பீர்க்கங்காய் துவையல்

தேதி: November 2, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

பீர்க்கங்காய் - ஒன்று
காய்ந்த மிளகாய் - 3
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
புளி - நெல்லி அளவு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
தாளிக்க
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். பீர்க்கங்காயின் கூரான முனையை மட்டும் நீக்கி விட்டு, தோலுடன் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் பீர்க்கங்காய் துண்டுகளைப் போட்டு, மிதமான தீயில் 10 நிமிடங்கள் வதக்கி எடுக்கவும்.
பின் அதே கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் பெருங்காயம், உளுத்தம் பருப்பு, மிளகாய், புளி ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.
பின் வறுத்தவற்றை மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து, பின் ஆறிய பீர்க்கங்காயையும் மிக்சியில் போட்டு தேவையான உப்பு சேர்த்து கொரகொரப்பாக அல்லது உங்கள் விருப்பத்திற்கேற்ப அரைக்கவும்.
பின் துவையலில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கொட்டவும். மிகவும் சுவையான பீர்க்கங்காய் துவையல் ரெடி. சுடு சாதத்திற்கு அருமையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

துவயல் நல்லா செய்து இருக்கிங்க.படங்கள் அருமை.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

உங்க துவயல் ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்!

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வித்தியாசமான குறிப்பு ரம்யா....
வாழ்த்துக்கள்...

வித்தியாசமான குறிப்பு ரம்யா....
வாழ்த்துக்கள்...

அடடே பீர்க்கங்காய்ல துவையலா? ரம்யா சூப்பர்.....

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

ரம்யா.

சுவையான குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ரம்ஸ், எளிமையான முறையில் குறைவான பொருட்களோடு பீர்க்கன் துவையல் அழகா செய்து காட்டியிருக்கீங்க பா. கூடவே சுடுசாதத்தோடு சாப்பிட்டா நல்லார்க்கும்னு வேற ஆசையை கிளப்பிட்டீங்க. எனக்கு எதிர்ல பட்டதெல்லாம் பீர்க்கங்காயா தெரிஞ்சு ஒருநாள் பாகற்காய்ல துவையல் பண்ணி கசக்க கசக்க சாப்பிட போறேன் பாருங்க ;) இந்த காய் கிடைச்சால் ஒருநாள் ரம்ஸை நினைச்சுட்டே செய்து சாப்ட்டு சொல்றேன் பா.. வாழ்த்துக்கள் ரம்ஸ் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

துவையலை விட அது வந்திருக்க அந்த பச்சை நிறம்... சூப்பரோ சூப்பர். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hai akka nan peerkagai thuvaiyal seithen but perugayam poda maranthuten ana enaku athai sappita piraku oru mathiri thondaiyel iruku perukayam serkathathala appadi iruka pls solluga ena tast suppter sappida arumaiya irunthuchu ana thondai mattum karakarappa iruku ethanala pls