காளான் குருமா

தேதி: October 30, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (7 votes)

 

காளான் - 200 கிராம்
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி - 2 பெரியது
பச்சை மிளகாய் - 3
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பட்டை, லவங்கம் - தலா 2
மல்லித் தழை - சிறிது
உப்பு - தேவைக்கு


 

வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி வைக்கவும். காளானை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்.
எண்ணெயை காய வைத்து பட்டை, லவங்கம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
பிறகு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியவுடன் காளான் சேர்த்து வதக்கவும்.
அதில் தூள் வகைகளை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.
வெந்ததும் இறக்கி மல்லித் தழை தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் சமீனா
முதல் குறிப்பே அசத்தலா இருக்கு...வாழ்த்துக்கள்....
காளான் எத்தனை ரெசிபி கிடைச்சாலும் செஞ்சு பார்ப்பேன்....

சூப்பருங்க :) நல்ல குறிப்பு. கலக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பு அருமையாக இருக்கு,வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

assalamu alaikum shameena unga kaalan kurumava pressure cooker la pannalana? yethuna visil vakkanum?

அஸ்ஸலாமு அலைக்கும் சமினா. முதல் குறிப்பே அருமையா இருக்கு. இன்னும் பல நூறு குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

பாக்கும் போதே சாப்டனும்னு தோனுது.. ரொம்ப அழகா இருக்கு

தானத்தில் சிறந்த தானம்
கண் தானம்

என் குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு முதல் நன்றி.
தோழிகள் அனைவருக்கும் மிக்க நன்றி.
குக்கரில் ஒரு சத்தம் விட்டாலே போதும்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

ஷமீனா நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஷமீனா,

எளிமையான குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா