலாம்
சுலபமாக செய்யக் கூட்டிய அழகிய டக் டேப் ரோஸ் (Duck Tape Rose) ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

டக் டேப் ரோஸ் சூப்பரோ சூப்பர். ரொம்பவே அழகாக இருக்கு. வாழ்த்துக்கள்

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

அருமையாக புது விதமாக செய்து இருக்கீங்க,வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வித்தியாசமான ஒரு ரோஸ். நல்லா இருக்கு. கடைசி படம் அழகு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரோஜ மலர் அழகா பண்ணியிருக்கீங்க.
பார்க்க ரம்யமா இருக்கு.
வாழ்த்துக்கள் ரம்யா.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

செம க்யூட்....

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

யார்ரா இது கை வினை பகுதிக்கு செடியில பூத்த ரோஜாவ அனுப்பிறுக்காங்கன்னு நெனச்சேன், அதுக்கு அப்புறம் தான் பேற பார்த்தா டக் டேப் ரோஸ்ன்னு இருக்கு, ரொம்ப அழகா தத்ரூபமா ரியல் ரோஸ் மாதிரியே இருக்கு வாழ்த்துக்கள் ரம்யா....

அட! அட! அட! சூப்பரா இருக்கே ரம்ஸ்.

‍- இமா க்றிஸ்

நிஜ ரோஜா மாதிரியே தத்ரூபமா அழகா இருக்கு வாழ்த்துக்கள்....

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

செய்வதற்கு எளிமையாக,பார்க்க அழகாக இருக்கு.

இதுவும் கடந்து போகும்.

Very nice. ஒரே ரொமாண்டிக்கா இருக்கு......என்ன ரம்யா என்ன சமாசாரம் ஒரே பூவா வருது......தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்தா? God bless you both.நடத்துங்க நடத்துங்க.......

அம்முவின் ஸ்கூல் ப்ராஜெக்ட்டுக்கு அந்த டிஷ்யு ரோஸ் அவங்களே பார்த்து செய்தாங்க. ரொம்ப தாங்க்ஸ்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அழகான ரோஸ் செய்து இருக்கீங்க.. வாழ்த்துக்கள் ரம்யா...

கலை

நன்றி
குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி ;)

கார்த்திகா
ரொம்ப நன்றிங்க ;)

முசி
ரொம்ப நன்றிங்க ;)

வனி
மிக்க நன்றிங்க ;)

அருட்செல்வி
ரொம்ப ரொம்ப நன்றிங்க ;)

அண்ணி
தேங்க்ஸ் அண்ணி ;)

சநீதா
ரொம்ப நன்றிங்க ;)

இமா
ரொம்ப நன்றி ;))

இந்த்ரா
தேங்கஸ்ங்க ;)

லக்ஷ்மி
ரொம்ப நன்றிங்க ;)

லாவி
அதெப்படி .. நீங்க கேஸ் செய்தது உண்மை தான் ;)
அப்படியா? அம்முக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் ;)
ரொம்ப நன்றி

கலா
ரொம்ப நன்றிங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப அழகா இருக்கு..........