ஹாட் & சோர் பாஸ்தா

தேதி: October 20, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (5 votes)

 

பாஸ்தா - ஒரு பாக்கெட்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளாகாய் - 2
குடைமிளகாய் - பாதி
கேரட் - ஒன்று
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
முட்டை - 2
தயிர் - கால் கப்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி


 

தண்ணீரில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கொதிக்க வைத்து பாஸ்தாவை சேர்த்து வெந்ததும் வடித்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும்..
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி, கேரட், குடை மிளகாய் சேர்க்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்..
அதில் தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
தூள் வாசம் போனதும் தயிர் சேர்க்கவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி கொத்தி விடவும்.
வெந்த பாஸ்தாவை அதில் கலந்து நன்கு பிரட்டி விடவும்.
சுவையான ஹாட் & சோர் பாஸ்தா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அஸ்ஸலாமு அலைக்கும் ஷமிலா பாஸ்தா ரொம்ப நல்லா இருக்கு.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப டேஸ்ட் டா இருக்கும் நு நெனைக்க பாக்கவே ரொம்ப அழகா இருக்கு.

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

Shameela... Nalla tasty kurippu ma... Vazhthukkal:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

எனது குறிப்பினை வெளியிட்ட அட்மின் குழுவிற்க்கு மனமார்ந்த நன்றி....

வலைக்கும் சலாம் ஹலிலா...
வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றி மா....

வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றி நித்தி...

வாழ்த்திற்க்கு மிக்க நன்றி லக்ஷ்மி....
நல்லா இருக்கும் மா...அவசியம் செஞ்சு பாருங்க...

ஹாய் ஷமீலா அக்கா..
உங்க கூட முதல் தடவையா இப்பொழுது தான் பேசுகிறேன்.அட அட அடடா.. என்னமா கலர் புல்லா இருக்கு. பார்க்கும் போதே கண்ணை பறிக்குது ஷமீலா அக்கா.
எனக்கும் சமையலுக்கும் ரொம்ப தூரம். பட் அம்மாவே செஞ்சு தர சொல்லி கண்டிப்பா டேஸ்ட் பன்னி பார்க்கணும்.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

டேஸ்டியான குறிப்பு. நானும் இப்படி தான் செய்வேன் தயிர் மட்டும் சேர்க்கமாட்டேன்.அடுத்த தடவ பண்ணும் போது தயிர் சேர்த்து செஞ்சி பாக்குறேன்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்துக்கு நன்றி லாவண்யா....செஞ்சு சாப்பிட்டு எப்படி இருந்துச்சுன்னு மறக்காம சொல்லுங்க.....

வாழ்த்துக்கு நன்றி லாவண்யா....செஞ்சு சாப்பிட்டு எப்படி இருந்துச்சுன்னு மறக்காம சொல்லுங்க.....

யம்மி பாஸ்தா...

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஷமீலா,

சுவையான குறிப்பு..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வாழ்த்துக்கு நன்றி கவிதா...

இந்த முறையில ட்ரை பண்ணி பாருங்க இந்திரா...நல்லா இருக்கும்....

மிக்க நன்றி முசி...

i tried it today fro breakfast...came out very well...thanks for the nice recipe...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

ஷமீ நல்ல குறிப்பு.
காய் சாப்பிடமாட்டேனு அடம் பிடிக்கிற குழந்தைகள் கூட கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க.
வாழ்த்துக்கள் ஷமீ(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

செய்து பார்த்து மறக்காம பதிவிட்டதற்க்கு ரொம்ப நன்றி ராஜி....

ரொம்ப நன்றி அருட்செல்வி...

pastha recip super. i il try it and tell u

I tried this pasta today, came out well, taste was awesome. My husband praised me a lot. Thanks for ur receive.