டிஷ்யூ பேப்பர் பூக்கள்

தேதி: October 18, 2012

5
Average: 4.3 (18 votes)

 

டிஷ்யூ பேப்பர் - மஞ்சள் / பிங்க் மற்றும் வெள்ளை
க்ளூ
கத்தரிக்கோல்
பென்சில்
மரக் குச்சி

 

தேவையான பொருட்களை தயாராக வைக்கவும். நல்ல தரமான டிஷ்யூ பேப்பராக இருப்பது அவசியம். மரக் குச்சியில் தூசு மற்றும் பூச்சிகள் இல்லாமல் இருக்க நீரில் அலசி காய வைத்து எடுத்து வைக்கவும்.
முதலில் டிஷ்யூ பேப்பரை விரிக்காமல் அப்படியே 4 ஆக மடிக்கவும்.
மடித்தபின் மேலே பென்சிலால் 5 அல்லது 6 இதழ்கள் கொண்ட பூ வரையவும்.
அதை வெட்டி எடுக்கவும். இதழ்கள் ஒரே சீராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இதே போல் இன்னொரு நிறத்திலும் வெட்டி எடுக்கவும். ஒவ்வொரு டிஷ்யூ பேப்பரிலும் 3 பூக்கள் வரை செய்யலாம். ஒரு பூவுக்கு ஒரு கலரில் 3 - 4 லேயர் இருந்தால் போதுமானது.
சற்று டார்க் நிறத்தில் உள்ள இதழை முதலில் எடுத்து நடுவில் சிறிது க்ளூ தடவிக் கொள்ளவும்.
இதன் மேல் லைட் கலர் பேப்பர் இதழை வைக்கவும். அதன் மேலும் க்ளூ தடவிக் கொள்ளவும்.
இப்போது நடு பகுதியை சேர்த்து பிடித்து ஒரு முறை லேசாக முறுக்கி, பின் லேயராக டிஷ்யூ பேப்பரை மெல்ல எடுத்து விடவும்.
தேவையான எண்ணிக்கையில் பூக்களை செய்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது மரக் குச்சியில் எங்கே பூக்கள் வைத்தால் பொருத்தமாக இருக்குமோ அங்கே க்ளூ வைத்து பூவை ஒட்டவும்.
பூக்கள் ஒரே பக்கமாக பார்த்து இருக்காமல் எல்லா பக்கமும் பார்ப்பது போல் மாற்றி மாற்றி ஒட்ட வேண்டும். அப்போது தான் இயற்கையான தோற்றம் கிடைக்கும்.
சிறிதும் பெரிதுமாக பூக்கள் செய்து ஒட்டினால் இன்னும் அழகாக இருக்கும். இதில் மேல் பக்கங்களில் சிறிய பூக்களும் அடி பக்கங்களில் பெரிய பூக்களும் ஒட்டி இருக்கிறேன். சிறிய பூக்களை டார்க்காக காட்ட வெறும் மஞ்சள் நிறம் மட்டுமே பயன்படுத்தி இருக்கிறேன்.
மஞ்சள் நிறத்தோடு பிங்க் நிறத்திலும் பூக்கள் செய்து குச்சியில் ஒட்டியுள்ளேன். இதனை வாய் குறுகலாக உள்ள பூ ஜாடியில் வைத்து அலங்கரிக்கலாம். (குச்சி என்பதால் ஆடாமல் இருக்க வாய் குறுகியுள்ள பாட்டில்களில் வைத்தால் வசதியாக இருக்கும். இதனை நான் ஒரு கண்ணாடியிலான கூல் ட்ரிங்க்ஸ் பாட்டிலை சுத்தம் செய்து அதில் வைத்திருக்கிறேன்) அழகான சுலபமாக செய்ய கூடிய பூக்கள் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பரோ சூப்பர்!!! முகப்பில் பார்த்ததும் நீங்க தான்னு கெஸ் பண்ணினேன்.. நீங்களே தான்.. ரொம்ப நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்!!! அக்கா... உங்களுக்கு எல்லா Craft Works - ம் தெரியுமா? Fur Material - ல் Toys எல்லாம் செய்வீங்களா? செய்தால் எனக்காக அறுசுவைக்கு அனுப்புங்க அக்கா...

கலை

அழகான பூங்கொத்து!.கண்ணுக்கு அழகான,செய்வதற்கு எளிதான அருமையான கைவேலை..நன்றி வனிதா

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு அந்த பிங்க் மஞ்சள் பூக்கள் அப்படியே கண்கொள்ளா அழகு அசத்தலா இருக்கு வனிதா டிஷ்யூ பேப்பர் வச்சு ரொம்ப ஈஸியா இருக்குப்பா, ட்ரை பண்ண போறேன்

வனி

ரொம்ப அழகா இருக்கு.. கலர் காம்பினேஷன் அருமை போங்க..
வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

paartha udane seinum pola irukku, avlo alaga pannirukkinga madam. tamila maathi type panna therila, athan ippadi type panni irukken. sorry

ANBAE SIVAM

கைவினையை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. எனக்கு ஒன்னும் தெரியாதுங்க... இதுவரை இங்க அனுப்பியவை கூட அது தான் முதல் முயற்சி. எதாவது பார்த்தா கொஞ்சம் கவனிச்சு பார்ப்பேன், எப்படி செய்திருக்காங்கன்னு... ட்ரை பண்ணுவேன் அவ்வளவு தான். ஃபர் மெட்டீரியல் டாய்ஸ் நான் முன்பே அனுப்ப நினைச்சேன்... முடியாம போச்சு. தங்கை செய்வா அதெல்லாம். நான் அனுப்ப பார்க்கிறேன் கலை கட்டாயம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அவசியம் ட்ரை பண்ணி பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செய்து பார்த்து எப்படி வந்ததுன்னு சொல்லுங்க உமா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. பரவாயில்லைங்க... கொஞ்சம் கொஞ்சமா தமிழ் தட்ட பழகிடுவீங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கண்கவர் பூக்கள் கொள்ளை அழகு,வனி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பூக்கள் கொள்ளை அழகு...!!!

நிச்சயம் செய்து பார்க்கிறேன்... நன்றாக வந்தால் படம் அனுப்புகிறன்.. ;)

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அவசியம் செய்து அவசியம் படம் அனுப்புங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hello Madame
Very nice and all your craft work realy superbbb

ரொம்ப ஈசியாவும் அழகாவும் இருக்கு வனி.நான் ஒண்ணு லீவுல அனுப்பிட்டு உங்களுக்கு மெசேஜ் பண்ணுரேன் பா

க்ராஃப் ஒண்ணு வரைந்து ஃபோட்டோ எடுக்கணும் அதான் லேட் வனி

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அனுப்புங்கோ அனுப்புங்கோ... எவ்வளவு லேட் ஆனாலும் நாங்க வெயிட் பண்ணுவோம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குட்டீஸ் கூட செய்ய எளிதான பூக்கள்.
வாழ்த்துக்கள் வனி

என்றும் அன்புடன்,
கவிதா

கலக்குது வனி. அதுவும் முகப்பில் இருக்கும் படம் சூப்பர்.

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா