நம்ம ஏரியா (அரட்டை அடிக்க மட்டும்)

அந்த ஏரியாவுல பதிவுகள் அதிகமாயிடுச்சி அதனால தோழிகள் சமர்த்தா இங்க வாங்க பாக்கலாம் :)
ரூல் நம்பர் 1: உங்க பதிவு தமிழில் மட்டும் இருக்க வேண்டும்.
** நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம் :)

எல்லாரும் நலமா? :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நலம்.... நீங்க நலமா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

Nan nallaa iruken. Neenga epdi irukeenga? yazhi ku udambu sariyayidicha nu naanum 3 naala keakkuren neenga sollave illa? ungalukku chali epdi iruku akka? lunch saptingala? enna spl innaiku?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

கார்த்திகா... நலம்னு தான் சொல்லனும் :)

நித்யா... சாரிங்க நான் பார்க்கல. நேற்று இரவில் இருந்து சரியான தலை வலி. இன்னைக்கு காலையில் தான் காரணம் சளின்னு தெரிஞ்சுது :) ஒன்னும் முடியல... யாழினி இப்போ பரவாயில்லை. என் தலை வலிக்கு தான் இந்த பசங்க சத்தம் போட்டாலே முடிய மாட்டங்குது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னாச்சு வனி? எப்பவும் ஏதாவது உங்களை படுத்திகிட்டே இருக்கு :(. நல்லா ரெஸ்ட் எடுங்க. குட்டீஸ் நலமா?
தோழீஸ் யாராவது ஃப்லிப்ஸ் ஏர் ஃப்ரையர் வாங்கி உபயோகப் படுத்தி இருக்கீங்களா? எண்ணெயே இல்லாமல் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், அப்பளம், மீன், சிக்கன் எல்லாமே மொறு மொறுன்னு பொரிக்கலாம்னு சொல்றாங்க. விலை கொஞ்சம் அதிகமா தெரியுது. இந்திய மதிப்பில் 15000 ரூபாய் கிட்ட ஆகுது. வாங்கி ஷெல்ஃபில் வைக்கற மாதிரி ஆகிட கூடாதே! தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அஸ்ஸலாமு அலைக்கும் சமீஹா....நல்லா இருக்கிங்களா?
நா இப்போ மாமியார் வீட்டுக்கு வந்திருக்கேன் பா.
அடுத்த வாரம் தான் அம்மா வீட்டுக்கு போவேன் இன்ஷா அல்லாஹ்.
அதுனால தான் சரியா வர முடியல.
அந்த வெப்சைட்ல மருத்துவ பகுதி ல போய் 12 வது பாயின்ட பாருங்க.நா சமீஹா எப்போ குட் நியூஸ் சொல்லுவாங்க நு வெயிட் பண்ணுறேன்.

All For The Best

கவிசிவா, எப்படி இருக்கீங்க? பேசிய ரொம்ப வருஷம் ஆச்சு ;-)

குருவி பத்தி கேட்டு இருந்தீங்களே... நீங்க அதை பத்தி வாதத்தில் சொன்ன போதே பார்த்தேன்... நான் கூகிளில் சர்ச் செய்து பார்த்த வரை கன்க்ளுசிவ் எவிடென்ஸ் இதுவரை இல்லை... பொதுவாக மொபைல் போன் டவர் தான் குருவிகள் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் அப்படின்னு ஒரு கருத்து இருப்பது உண்மை... சிலர் அதை உண்மைன்னு சொல்லி பேப்பர் / ஜர்னல் எல்லாம் போட்டு இருக்காங்க... ஆனால் அஸ்ஸாமில் நடந்த இன்னொரு ஆய்வில், மொபைல் போன் டவருக்கும் குருவிகள் எண்ணிக்கை குறைவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லி இருக்காங்க...

ஆனால் பொதுவா, நான் பார்த்த வரை 'சில' ஆர்டிகில்ஸ் படித்து எனக்கு புரிந்தது, குருவிகள் எண்ணிக்கை குறைவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. மரங்கள் அழித்து வீடுகள் / இண்டஸ்ட்ரீஸ் கட்டுவது, கெமிகல் உரம் பயன்படுத்தி இன்செக்ட்ஸ் அழிப்பது, வீடுகளில் தோட்டங்கள் / மரங்கள் குறைவது.. இதோடு மொபைல் டவர் மற்றும் மொபைல் போன்களில் இருந்து வரும் எலெக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷனும் காரணம் என்று சொல்கிறார்கள்...

காரணம் எது என்பதை கண்டுபிடித்து சீக்கிரமே குருவிகளை அழிவில் இருந்து மீட்டால் சரி தான் :(

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

அட்வான்ஸ்ட் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இந்திரா :) நல்லா என்ஜாய் பண்ணுங்க :)

வனிதா, தலைவலி பரவாயில்லையா? கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுத்து பாருங்க சரி ஆகி விடும்... இதை சொல்லலாமா தெரியலை இருந்தாலும் சொல்றேன் :) முடிந்த அளவில் நேரத்திற்கு தூங்குங்கள்... சளியினால் என்றாலும் கூட, சரியான நேரத்தில் சரியான (அல்லது கூடுதலான :))அளவில் கிடைக்கும் ரெஸ்ட் மிகவும் நல்லது :) டேக் கேர் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

கவிசிவா... ஆமாம் நமக்கு எதாவது வரலன்னா தான் ஆச்சர்யம் ;) பழகி போச்சு இப்படியே.

பிந்து அக்கா... தூக்கமா?? எங்க கிடைக்குது??? தூக்கத்தின் நேரம் குறைஞ்சுகிட்டே போகுது. உண்மை தான்... இரவு தூங்கி எழுந்த பின் காலை வலி குறைஞ்சுது. ரெஸ்ட் எடுக்கனும்... அடுத்த மாதம் மாலே போய் நல்லா ரெஸ்ட் எடுக்கணும் :) என் நேரம்... இங்க இருந்து போகும் போது அம்மா சொல்வாங்க “இங்க தான் வேல வேலன்னு அலஞ்ச, அங்க போயாவது நல்லா ரெஸ்ட் எடு, உடம்பை பார்த்துக்கோ”னு. அங்க இருந்து கிளம்பும் போதும் அவர் சொல்வார் “இங்க தான் பார்ட்டி அது இதுன்னு அலஞ்ச, வீட்டுக்கு போயாவது நல்லா அம்மா கையால சாப்பிட்டு ரெஸ்ட் எடு”ன்னு. மொத்தத்தில் இரண்டு இடத்திலுமே ரெஸ்ட் கிடைக்காது :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரெஸ்ட் கிடைக்கலைன்னா நாமா ரெஸ்ட் எடுக்க டைம் ஒதுக்கி கொள்ள வேண்டியது தான் :) வேணும்னா நீங்களும் கிரிக்கெட் ட்ரை பண்ணி பாருங்க ;-)

வேலை எப்போதும் இருந்துக் கொண்டே தான் இருக்கும்... அதுக்காக எல்லாம் உடம்பை ஸ்பாயில் செஞ்சுக்காதீங்க... டேக் கேர் :)

கவிசிவாவிர்க்கு நீங்கள் சொல்லி இருக்கும் பதிலை பார்த்தால், இந்த லைன் தான் ஞாபகம் வருது,
"உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் தங்கள் குறையை தெய்வத்துக் கிட்ட முறை இடுவாங்க.. அந்த தெய்வமமே கலங்கி நின்னா " ;-)

நீங்க ஒவ்வொரு டிஷ்ஷுக்கும் / சில கேள்விகளுக்கும் தரும் விளக்கம் பார்த்து நீங்க ரொம்ப ஹெல்த் கான்ஷியஸ் பெர்சன்னு நினைச்சேன்... குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு தானா அது எல்லாம்? உங்களையும் கவனித்துக் கொள்ளுங்கள்... பழைய சொல்ல விரும்பினேன்-ல பெண்களுக்குன்னு சில குறிப்புகள் கொடுத்து இருந்தீங்களே அதை மீண்டும் ஒரு தடவை நீங்களும் படியுங்க :)

டேக் கேர்...

எதுவும் தப்பா சொல்லலைன்னு தான நினைக்கிறேன் ;-)

நான் போய் மேடமை ஸ்கூலுக்கு ரெடி பண்றேன்... பை...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மேலும் சில பதிவுகள்