தேங்காய் பூ ஸ்வீட்

தேதி: September 8, 2006

பரிமாறும் அளவு: பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய் - ஒன்று
சீனி - அரை கிலோ
விரும்பிய கலர் பவுடர் - அரை தேக்கரண்டி
வெனிலா - ஒரு தேக்கரண்டி
பட்டர் - ஒரு மேசைக்கரண்டி


 

தேங்காயை துருவி வைக்கவும்.
சீனியை அரை கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
சீனி நன்றாக கரைந்து கொதி வந்ததும் கலரிங்கை விடவும்.
பின்பு தேங்காய் பூவையும் போட்டு கிளறவும்.
பின்பு பட்டரை போட்டு கிளறி, தாச்சியை விட்டு திரண்டு வரும் போது வெனிலாவையும் விட்டு சேர்த்து ஒரு பட்டர் பூசிய தட்டில் கொட்டி அழுத்தி சூட்டுடனே விரும்பிய வடிவங்களில் வெட்டி வைத்து பரிமாறலாம்.


வெனிலாவின் அளவை விருப்பதிற்கு ஏற்ப கூட்டி குறைக்கலாம். பட்டர் தேவை என்றால் இன்னும் கொஞ்சம் சேர்த்து கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

தேங்காய்ப் பூ ஸ்வீட் செய்தோம். நன்றாக இருந்தது.

அன்புடன்

சீதாலஷ்மி

ஹலோ வஜிதா, தேங்காய் பூ ஸ்வீட் செய்தேன். ஈசியாகவும் ருசியாகவும் இருந்தது. நன்றி.