பொடுகு தொல்லை

உதவுங்கள்
பொடுகு தொல்லை தாங்கமுடியல உதவுங்கள் தலை அரிப்புதாங்கள
முகத்திலயும் சிறிதுசிறிதா பொறிபொறிய உள்ளது ................ ஏதாவது வழிசொல்லுங்க.....................

அரை கப் தேங்காய் துருவலுடன் 6 அல்லது 7 சின்ன வெங்காயம் ஒரு தேக்கரண்டி மிளகு சேர்த்து அரைத்து கெட்டியாக பால் எடுத்து ஸ்கால்ப்பில் நன்றாக படும்படி தேய்த்து ஒருமணிநேரம் ஊற விட்டு பின்னர் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து பொடுகு தொல்லை குறைந்த பின்னர் வாரம் ஒரு முறை இத தொடர்ந்து செய்து வர பொடுகுத் தொல்லை மீண்டும் வராது.
சைனஸ் பிரச்சினை அல்லது குளிர் உடம்பு உள்ளவர்கள் உங்கள் உடல் ஏற்றுக் கொள்வதைப் பொறுத்து 10 முதல் 30நிமிடம் வரை ஊறவிடலாம். இந்த முறையில் தலைக்கு ஊற்றும் அன்று டவல், தலயணை உறை எல்லாமே மாற்றி விட்டால் நல்லது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஊட்டி போன்ற மலைப்ரதேசங்களில் நல்ல சுத்தமான தைலம் விற்கும் கடையில் பொடுகு தைலம் வாங்கிக்கிங்க..அதுக்கு ஆங்கிலத்தில் citriodora oil என்று பெயர்..அதனை 1 பங்குக்கு 10 பங்கு தேங்காய் எண்ணையோடு கலந்து தேய்த்து குளித்து வர பொடுகும் மறையும் முடி உதிர்வும் குறையும்..அனுபவத்தில் கண்டது

ஆர்கானிக் ஆப்பில் சிடர் வினிகரை ஒரு கரண்டியும் அதில் நீரை மூன்று கரண்டியும் கலந்து தலைக்கு தேய்த்து அரை மனி நேரம் கழித்து குளித்தால், பொடுகு இருந்த சுவடே தெரியாது. ஆனால் ஆர்கானிக் வினிகராக இருக்க வேண்டும். வாரம் ஒரு முறை பயன்படுத்த ஃபங்கஸ் காணாமல் போயிவிடும்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நன்றி தோழிகலே.உடன் பதில் அளித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...................

by,
AnuGopi,
Be happy and Make others happy........

kadaigalil virkum masala sundal seivathu endru sollungalen please

தோழி நீங்க சொன்ன ஆர்கானிக் ஆப்பில் சீடர் வினிகர் துபாயில கிடைக்குமா எங்கு வாங்கலாம்

எனக்கு அது பற்றி தெரியவில்லை. எல்லா ஹெல்த் ஸ்டோர்களிலும் கிடைக்கும். அமெசானில் ஆர்டர் செய்யலாம்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்