சிலந்தி தையல்

தேதி: November 1, 2012

5
Average: 4.2 (6 votes)

 

துணி
ப்ரேம்
எம்ப்ராய்டரி நூல்
ஊசி

 

துணியில் ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கு பென்சிலால் ஒரு வட்டம் வரைந்து அதனுள் எட்டுக் கோடுகள் வரையவும்.
ஊசியில் இரட்டையாக நூலை கோர்த்து அடிவழியாக விட்டு மேல் நோக்கி இழுக்கவும். மையத்தின் எதிரே உள்ள கோட்டின் முனையில் கீழ்நோக்கி குத்தி மையத்தின் வழியாக மேல் நோக்கி இழுக்கவும்.
இதேபோல் அடுத்தடுத்த கோடுகளை ஊசி நூல் கொண்டு தைக்கவும்.
ஊசியை மையத்திற்கு கொண்டு வந்து கோடு போல் தைத்த நூலில் ஒரு சுற்று சுற்றி அடுத்த கோட்டில் ஊசியை நுழைக்கவும்.
இரண்டாவது கோடையும் ஒரு சுற்று சுற்றி அடுத்த கோட்டிற்கு ஊசியை நுழைக்கவும்.
இதேபோல் எல்லா கோடுகளையும் ஒவ்வொரு முறை சுற்றி சுற்றி எடுக்கவும்.
மேலுள்ள கோடுகள் மொத்தமாகவும், அடியில் நூல் சுற்றியது போலவும் இருக்கும். சிலந்தி தையல் ரெடி.
சிலந்தி தையலில் மற்றொரு வகை : அடிப்படை தையலில் வனிதா அவர்கள் சொல்லியது போல் ஒய்வு தையலை (Lazy Daisy stitch) ஆறு இதழ் கொண்ட பூக்கள் போல போடவும். ஒய்வு தையலுக்கான லிங்க் : http://www.arusuvai.com/tamil/node/13979
ஓய்வு தையலை சுற்றியும் மேலே சிலந்தி தையலுக்கு சொல்லியது போல் ஒவ்வொரு இதழை சுற்றி சுற்றி தைக்கவும். ஒய்வு தையலின் கடைசி முனை வரை தைக்காமல் பாதியளவு தைத்தால் போதுமானது.
இப்போது இதன் நடுவே ஒரு கோல்டு மணி அல்லது நூலின் நிறத்திற்குகேற்ற மணி வைத்து தைத்து முடிக்கவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

டீம்... சூப்பர். எனக்கு தையலை விட நீங்க போட்டிருக்கும் நூல் கலர் மேல தான் கண்ணு ;) சுத்தி போடுங்க டீமுக்கு, கலர் காம்பினேஷனில் உங்களை அடிச்சுக்க ஆளில்லை அறுசுவையில்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடடா என்ன அழகா செஞ்சிருகீங்க டீம். நைஸ். வாழ்த்துக்கள்...

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

Romba alaga irukku

Eathiriyaiyum nesi

அழகா இருக்கு டீம். கட்டாயம் முயற்சிப்பேன்.

‍- இமா க்றிஸ்

it looks very nice.how many stanza of thread must be taken for this stitch.thanks