கிளிக் கூண்டு

தேதி: October 25, 2012

5
Average: 4.6 (10 votes)

 

உல்லன் நூல்
சம அளவுள்ள வளையல்கள் - இரண்டு
கனமான அட்டை
கிளாஸ் டியூப்ஸ்
பிஷ் நெட் ஒயர்
கோல்டன் மணி

 

கிளிக் கூண்டு செய்வதற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
உல்லன் நூலை வளையலில் முடிச்சுப் போட்டு நெருக்கமாக சுற்றி கடைசியில் ஒரு முடிச்சுப் போட்டு நூலை நறுக்கி விடவும்.
இதே போல் மற்றொரு வளையலிலும் சுற்றி வைத்துக் கொள்ளவும்.
ஒரு குறிப்பிட்ட அளவு நீளத்திற்கு உல்லன் நூலை 8 துண்டுகள் வெட்டிக் கொள்ளவும். வெட்டிய நூல் துண்டுகளை சமமாக மடித்து சம இடைவெளியில் வளையலில் கட்டவும். நூல் கீழ்நோக்கி இருக்க வேண்டும். கட்டிய பிறகு 16 நூல் துண்டுகள் இருக்கும்.
கிளாஸ் டியூப்பை 1.5 செ.மீ அளவிற்கு வெட்டிக் கொள்ளவும் (80 துண்டுகள் தேவைப்படும்)
வளையலில் கட்டப்பட்ட ஒவ்வொரு நூலிலும் வெட்டிய கிளாஸ் டியூப்பை கோர்க்கவும்.
ஒரு முடிச்சின் கீழ் 2 கிளாஸ் டியூப்கள் இருக்கும். இதில் இரண்டாவது டியூப்பை அடுத்து உள்ள முடிச்சின் முதல் டியூப்போடு சேர்த்து இரண்டு முடிச்சுகள் போடவும் கோர்க்கப்பட்ட எல்லா டியூப்களையும் இதேபோல் முடிச்சுப் போட்டு சேர்க்கவும்.
இதேபோல் அடுத்தடுத்த வரிகளிலும் கிளாஸ் டியூப் கோர்த்து முடிச்சுப் போடவும்.
மொத்தம் 5 வரிகளுக்கு கிளாஸ் டியூப் கோர்த்து முடிச்சுப் போடவேண்டும்.
கீழ்பக்கம் தொங்கும் நூலை முதல் வளையலில் சம இடைவெளியில் கட்டியது போல மற்றொரு வளையலில் கட்டவும்.
இப்பொழுது 4 கிளாஸ் டியூப்களை சரிபாதியாக வெட்டி கீழே தொங்கும் நூலில் கோர்க்கவும். (2 நூல்களுக்கு ஒரு ட்யூப் என்று 8 டியூப்கள்).
டியூப் கோர்த்து மீதமுள்ள ஒவ்வொரு நூலையும் எதிர்பக்கமுள்ள நூலோடு சேர்த்து முடிச்சுப் போடவும்.
எல்லா நூலையும் முடிச்சுப் போட்டு இணைக்கவும். இந்த முடிச்சுள்ள பகுதி தான் கூண்டின் மேல் பகுதி.
பிஷ் நெட் ஒயரில் ஒரு கிளி செய்து கொள்ளவும். கிளியில் தலைப்பக்கத்தில் நூல் கோர்த்து கட்டி அந்த நூலில் ஒரு கோல்டன் மணி கோர்த்து 2 செ.மீ அளவிற்கு கிளாஸ் டியூப் கோர்க்கவும். இதேபோல் இன்னொரு கோல்டன் மணி மற்றும் கிளாஸ் டியூப் கோர்த்து கடைசியில் ஒரு கோல்டன் மணி சேர்த்து முடிச்சுப் போடவும்.
இப்பொழுது கிளியை கூண்டின் உள் பக்கமாக விட்டு கூண்டின் மேல் பகுதியில் கட்டி விடவும்.
மேல் பகுதியிலுள்ள நூலை சடை பின்னல் போல் பின்னி முடிச்சுப் போடவும். நூலை சமமாக வெட்டிவிடவும் (மேலே மாட்டி வைப்பதற்கு வளையம் போல இருக்கும்).
கூண்டின் அடிப்பக்கத்திற்கு கனமான அட்டையை வளையலின் அளவிற்கு வட்டமாக வெட்டிக் கொள்ளவும். (விரும்பினால் அட்டையின் மேல் மற்றும் அடிப்பகுதியில் நுலின் நிறத்தில் ஸ்கெட்ச் (அ) மார்க்கர் கொண்டு வண்ணம் அடித்துக் கொள்ளவும்). அந்த அட்டையை கூண்டின் அடிப்பகுதியில் ஒட்டி காய விடவும்.
அழகிய கிளிக் கூண்டு தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அருமை அருமை... ரொம்ப கியூட்டா இருக்கு :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப அழகான கிளிக்கூண்டு.வாழ்த்துக்கள் சுபத்ரா.

இதுவும் கடந்து போகும்.

romba azhaga pannirukinga. superb ah irukkudhu. time kidaikum podhu seidhu parkiren... vazhthukkal....

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

very nice and cute.

அழகா செய்து இருக்கிங்க... நல்ல ஐடியா.... உங்கள் கலைப்பயணம் தொடர வாழ்த்துக்கள்....

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

ரொம்ப அழகா இருக்கு சுபத்ரா. பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

சுபத்ரா,
கிரேட்!!!
வாழ்த்துக்கள்+பாராட்டுக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

very nice.

BEUTI FUL
NEENGA MENMELUM VALRA EN ANBA VALLKUKALI SAMRPIKREAN