சுலப கேரட் அல்வா

தேதி: September 9, 2006

பரிமாறும் அளவு: ஐந்து நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேரட் துருவியது- 2கப்
சர்க்கரை- 1கப்
பால்- 1கப்
முந்திரி பருப்பு- 20
பால்பௌடர்- 1கப்
நெய்- 50கிராம்
ஏலக்காய் பௌடர்- 1/2ஸ்பூன்


 

பால்,கேரட் துருவல் இவற்றை ஒன்றாக கலந்து குக்கரில் ஒரு விசில் வரும்வரை அடுப்பில் வைக்கவும்.

விசில் வந்ததும் இறக்கி வாணலியில் மாற்றி பால் சுண்டும் வரை மிதமான தீயில் வைத்து கிளறவும்.

பால் வற்றியதும் சக்கரை சேர்த்துக் கிளறவும்.

நீர் வற்றி சுருள வரும்போது பால் பௌடரை தூவி சற்று கிளறி பின் நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து இறக்கி ஏலப்பொடி தூவவும்.

சுவையான கேரட் அல்வா ரெடி


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் பானுகனி! இன்று உங்கள் கேரட் அல்வா செய்து பார்த்தேன். செய்வது மிகவும் சுலபமாக இருந்தது. சுவையும் அபாரம். நல்லதொரு சிற்றுண்டி, நன்றி

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இன்றுதான் பால்பவுடர்சேர்த்து செய்தேன் வித்தியாசமாக இருந்தது
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்