முறுக்கு பதத்துவிட்டால்???

முறுக்கு பதத்துவிட்டால்???

-

Lol

30செகண்ட்ஸ் மைக்ரோவேவில் வச்சு பாருங்க. சரியா வரும்னு நினைக்கிறேன். நான் செய்ததில்லை. எங்கேயோ படித்த ஞாபகம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஒருவர் சந்தேகம் கேட்டால் பதில் தெரிந்தால் சொல்லுங்கள்....இல்லையெனில் மற்ற தோழிகள் வந்து சொல்வார்கள்....
இப்படி முகத்தில் அடிப்பது போல் குப்பையில் போடவும் என்று எல்லாம் பதில் அளித்து கேள்வி கேட்பவரை கிண்டல் செய்ய வேண்டாம்....
நான் சொல்வது தவறாக இருந்தால் தோழிகள் மன்னிக்கவும்...

எங்க ஊரில் நாங்கள் முறுக்கை ஒடித்து ஒரு டம்ளரில் போட்டு அத்துடன் கருப்பட்டி காப்பி ஊற்றி முறுக்கு காபியில் ஊறியவுடன் ஒரு ஸ்பூன் கொண்டு காபி குடித்துக் கொண்டே முறுக்கையும் சாப்பிடுவோம் ,மிகவும் சுவையாக இருக்கும் , இன்ஸ்ஸன்ட் காபிக்கும் நன்றாகத்தான் இருக்கும். வேண்டுமென்றால் முயர்ச்சித்துப் பாருங்கள் ,முறுக்கு வீணாகுவதை தவிர்க்கலாம்.

அது சரி என்னங்க அது பதுத்துவிடுறது...காரிபோவதா?

ஈரப்பதமா ஆகிவிடுவது. நமத்து போவது. நானும் காபியில் போட்டு சாப்பிடுவதை பார்த்திருக்கேன், சிறு வயதில் திருநெல்வேலி மாவட்டத்தில் தோழி வீட்டில் சுவைத்திருக்கேன்... நல்லா இருக்கும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Lol -னா என்ன? Sorry. தெரியவில்லை.

நமுத்துபோறதுன்னு சொல்வோம்..நான் கூட கெட்டுபோன முறுக்குன்னு நினைச்சேன்..க்ரில்லர் அவனில் வச்சு பார்க்கலாமே

மேலும் சில பதிவுகள்