ஆல் இன் ஆல் தீபாவளி !!!

எனதருமை கோழிகளே !!! இன்னும் 12 நாள் கழிச்சு கொண்டாடவிருக்கும் தீபாவளியை ஆவலோடு எதிர்பார்த்துட்டு இருக்கீங்களா? அதுக்கு தான் இந்த இழையை ஓபின் பண்ணேன்..

தீபாவளி பலகாரம் செய்வதில் சந்தேகமா? இந்த இழையில் கேளுங்க.. புதிதாக எதாவது ரெசிப்பி செய்திருந்தாலும் அதை அட்மின் முகவரிக்கு அனுப்பி எங்களோடு பகிருங்கள். பலகாரங்கள் செய்து தவறாகி அதற்கு மாற்று வழி கண்டுபிடித்து அதில் பலகாரம் நன்றாக வந்திருந்தாலும் கூச்சப்படாம சொல்லுங்க.அது மற்ற தோழிகளுக்கும் உபயோகமாக இருக்கும். புதிய ரக ஸ்வீட்ஸ் எதாவது வந்திருந்தாலும், அவை எந்த இடங்களில் வாங்கினீர்கள் என்பதையும் இங்கே சொல்லுங்க. ஒரே ஊராக அல்லாமல் வேறு வேறு ஊரில் வசிப்பவராக இருந்தாலும் பரவாயில்லை.. ஏனென்றால் இந்த தகவல்கள் அந்ததந்த ஊர்களில் உள்ள அறுசுவை தோழிகளுக்கு பயன்படும்.

தீபாவளி சந்தோஷத்தில் பெரும்பங்கு வகிப்பது துணிகள்.அந்த துணிகளை எந்தெந்த கடைகளில் எடுத்தீர்கள். லேட்டஸ்ட்டாக என்ன ரகங்கள் வந்துள்ளன? விலை விவரங்கள், கடை விவரங்கள் இப்படி.. அதற்கு மேட்ச்சான ஆபரணங்கள் போன்ற விவரங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். சுருக்கமாக சொன்னால தீபாவளி குறித்த அனைத்து சந்தேகங்களையும், விவரங்களையும் இங்கே ஷேர் பண்ணிக்கோங்க.. கேளுங்க..சொல்லுங்க.. நம் அனைவருக்கும் அந்த தகவல்கள் பேருதவியாக இருக்கும்.

பின்குறிப்பு :- இந்த இழையில் நக்கல், நையாண்டிக்கு இடமில்லை.. உ.ம். :-ஒரு தோழி முறுக்கு பற்றிய சந்தேகம் கேட்டு ஒரு இழை தொடங்கினார்.. அதில் ஒருவர் சொன்ன பதிலை வைத்து சொல்கிறேன்..

தோழிகளே, பர்சேசிங்குக்கும், பலகாரம் செய்யவும் ரெடியாய்ட்டீங்களா?? அறுசுவையின் அனைத்து தோழிகளுக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் :))

கல்பூ சரியான நேரத்தில் சரியான தலைப்பு.

தீபாவளிக்கு இன்னும் 12 நாள்தான் இருக்கு. நான் ட்ரெஸ் வாங்கியதை தவிர வெற ஒன்னும் இன்னும் செய்யலை :(. சாரி வாங்கினேன். சாரிக்கு பெயர் எல்லாம் தெரியலைப்பா :(

ஒரே ஒரு பலகாரம் ட்ரை பண்ணினோம் சொதப்பிடுச்சு. நார்த் இந்தியன் ஸ்வீட் கடைகளில் மிகமிக பொடி பூந்தியில் செய்த லட்டு ஜூஸியா இருக்குமே அதை செய்யலாம்னு நெட்டில் தேடி செய்தோம். பூந்தி மீடியம் சைசில்தான் வந்தது. எங்ககிட்ட இருந்த கரண்டியில் செய்தால் அப்படித்தானே வரும் :( . அப்பவும் விடாமல் சர்க்கரைப் பாகில் போட்டு லட்டு பிடித்தோம். கடைசியில் அது நாம எப்பவும் செய்யற லட்டு மாதிரிதான் இருந்துச்சு :(. அதனால் தீபாவளிக்கு லட்டு செய்ய வேணாம்னு அது எங்களை முடிவெடுக்க வச்சிடுச்சு.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கோழீகளே, பலகாரம் சுட்ட அனுபவங்களை கூட இங்கே பாங்காக பகிர்ந்துக்கலாம். அதனால முதல்ல நான் சுட்ட, சுட்டுகிட்ட கதையை சொல்லிடறேன்.

போனவாரம் நம்ம அன்புவோட அதிரத்தை ஆசையா சுடலாம்னு ரொம்ப கேர்புல்லா இறங்னேன். ஏன்னா, 2010 தீபாவளிக்கு நான் அதிரசம் பண்ணின கதை தான் அறுசுவையே சிரிப்பா சிரிச்சுட்டு இருக்கே.. அதுமாதிரி ஆய்டக்கூடாதுன்னு, என் கண்ல ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் ஊத்திட்டு ரொம்ப விழிப்பா பண்ண இறங்கினேன். முதல்ல அரிசியை ஊறவச்சு மிக்சில போட்டு மாவாக்கி ஜலிச்சு வச்சுட்டு, வெல்லத்தை பாகு எடுத்து வச்சேன். அதை கல் மண் போக இன்னொரு பாத்திரத்துல பில்டர் பண்ணி வச்சுட்டு இருக்க மாவை போட்டு கலக்கு கலக்குன்னு கலக்கறேன், பாயாசம் மாதிரி தான் ஆகுதே தவிர உருண்டை பிடிக்கும் பதம் வரல ;( என்னடா..இது ஒரு லிட்டர் விளக்கெண்ணெய்யும் வீணா போய்டுச்சேன்னு திரும்ப அரிசியை ஊறவச்சு காயவச்சு மாவாக்கி ஜலிச்சு கலக்கினேன். உருண்டை பிடிக்க வந்துதே ;) ஹய்யா... வந்துருச்சி..வந்துருச்சின்னு கத்திட்டே அப்பவே அதிரசம் சுட கோதாவில் இறங்கினேன். அப்ப நைட் என்ன நேரம்? மணி 10. என் பையன் தூக்கம் வரும்போதெல்லாம் இந்த டயலாக் சொல்லிட்டு தான் படுப்பான். அவனுக்கு தூக்கம் வரும்போது மணி 6 ஆக இருந்தாலும், அவனுக்கு மட்டும் அது 10. நான் எங்கே இருந்தாலும் கிட்டே வந்து.. "அம்மா, மணி பத்துன்னு... எனக்கு மட்டும் கேக்குற மாதிரி சொல்லிட்டு படுத்துடுவான் :DD.. அதே மாதிரி நான் உங்ககிட்ட சொல்றேன்..நான் பலகாரம் செய்யும் போது மணி 10.

ஆத்துக்கார் ஆசையா கேட்டார் என்ன பலகாரம் பண்றேன்னு? நான் சொல்லுவேனா? ஏன்னா, அது எப்படி வரும்னே எனக்கே தெரியாதே.. அதனால், நான் செய்து முடிச்ச பிறகு பாருங்க.. அதான் பலகாரம்னு சொல்லிட்டு வேலைல கண்ணும் கருத்துமா இறங்கினேன்.. எண்ணெய் நல்லா சுட்டதும், கொஞ்சம் மாவெடுத்து உருட்டி தட்டி எண்ணெய்ல விட்டுட்டு கண் கொட்டாம பார்த்துட்டு இருக்கேன். அது என்னடான்னா.. போன தடவை அதிரசம் சுட்ட மாதிரியே அப்படியே உருகி எண்ணெய்ல ஓட ஆரம்பிச்சது.. சே.. என்னடா அதுன்னு வாழ்க்கை வெறுத்து போயி, இருந்தாலும் மனசு தளராம.. அதிரசம் தான் வரல பணியாரம் மாதிரியாவது ட்ரை பண்ணுவோம்னு பக்குவமா எடுக்கலாம்னு மெதுவா எடுத்துட்டேன். நல்லா எண்ணெய் கோர்த்துட்டு எண்ணெய் ரசம்னே பேர் வைக்கலாம்னு இருந்தேன். அதை எடுத்துட்டு வெளியெ வர்றேன்.. மனுஷன் கரெக்டா பார்த்துட்டு கேக்கறார்.. என்ன பலகாரம் இதுன்னு? நானே பேர் தெரியாம தடுமாறிட்டு இருக்கேன்.. என்கிட்ட வந்து என்ன பேர்.. ஏது பேர்னு கேட்டா நான் என்னன்னு சொல்வேன். ஏதேதோ சொல்லி சமாளிச்சுட்டு, சரி மாவை தூக்கி அப்படியே வச்சுட்டு நாளை பண்னலாம்னு ஒரு நைட் அப்படியே விட்டுட்டு மறுநாள் மதியம் மறுபடி சுட இறங்கினேன்..விடுறதா இல்லைனு..

எண்ணெய் நல்லா சூடாகி இருந்தது. நான் நாய் குட்டியை கொஞ்சுவதா நினைச்சுட்டு முதல் உருண்டையை உருட்டி, தட்டி போட்டேன் பாருங்க... கொதிச்ச எண்ணெய்ல சும்மா பொங்கிருச்சு, பொங்கி....கைல எண்ணெய் தெறிச்சு, கால் முட்டில தெரிச்சு ரணகளம் தான் போங்க.. அப்பவும் விடுவேனா.. எங்கேயும் எந்திரிச்சு ஓடாமா (;(() ரொம்ம்ம்ப பொறுமையா எண்ணெய் குளியல் பண்ணிட்டே அத்தனை அதிரசமும் சுட்டு முடிச்சேன்.. என் வலி போனதுக்கு காரணமே.. அதிரசம்.. அதிரசமா வந்தது தான் :) அன்னைக்குன்னு பார்த்து ஒரு நைலான் டைப் நைட்டி போட்டு தொலைப்பேனா..நல்ல பலன் கிடைச்சுது போங்க ;(

தோழிகளே, நான் இதை சொல்ல காரணம்.. அடுப்பு பக்கத்தில் வேலை செய்யும் போது, முக்கியமாக தீபாவளிக்கு பலகாரம் நிறைய செய்வீங்க. அப்போது, மறக்காம காட்டன் ட்ரஸ் போட்டுட்டு வேலை பண்ணுங்க. கூடுமானவரை வீட்டின் குட்டி குட்டி வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு ஒரே கண்ணோட்டத்தோட பலகாரம் செய்ய உக்காருங்க. எண்ணெய் கரண்டி பிடிச்சுட்டே அந்த பக்கம் திரும்பி ஒரு வேலை சொல்லாதீங்க. செய்யாதீங்க. முக்கியமாக எண்ணெய் சட்டி பக்கத்தில் இருந்து கவனம் வேறெங்கும் திரும்பாம பார்த்து சேஃப்பா செய்ங்க. நான் இந்த அனுபவம் டெய்லி டெய்லி என் வீட்டில் பார்க்கும் அனுபவம். அதனால் சொல்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கவி, நீங்களாவது குட்டி குட்டி சைஸ் பூந்தி லாடுக்கு ட்ரை பண்ணீங்க. எனக்கு பெரிய சைஸ் பூந்தியே வந்தபாடில்லயே ;( குட்டி குட்டி கண் வச்ச கரண்டி எப்படியும் கிடைக்கும் கவி. அதை வச்சு ட்ரை பண்ணுங்க. பெரும்பாலும் நம் பலகாரத்துக்கு தேவையான உபகரணங்கள் நம்மை மாதிரி வெளிநாட்டுக்கு வந்தவங்களுக்கு பக்காவா கிடைக்காது. அப்படி இருக்கும் போது நாம தான் கிடைக்கறதை வச்சு பேஷா யூஸ் பண்ணிக்கனும். நீங்க அதில் கில்லாடியாச்சே.. நான் என்ன சொல்ல :) நான் அதிரசம் சுடும்போது கூட எண்ணெய் பிழிய என்னடா பண்றதுன்னு யோசிச்சேன், டக்குன்னு இல்லாத மூளைல ட்யூட் லைட்டே எரிஞ்சது ;)) ரெண்டு டிபன் பாக்ஸ் எடுத்து ஒண்ணை கவிழ்த்து போட்டு அது மேல அதிரசம் வச்சு இன்னொரு பாக்ஸ் அடிபாகத்துல வச்சு அழுத்தி எடுத்தேன். சொட்டு எண்ணெய் கூட அதிரசம்ல தங்கல. பின்னே பிழிஞ்சவ ஆப்ரிக்க பொண்ணாச்சே ;)

ட்ரெஸ், நானும் உங்களை மாதிரி தான் பா. பேரெல்லாம் தெரியாது. தெரிஞ்சுக்கவும் பிரியம் கிடையாது ;) நல்லார்ந்தா அள்ளிட வேண்டியது தான். ஊருக்கு வருஷம் ஒருமுறையோ 2 முறையோ போறவங்களுக்கெல்லாம் கொண்டாட்டம் தான். அதையே காரணமா வச்சு பாதி கடையை காலி பண்ணி கொண்டு வந்துடலாம். நானும் அப்படித்தான் கொண்டு வந்திருக்கேன். இனி 4 தீபாவளிக்கு நோ.. ட்ரெஸ் பர்சேசிங் :)

இந்த தீபாவளிக்கு ஆற்காடு ஸ்பெஷல் மக்கன் பேடா செய்ய ஆசை. நான் ட்ரை பண்ணிட்டு ஒழுங்கா வந்தால் உங்களுக்கெல்லாம் தருவேன் குறிப்பை.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தக்காளி ரசம் சாப்பிட்டிருக்கேன் பூண்டு ரசம் சாப்பிட்டிருக்கேன் எலுமிச்சை ரசம் சாப்பிட்டிருக்கேன் ஏன் அந்த அதிரசம் கூட சாப்பிட்டிருக்கேன். இது என்னடா எண்ணெய் ரசம் புது ரசமா இருக்கேன்னு வந்தால்... அட நம்ப கல்பு செய்த அதி எண்ணெய் ரசம் :)

கல்பு சொன்ன மாதிர் எண்ணெய் சட்டி அருகில் நிற்கும் போது கவனம் தேவை. என் தோழி முறுக்கு செய்யும் போது அது வெடித்து மேலே எல்லம் எண்ணெய் தெறிச்சிடுச்சு. காரணம் வேறொண்ணும் இல்லை இன்ஸ்டன்ட் முறுக்கு மாவு வாங்கி செய்திருக்கா. பிசையும் போது சரியா பிசையாமல் அங்கங்கே மாவு தனியா நின்னிருக்கு. அது வெடிச்சிடுச்சு. மாவு பிசையும் போதும் கவனம் தேவை தோழீஸ்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆஹா... சூப்பர், சூப்பர்ர் கல்ப்ஸ்!!. மிகச்சரியான நேரத்தில், வெகு சரியான இழை!

இப்பதான் சூட்டோட சூடா உங்க இழையை படிச்சிட்டு, க்குயிக்கா ஒரு பதிவு போட்டுட்டு போலாம்னு... என் தீபாவளி பர்ச்சேஸ், பலகாரம் கதை எல்லாம், எல்லாம் பொறுமையா வந்து சொல்றேன். :)

கல்ப்ஸ், ரொம்ப நாள் கழிச்சி, உங்களுக்கே உரித்தான பாணியில் நீங்க அதிரசம் பண்ணின கதையை சொல்லியிருக்கிங்க... ரசிச்சி, சிரிச்சி படிச்சேன், கடைசிப் பாரா வரை! அப்புறம், அச்சோ பாவம் கல்ப்ஸ் என்று மனது பதறிடிச்சி. :( இப்போ சுட்டுக்கொண்டதெல்லாம் பரவாயில்லையா கல்ப்ஸ்?! 'சமையல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'ன்னு நீங்க சொல்றது கேட்குது, ஏன்னா எல்லாருக்கும் அனுபவம்தான் இருக்கே! :) கடைசில ஒரு நல்ல மெசெஜ் சொல்லி இருக்கிங்க... அது ரொம்ப ரொம்ப சரி கல்ப்ஸ். நானும் வந்து சொல்றேன்.

கல்ப்ஸ், என்ன‌ ஆனாலும் ச‌ரின்னு, அதை விடாம‌, சுட்டு முடிச்சிங்க‌ பாருக்க‌, அங்க‌தான் நீங்க‌ நிக்க‌றீங்க‌... (ச‌ரி, உட்கார்ரிங்க‌ன்னுகூட‌ வ‌ச்சிக்க‌லாம்! :D) அதனாலெ உங்க‌ளுக்கு 'க‌ஜினி கல்ப்ஸ்' என்ற‌ ப‌ட்ட‌மும் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகிற‌து!... :D

----
க‌வி,

உங்க‌ ல‌ட்டுப்ப‌திவு, க‌ல்ப‌னாவிற்கு போட்ட‌ ப‌தில் ப‌திவு :) ந‌ல்லாயிருக்கு. நீங்க‌ சொல்வ‌து, மோத்தி ல‌ட்டுதானே? கொஞ்ச‌ம் ஆர‌ஞ்சு ரெட்டிஷ் கல‌ர்ல‌ சூப்ப‌ரா இருக்கும் அது. இங்கே கடைகளிலே வாங்கி சுவைத்ததில், எங்க‌ளுக்கும்‌ ரொம்ப‌ பிடிச்சிப்போச்சி அந்த‌‌ டேஸ்ட். ஆனால் நீங்க‌ சொன்ன‌மாதிரி, என்னிட‌ம் இருப்பதும், 'பெரிய‌ கண்' பூந்தி க‌ர‌ண்டிதான்... ம்ஹீம்ம்ம்... அப்ப‌, அந்த‌‌ ஆசையை ஸ்வீட் ஸ்டாலிலேயே பூர்த்தி ப‌ண்ணிக்க‌றேன்! :)

கவி, அப்புறம், உங்க தனிமை/இனிமை த்ரெட்டும் சூப்பர்... கொஞ்சம்போல‌ படிச்சேன். முழுசா ப‌டிக்க‌னும்...

ஓக்கே ப்ர‌ண்ட்ஸ், (லன்ச் ப்ரேக்கில இவ்வளவுதான்... ;‍)) நீங்க‌ எல்லாம் பேசிட்டு இருங்க‌... அப்புற‌ம் வ‌ரேன்.

அன்புடன்
சுஸ்ரீ

சுஜா, ஹைய்ய்... நீங்களும் வந்துட்டீங்களா? தீபாவளியை இப்பவே கொண்டாடின மாதிரி இருக்குப்பா. வெளிநாட்ல இருக்க நம்மை மாதிரி ஆட்களுக்கு அறுசுவை தானே அந்த ஏக்கத்தை தீர்த்து வைக்குது. ரொம்ப சந்தோஷம் பா.. நீங்க, பழையபடி கவி இன்னும் மற்ற நம்ம தோழிகள் எல்லாம் அறுசுவைக்கு வர்றது. கவி.. ஆன்னா..ஊன்னா... சிங்கப்பூர்ல இருக்கேன்னு சொல்வாங்க. இப்ப அவங்களோட அடிக்கடி பதிவுகளும் தெம்பா இருக்கு.

அதிரசம் மட்டுமில்லாம ஒவ்வொரு அதிரசம் பண்ணும் போதும் ஒரு சந்தேகம், உள்ளுக்குள்ளே பயத்தோட தான் பண்ணுவேன். ஆனா, அதை சுத்தி இருக்க வேலை செய்றவங்க கிட்டயோ, மாமியார்கிட்டயே காட்டவே மாட்டேனே ;)) எங்க பாட்டிக்கே நான் தான் பக்குவம் சொல்லி தந்த மாதிரி தான் ரெம்ம்ம்ப கேர்புல்லா மூஞ்சை வச்சுட்டு செய்வேன் ;) நடுவே எதாவது சொதப்பிட்டாலும், அரிசி வெள்ளையா இருந்துச்சி அதனால இப்படி வந்துச்சி, வெல்லம் கறுப்பா இருந்துச்சி அதனால் அப்படி வந்துச்சின்னு சொல்லி சமாளிச்சுடுவோம்ல. நல்லவேளை மாமியார் எதிர்த்து ஒருவார்த்தை கூட கேட்டதில்ல.. அதனால போச்சு. என்னை மாதிரி எதிர் கேள்வி கேக்குற மாதிரி இருந்தா.. என்னாகும் நிலைமை..

முறுக்கு ஒரு 3 நாளைக்கு முன்னாடி பண்ணேன். அப்பவும் அதே சந்தேகம் தான். முன்னாடி ஒருமுறை முயற்சி பண்ணேன். அது என்னடான்னா போண்டா மாதிரி மெது மெதுன்னு வந்துருச்சி. இந்த முறை நம்ம சுவாவோட குறிப்பை பார்த்தும், டவுட்டை அம்மாகிட்ட போன் போட்டு பத்து முறை கேட்டும் பண்ணேன். சப்பாத்தி பண்ண தெரியாதவங்க முதல் முறை பண்ணுவாங்களே அது மாதிரி ஆய்டுச்சி கதை..அரிசிலருந்து கல் எடுத்த காலம் போய், கல்லுலருந்து அரிசியை தேடி எடுக்குற மாதிரி.. அரிசி மாவு குறைச்சலாவும், உளுந்து அதிகமாவும் போய்ருச்சி. இந்த சின்ன மனசுல ஒரு கல் விழுந்த மாதிரி கஷ்டம் ஆய்டுச்சி. அப்புறம் என்ன, என்மேலயே பாரத்தை போட்டுட்டு முறுக்கு போட ஆரம்பிச்சா.. சத்தமே இல்லாம முறுக்கு பொரிஞ்சது. என்னடா இது. சத்தமே இல்லாம முறுக்கு வெந்திருக்குன்னு அப்பவே டேஸ்ட் பண்ணி பார்த்தேன். முறுக்கு போண்டான்னே சொல்லலாம். என்ன ஒரு சாஃப்ட்..என்ன ஒரு சாஃப்ட்.. அடாடா இதுக்கு என்ன பேர் வைக்கலாம்னு யோசிச்சேன்.. முறுக்கு போண்டான்னு பேர் யோசிச்சு வச்சேன்.. அப்பதான் மாமியார் சொன்னாங்க. முறுக்கு ஆறட்டும்.. அப்ப மொறுமொறுப்பு வரும்னு. நான் பொறுமையா ஒரு அரைமணிநேரம் ஆற விட்டு திரும்ப டேஸ்ட் பண்ணேன். என்ன ஆச்சர்யம்.. முறுக்கு தான். ஆனாலும் வருத்தம், நல்லா கடகடன்னு சாப்பிடும்போது முறுக்குக்கே உரிய முறுக்கல் இல்லையேன்னு.. சரி அடுத்த முறை பார்த்துக்கலாம்னு விட்டுடேன் ;)

நேரம் கிடைக்கும்போது உங்களோட தீபாவளியையும் வந்து இங்கே ஷேர் பண்ணிக்கோங்க பா. வீட்ல அனைவரும் நலமா? நடுவே ஒரு பதிவில் உடல்நிலை சரியில்லைன்னு சொல்லியிருந்தீங்க. தீபாவளிக்கு எல்லாருமே ப்ரெஷ் ஆகியிருப்பீங்க பாருங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பூ கல்பூ... மேட்டரெல்லாம் குட் மேட்டரு தான் :) ஏன்னா நம்ம ஏரியா ‘பர்சேஸ்’ தானே ;) ஹிஹிஹி. கட்டாயம் நான் வாங்கிட்டு பதிவிடுறேன் ;( இன்னும் ஷாப்பிங் போகவே இல்லை.

ஆனா கூட ஒரு மேட்டர் சொன்னீங்களே... பலகாரம் செய்வது... ;) ஹிஹிஹீ. அது நம்ம ஏரியா இல்லை. தீபாவளி அம்மா வீட்டிலாக்கும். நத்திங் டூயிங். புது சொக்கா போட்டுட்டு பிள்ளைகள் பின்னாடியே ஓட சரியா இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கல்ப்ஸ் சொன்ன சொன்ன மாதிரி தீபாவளிப் பலகாரம்னு இல்லீங்க எப்ப அடுப்புக்கிட்ட போனாலும் காட்டன் நைட்டி ,ஏப்ரன் பயன்படுத்துங்க.
யாருக்கும் சூடுபடக்கூடாது மீறிப்பட்டுச்சுனா,
சூடு பட்ட இடத்தை தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் நீரில் மூழ்கும்படி வையுங்கள். முடிந்தால் 4,5 ஐஸ் கட்டிகளை அந்த நீரினுள் போடுங்கள்.
நீரில மூழ்க வெக்க முடியாத பகுதிகளாக இருப்பின்(முகம்) தண்ணீர் குழாயை திறந்து மெதுவாக விழும்படி செய்யுங்கள்.
பர்ணால் எப்பொழுதும் வீட்டில் வைத்திருங்கள்.

ஐஸ்கட்டி வைத்தியம் நான் நேற்று மேற்க்கொண்டேன். நல்ல பலன் கண்டேன். நீரினுள் போட்டுவிட வேண்டும். தீக்காயத்தின் மேல் நேரிடையாக வைக்க வேண்டாம். ஐஸ்கட்டி இல்லையென்றால் நீரைமாற்றிக்கொண்டே இருங்கள்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//ரெண்டு டிபன் பாக்ஸ் எடுத்து ஒண்ணை கவிழ்த்து போட்டு அது மேல அதிரசம் வச்சு இன்னொரு பாக்ஸ் அடிபாகத்துல வச்சு அழுத்தி எடுத்தேன். சொட்டு எண்ணெய் கூட அதிரசம்ல தங்கல. பின்னே பிழிஞ்சவ ஆப்ரிக்க பொண்ணாச்சே//
ஆப்பிரிக்க பொண்ணு அவங்க வீட்ல போயி இந்தியன் ரெசிப்பிப்பத்தி பெருமையா சொல்லி இருப்பா..இந்த பெருமையெல்லாம் கல்ப்ஸ்க்கே உடைத்து.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வனி, உங்களையும் பார்த்துட்டே தான் இருந்தேன். தீவிளி பிசில இருக்கீங்கன்னு நினைச்சுட்டேன். புயல் அடிச்சு இப்ப ஊர் எப்படி இருக்கு வனி? பசங்களுக்கு உடம்பு பரவாயில்லயா?

//தீபாவளி அம்மா வீட்டிலாக்கும். நத்திங் டூயிங். புது சொக்கா போட்டுட்டு பிள்ளைகள் பின்னாடியே ஓட சரியா இருக்கும்//

குட்டிஸ் பின்னாடி ஓடும்போதும் புதுசொக்கா போட்டுட்டு ஓடலாமா? நல்லார்க்கே இந்த ஐடியா.. இனி நானும் ஃபாலோ பண்ண போறேன் ;) அம்மா வீட்ல இருக்கோம்னாலே டெய்லி டெய்லி தீபாவளி கொண்டாடின சந்தோஷம் கிடைச்சுடும். இன்னும் தீபாவளிக்கு அம்மா வீட்ல இருந்தா கேக்கவே வேணாம். ஆனந்தம் விளையாடும் வீடு தான் போங்க :)

டைம் கிடைக்கும் போது நீங்க போன ஷாப்பிங்க் ஸ்பாட் பத்தி சொல்லுங்க. ஏற்கனவே சொல்ல விரும்பினேன்ல சொல்லிட்டு தான் வர்றீங்க. இந்த இழை தீபாவளிக்கே தீபாவளியா மட்டும் இருக்கட்டும்னு ஓபின் பண்ணிட்டேன் ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்