பீர்க்கங்காய் குழம்பு

தேதி: October 22, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

 

பாசிப்பயறு - 250 கிராம்
பீர்க்கங்காய் - ஒன்று
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - 2 இனுக்கு
பூண்டு - 6 பல்
சீரகம் - 2 தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
கடுகு, கடலைப்பருப்பு, எண்ணெய் - தாளிக்க


 

தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோலுரித்து வைக்கவும். பச்சைமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, சீரகம், தனியா ஆகியவற்றை எடுத்து வைக்கவும்.
பீர்க்கங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைபயறை மிதமான தீயில் மணம் வரும் வரை வறுத்து சிறிது ஆறவிட்டு தண்ணீரில் நன்கு கழுவி வைக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சீரகம், தனியா ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
வதங்கியவுடன் தக்காளி மற்றும் பீர்க்கங்காய் போட்டு ஒருமுறை கிளறி விடவும்.
பிறகு கழுவிய பச்சைபயறை போட்டு 750 மி.லி தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 6 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
ஆவி அடங்கியவுடன் நன்றாக மத்தினால் மசித்துக் கொள்ளவும். கெட்டியாக இருந்தால் நீர் சேர்த்து கொதிக்க விடலாம். அடி்ப்பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
சுவையான பீர்க்கங்காய் குழம்பு தயார். சாதம், சப்பாத்திக்கு ஏற்றது. நெய் விட்டு சாப்பிடலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குழம்பு கண்னு, மூக்கு, வாயோட சூப்பரா சிரிக்குது :) நல்லா இருக்கு குறிப்பும் படமும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வனீ உங்களோட பாராட்டிற்கு மிக்க நன்றி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஆஹா எங்க அம்மா இதேமாதிரிதான் செய்வாங்க. அருமையான சுவை.உங்க முன்வைப்பு(Presentation) கலக்கல்.ஹையோ நான் சின்ன வெங்காயத்தை நினைத்து ஏங்குகிறேன்.வாழ்த்துக்கள்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

அருட்செல்வி அருமையான குறிப்பு வாழ்த்துக்கள்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ப்ரசண்டேஷன் கலக்குறீங்க செல்வி....
குறிப்பும் எளிமையா இருக்கு...ஒரு நாள் செஞ்சுட வேண்டியது தான்....

Kuzhambu and presentation azhagu:) Enaku oru doubt... paasi payarum pachai payarum onna pa? Paasi payaru na pachai payara, thol remove panni udaichu irupanga adhuthaane? Neenga use panni irukuradhu pachai payaru. Correct ah? Anyway pachai payaru vechu kuzhambu ippo thaan first time parkuren. Vazhthukkal selvi...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மிக்க நன்றி(:- சின்ன வெங்காய்த்திற்கு பதிலாக பெரிய வெங்காயம் போடலாம்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மிக்க நன்றி ஹலீ(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மிக்க நன்றி ஷமீ(:- சமைச்சு பார்த்துட்டு சொல்லுங்க.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மிக்க நன்றி நித்தி(:- நீங்க சொன்னது எல்லாமே சரிதான். கண்டிப்பா சமைச்சு பாருங்க.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருமையாக செய்து இருக்கிங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி முசி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருட்செல்வி,

கண்சிமிட்டும் குழம்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

மிக்க நன்றி கவி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சத்தான சுவையான குழம்பு... உங்க ப்ரசண்டேசன் அழகு... வாழ்த்துக்கள்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

கேள்விச் செல்வி, பீர்க்கங்காய் செய்முறை வித்தியாசமாக உள்ளது. பீர்க்கங்காயை தோல் நீக்காமல் கூட செய்யலாமா? போட்டோவில் தோல் எடுக்காதது மாதிரி தெரிந்தது. முழு பாசிப்பயிறின் சுவையோடு நன்றாக இருக்கும் என நம்புகிறேன் :) என்னால் இங்கே செய்து பார்க்க முடியாது. எனக்கு பீர்க்கங்காய் அற்புதமாக மட்டுமே கிடைக்கும் அடிக்கடி கிடைக்காதென்பதால். நல்ல குறிப்பிற்கு நன்றிகளும், வாழ்த்துக்களும் :)

கடைசி ஒரு கேள்வி.. கடைசி போட்டோவில் பீர்க்கங்காய் குழம்பில் இருப்பது யார் முகம்? ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பதிவிற்கு மிக்க நன்றி(:- மிக மெல்லியதாக தோல் எடுத்தால் போதுமானது. நார்ச்சத்து மிகுந்தது பீர்க்கங்காய், மற்றும் தோலுடன் கூடிய பாசிப்பயறு. கண்டிப்பாக கிடைக்கும் பொழுது செய்து பாருங்கள். உங்களோட பாராட்டும் வாழ்த்தும் ஒரு பாட்டில் டானிக் குடிச்சமாதிரி இருக்கு போங்கோ!

அந்த முகம் ஆப்பிரிக்க காட்டுப்புலியின் முகம்!!!!!!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உங்க பதிவிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி இந்து(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருட்செல்வி,

வழக்கமா பயறு கடைந்தால் பீர்க்கங்காய் பொரியல்தான் செய்வேன்..இரண்டையும் சேர்த்த மாதிரி இந்த குழம்பை பார்த்ததும் செய்து பார்க்கவே பீர்க்கங்காய் வாங்கினேன்...இன்று செய்தேன்...சூப்பரா இருந்தது....குறிப்புக்கு நன்றி....

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

ராஜி, சமைச்சு பார்த்துட்டு பதிவும் இட்ட உங்களுக்கு மிக்க நன்றி (:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

Hi selvi mam, I tried this recipient today very tasty and my hubby loved it most,thank u for giving such a tasty recipient

பொதுவாக பாசிப் பருப்பில் தான் செய்வது வழக்கம் இந்த முறையில் பயறு உபயோகித்து குழம்பு செய்தேன்,சுவையும் மணமும் அருமையாக இருந்தது.உன்களின் குறிப்புகள் சுலபமாகவும் எளிதாகவும் உள்ளது.
நன்றி

தங்களுடைய‌ பீர்க்கங்காய் குழம்பு ரெசிபி செய்தேன். சுவையாக‌ இருந்தது.
நன்றி சிஸ்டர்

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!