அடி உதை பொறுக்கமுடியவில்லை தோழிகளே உதவுங்கள்.

நான் பெரிதாக படிக்கவில்லை.10ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளேன். என் கணவர் எமெஸ் படித்துள்ளார். என் பெற்றோர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். என் கணவரோ ந்ல்ல வசதியானவர். அவருக்கும் எனக்கும் 12 வயது வித்தியாசம். எனக்கு என் பெற்றோரால் வரதட்சணை எதுவும் செய்ய முடியவில்லை. ஒரு உறவு பெண் மூலமாக எனக்கு திருமணமானது. திருமண வாழ்க்கையில் நான் சந்தோஷமாக இல்லை. எப்போதும் நீ என்ன கொண்டு வந்த, வழி இல்லாதவளே. போடி உங்க வீட்டுக்கு, நீ சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டாதான் புத்தி வரும் சொல்லி என் தாலிய கழட்டி வீட்டுக்கு துரத்திடுவாரு. நானும் பொறுத்து பார்த்துவிட்டேன், எனக்கு திருமண வாழ்க்கை நரகமாகதான் இருக்கு.நான் படிக்காததால் எனக்கு அவரை சட்ட ரீதியாக எப்படி அணுகுவதுனு தெரியவில்லை. என்னால் அடி உதை பொறுக்க முடியாமல்தான். இப்படி உங்களிடம் கேட்கிறேன். உதவுங்கள்.

கேட்கவே கஷ்டமா இருக்கு பா... என்ன படிச்சு என்ன பிரயோஜனம்... பொண்டாட்டியை அடிக்கிற அளவுக்கு தான் அவங்க அறிவு இருக்கா னு கோவம் வருது பா... உங்க கணவரை திட்டுறதா நினைக்க வேண்டாம்... வசதி இருக்கும் போதே மனைவி வீட்டாரின் பணத்தில் வாழ நினைக்கிறார்களே... கொடுமை தான்.. இதற்கான தீர்வை தோழிகள் வந்து கூறுவார்கள் பா...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நன்றி கார்த்திகா. எனக்கு அந்த உறவுகார பெண் மேல்தான் கோவம். ஏன்னா அவங்கதான் பணத்துக்காக என்னை இப்படி பண்ணிட்டாங்க. நான் சிவப்பா அழகா இருப்பேன். என் கணவர் கருப்பா குண்டா இருப்பார். ஆரம்பத்தில் அவரை பிடிக்கலைனாலும். இதுதான் நம்ம வாழ்க்கைனு வாழ ஆரம்பிச்சேன். ஆனா எனக்கு கிடைப்பதோ அடி உதைதான்.

Sujitha... Padikkum podhe unga kanavar mela romba aathirama varudhu pa. Neenga endha oor nu theriyala. Enga irundha enna unga area la magalir kaaval nilayam irundha illaina normal kaaval nilayathula poi unga kanavar panra attoozhiyam pathi sollunga. avanga parthupanga. varadhatchanai keatpadhu sattapadi kutram pa. neenga ezhudhi kudukka vendam just vandhu miratta sollunga unga kanavara. appavum vazhikku varala na written complaint kudunga. okya? dont worry sujitha...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

இந்த காலத்திலும் இது போன்றவர்கள் இருக்கிறார்களா? நினைக்கவே கஷ்டமாக உள்ளது. உங்கள் வீட்டாரிடம் சொல்லி கண்டிக்க சொல்லுங்கள். இல்லையேல் அவரை அன்பால் திருத்தப்பாருங்கள். வீட்டிர்க்கு யாராவது வந்தால் அவரை பற்றி பெருமையாக பேசுங்கள் எனக்கு கிடைத்த கண்வன் போல் யாருக்கும் வாய்க்க மாட்டார் என்று சொல்லுங்கள் பிறகு என்ன செய்கிறார் என்று பாருங்கள்

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

சுஜிதா! இந்த அடி உதை எப்போது இருந்து ஆரம்பித்தது? திருமணம் ஆன உடனேயே இப்படித்தானா? அல்லது சில காலம் சென்ற பின்னரா? ஆரம்பத்தில் இருந்தே உங்களுடன் வெறுப்பாகத்தான் இருந்தாரா அல்லது உங்களுக்கு ஆரம்பத்தில் விருப்பம் இல்லை என்பதை அவர் உணர்ந்த பின்பா? எல்லாவற்றையும் யோசியுங்கள். உங்கள் மீது ஏதேனும் தவறு இருக்கிறதா என்பதையும் யோசியுங்கள். நீங்கள் ஏதும் அவரை காயப்படுத்தும்படி நடந்திருந்தால் மனதார அவரிடம் மன்னிப்பு கேளுங்கள். இல்லை தவறெல்லாம் அவர் மீதுதான் உங்கள் மீது தவறு ஏதும் இல்லை என்றால் சட்டத்தை அணுகுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வருத்தபடாதீர்கள் சுஜிதா...
உங்கள் கணவருக்கு தாழ்வு மனப்பான்மையால் தான் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று தோன்றுகிறது...
உங்களுக்கு குழந்தை இருக்கிறதா?
நீங்கள் படிக்கவில்லை என்று வேறு கூறுகிறீர்கள்...குழந்தை இருந்தால் அவர்களின் எதிர் காலம் எல்லாம் யோசியுங்கள்..
குடும்ப நண்பர் அல்லது உங்கள் கணவர் மிகவும் மரியாதை வைத்து இருக்கும் உறவினர் இவர்களை வைத்து ஒரு முறை நீங்கள் பேசி பாருங்கள்.
அவரது செயல் உங்கள் மனதை அவரை விட்டு விலகும் அளவிற்க்கு வெறுக்கதக்க விதமாக மாற்றி இருக்கிறது என்பதை அவர்கள் மூலம் தெரிய படுத்துங்கள்...அப்பொழுதும் அவர் உணராமல் பழையபடி இருந்தால் நீங்கள் தயங்காமல் சட்டத்தின் உதவியை நாடுஙள்..
இனி வரும் வாழ்க்கை உங்கள் மனதிறிக்கு சந்தோஷம் தரும் வகையில் அமைய இறைவன் துணை புரிவான்.

நான் என்ன நினைக்கிறேன் என்றால் உங்கள் மனம் அமைதியாகும் வரை குறைந்தது 15நாள் இதைப்பற்றி யோசிக்கமல் இருங்கள். வீட்டுக்கு அருகில் உள்ள கோவில்க்கு செல்லுங்கள் கடவுளிடம் வேண்டுங்கள் என் கணவர் மனம் மாறி என்னை அழைத்து செல்லவேண்டும் என நினைத்து வேண்டுங்கள்.கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

15 நாள் கழித்து யார் பேசினால் உங்கள் கணவர் கேட்பாரோ அவரைவைத்து பேசுங்கள்.அவருக்கு என்னபிரச்சனை என் இப்படி நடக்கிறார்? என்பதை விழக்க மாக கேளுங்கள் மீண்டும் இப்படி நடக்கமாட்டன் என்ற உத்தர வாதத்தில் மட்டும் நீங்கள் மறுபடியும் உங்கள் வாழ்க்கையை தொடருங்கள்...........................

by,
AnuGopi,
Be happy and Make others happy........

What happen Sujithaaaaaaaaaa

கவலைபடாதீங்க சுஜிதா உங்களுக்காக நாங்க இருக்கிறோம்.
உங்களுக்கு நேரிடையாக எங்களால் உதவ முடியவில்லை என்றாலும் நாங்கள் எல்லோரும் உங்கள் திருமண வாழ்க்கை சந்தோசமாக அமைய நாங்கள் இறைவனிடம் மனதார பிராத்திக்கிறோம்.

எதுவாக இருந்தாலும் நல்லா பொருமையா பல முறை யோசித்து முடிவெடுங்கள்.
நீங்கள் எடுக்கும் முடிவால் உங்கள் கணவனின் கோபம் இன்னும் அதிகரிக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.

இறைவன் உங்கள் கணவனின் குணத்தை மாற்றுவான்.....

SSaifudeen:)

மேலும் சில பதிவுகள்