இப்படியும் நடக்கிறது தமிழ்நாட்டில்.....

இன்று காலையில் எழுந்தவுடன் டிவியில் பார்த்த முதல் செய்தி மனதை வதைக்கிறது....
கோவையில் நள்ளிரவில் காரை தாறுமாறாக ஓட்டி, பாதையில் சென்றவர் மீது மோதியதில் இருவர் அந்த இடத்திலே பலி, ஒருவர் கவலைக்கிடம்... காரை ஓட்டி வந்த இளம்பெண் ரம்யா மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம்... குடி போதையில் வண்டியை ஓட்டியதாக போலீசார் சந்தேகம்... விபத்தில் இறந்தவர் ஒருவரின் பெண்ணுக்கு அடுத்த வாரம் திருமணம் நிச்சயத்து உள்ளார்களாம்....

என்னப்பா நடக்குது தமிழ் நாட்டுல? ஆணுக்கு பெண்கள் சமம், இதை பெண்கள் இப்ப ஆண்களுக்கு நிகரா தவறுகள் செய்வதில் நிலைநாட்டுகிறார்கள் போலும்... பெண்கள் குடிப்பதும், புகை பிடிப்பதும் இங்கு சென்னையில் தான் சர்வசாதாரணம் என்று நினைத்தால்... தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும் இது பரவி வருகிறது போல....

கற்புநிலை என்பதற்கு இப்பொழுது பெண்கள் புது அர்த்தம் கொடுக்க தொடங்கி விட்டார்கள்... வாழ்வியல் நெறி என்று நம் மூதாதையர்கள் வகுத்து வைத்ததெல்லாம் காலபோக்கில் காணாமல் போய்விடும் போலிருக்கிறது... ஆண் பெண் நட்பு என்ற போர்வையில் இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் பார்த்தால், நமக்கு பின் வரும் தலைமுறையினர் ஒழுக்கம் என்ற சொல்லுக்கு அர்த்தம்
தேடுவார்கள் போல...

நான் வேலை பார்க்கும் இடத்தில் இத்தகைய சீர்ரழிவை பார்த்து எனக்கே சலிப்பே வந்து விட்டது... இந்த விஷயத்தில் இளம் பெண்கள், திருமணம் ஆனா பெண்கள் என்று பாகுபாடே இல்லை.... ஆள் ஆளுக்கு நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு வெளிப்படையாகவே ஊர் சுற்றுகிறாகள்...

எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நாங்கள் நண்பர்கள்(???) என்று நன்றாகவே தெரியும்.. பின்பு நாங்கள் யாருக்கு பயப்பட வேண்டும் என்று மிகவும் சாதாரணமாக சொல்கிறார்கள்... நண்பர்கள் என்று பொது இடத்தில் (அலுவலகம் உட்பட) இவர்கள் செய்யும் விஷயங்கள் : சும்மா பேசிக்கொண்டிருக்கும் போதே ஒருவர் கையை மற்றவர் உள்ளங்கையில் வைத்து மூடி கொண்டு, (சில நேரம் தடவிக்கொண்டு) பேசுதல், ஒருவர் தோள்லில் ஒருவர் சாய்ந்து கொண்டு டீ குடிப்பது, ஆண்கள் இடுப்பை கையால் அணைத்தபடி நடந்து செல்வது, பிரியும் போது அணைத்து முத்தமிட்டு செல்வது....

தோழிகளே இப்படியான விஷயங்களை வெளிப்படையாக எழுதுவதற்கு என்னை மன்னியுங்கள்... எழுதும் போதே எனக்கு கஷ்டமாக உள்ளது... ஆனால் அவர்கள் இதைதான் உன்னதமான நட்பு, நாகரிகம் என்கிறார்கள்.... என்ன சொல்வதென்றே புரியவில்லை....

இத்தனை மோசமான சமூகத்தில் நாளை நம் பிள்ளைகள் வளர்ந்து பயணிக்க போகிறார்கள் என்பதை நினைத்தாலே பயமாக உள்ளது... குறிப்பாக பெண் பிள்ளைகளை எப்படி நன்றாக வளர்க்க போகிறோம் என்பது பெரிய கேள்வியாக அச்சுறுத்துகிறது....

இது சம்பந்தமாக தோழிகளின் கருத்தும், பிள்ளைகளை நன்றாக (ஒழுக்கமாக) வளர்ப்பது பற்றி ஒரு அம்மாவாக உங்களின் ஆலோசனையும் எதிர்பார்க்கிறேன்....

தோழி தீபா நீங்கள் பேப்பரில் படித்ததற்கே இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறீர்கள். நாங்கள் வெளியில் செல்லும் போதெல்லாம் சொல்லிக்கொள்வோம் எப்படி இருந்த கோவை இப்படி ஆகிவிட்டதே என்று. போனவாரத்தில் சினிமாவிற்கு சென்றிருந்தோம். 6ஆண்கள் 1பெண் என்று வந்தமர்ந்தனர். அந்தப்பெண்ணிடம் அமர்ந்த நபர் எழுந்து வெளியே சென்றால் உடனே அடுத்த ஆள் அந்த இடத்தில் அமர்ந்து கொள்கிறான். எங்களுக்கு பக்கத்து சீட்டில் வரிசையாக அமர்ந்து கொண்டனர், குழந்தைகளுடன் சென்ற நாம்தான் கூசிக்குறுகி அம்ர்ந்திருக்க வேண்டும். சரி எழுந்து போய்விடலாம் என்றால் பிள்ளைகளிடம் விளக்கம் கூற வேண்டும். புதிதாக ஷாப்பிங் மால்கள் வேறு முளைத்துள்ளன. கோவையா, மெட்ரொபாலிட்டன் சிட்டியா என நினைக்கும்படி உள்ளது, இளம் பெண்கள் அணியும் ஆடையும், நடவடிக்கைகளும். கோவையின் ஒரிஜனாலிட்டி போய் வெகுகாலம் ஆகிவிட்டது தோழி!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கோவையும் இப்போது கெட்டு வருகிறதா... நகரங்களின் வளர்ச்சி என்பது இப்போது கலாச்சார சீரழிவில்தான் முன்னேறுகிறது போலும். எங்கு பார்த்தாலும் நைட் கிளப்ஸ், பப்புகள் பெருகி விட்டது. நள்ளிரவு வரையில் அத்தகைய
இடங்களில் குடித்து ஆட்டம் போட்டுவிட்டு, போதையில் வண்டி ஓட்டி அப்பாவி உயிர்களை பலியிடுகிறார்கள். இத்தனைக்கும் இவர்கள் செய்யும் இந்த ஈன செயல்களுக்கு வெக்கபடுவதோ, குற்ற உணர்ச்சியோ எதுவுமே இல்லாமல் திரிகிறார்கள்.

இப்படி ஒரு பெண் ஆறு ஆண்களுடன் சென்றால், வருங்காலத்தில் பிறக்கும் குழந்தைக்கு தந்தை யார் என கண்டுபிடிக்க அத்தகைய பெண்கள் DNA டெஸ்ட் எடுத்து கண்டறிவார்கள் போலும். இதற்கு மேல் ஒரு கேவலம் நம் பெண் இனத்திற்கு வரமுடியாது...

ஆமாம்... இதுல ஆணென்ன பெண்ணென்ன?? இப்ப இருக்க கலாச்சாரம் எல்லாம் ஒழுக்கம் குறைவா தான் இருக்குன்னு பொதுவாவே சொல்லலாமே. :)

பிள்ளைகளை வளர்ப்பது இருக்கட்டும்... இப்படி 4 பேர் பதிவிட்டா நம்ம மக்கள் மனைவியை வேலைக்கு அனுப்ப மாட்டாங்க, பெண்கள் கணவரை வேலைக்கு அனுப்ப பயப்படுவாங்க, அனுப்பினாலும் கூட பழகும் நல்ல பொண்னை கூட தப்பா பார்ப்பாங்க.

நம்ம மக்களுக்கே உள்ள பழக்கம்... புருஷன் நல்லவ’ர்’, கூட பழகின பொண்ணு தான் தப்புன்னு பேசுறது. பெண்ணாக பிறந்து பெண்ணை அசிங்கமா பேச வாய் எப்படி வருதுன்னு புரியல. ஆண்களும் இப்படி தான்... மனைவி எவ்வளவு நல்லவன்னு பார்ப்பதில்லை... வேலைக்கு அனுப்பினா ஒரு டவுட்டு... ஒரு ஓரமா ஒட்டிக்கும் போல. இருவருக்குமே பங்குண்டு என்பதை முதல்ல பெண்கள் நாம நம்பணும்.

//இப்படி ஒரு பெண் ஆறு ஆண்களுடன் சென்றால், வருங்காலத்தில் பிறக்கும் குழந்தைக்கு தந்தை யார் என கண்டுபிடிக்க அத்தகைய பெண்கள் DNA டெஸ்ட் எடுத்து கண்டறிவார்கள் போலும். // - இந்த ஆணுக்கு பிள்ளை பெற்றவர்கள் எத்தனை பெண்கள் என கண்டறிய ஏற்கனவே எதாவது டெஸ்ட் இருந்திருக்கலாம். முதல்ல ஒழுக்கம் தவறிய ஆண்கள்... அவங்க அப்படி தான்னு நாம் விட்டதால் தானே இன்னைக்கு அவங்களை போல் நாங்கள்னு பெண்கள் வராங்க.

இதனால் பெண்கள் தப்பே பண்ணலன்னு நான் சொல்லல... பொதுவா இப்போ ஒழுக்கம் குறைவு. வெளிநாட்டில் பார்ப்பதை எல்லாம் கடைபிடிப்பதின் விளைவு. அம்புட்டு தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நீங்க சொல்றது ரொம்ப சரி.. ஆணோ பெண்ணோ ஒழுக்கம் என்பது ரொம்பவே முக்கியம். நா பெண்ணை மட்டும் குற்றம் சாட்டவில்லை. ஆனால் இத்தகைய குற்றங்கள் ஈடுபடும் ஆண்களை விட
பெண்களுக்கு தான் பாதிப்பு அதிகம், அதை பெண்கள் புரிந்து கொள்ளாமல் இப்படி பாழாகிறார்களே என்பது தான் என் ஆதங்கம். ஆண்கள் தவறு செய்கிறார்கள் என்று பெண்களும் இப்படி சரிக்கு சமமாய் நின்றால் நல்லதா?

//பிள்ளைகளை வளர்ப்பது இருக்கட்டும்... இப்படி 4 பேர் பதிவிட்டா நம்ம மக்கள் மனைவியை வேலைக்கு அனுப்ப மாட்டாங்க, பெண்கள் கணவரை வேலைக்கு அனுப்ப பயப்படுவாங்க, அனுப்பினாலும் கூட பழகும் நல்ல பொண்னை கூட தப்பா பார்ப்பாங்க.//
இதையே தான் நானும் சொல்ல வருகிறேன்... இதைபத்தி பதிவிட்டாலே இவ்வளவு பிரெச்சனை வரும் என்கிறபோது, கண்ணெதிரே பார்க்கும் போது அதன் பாதிப்பு இன்னும் அதிகமாக தானே இருக்கும். தவறு என்று தெரியும் போது அதை சுட்டி காட்டுவது தவறில்லையே. இப்படி சுட்டி காட்டுவதால் ஒட்டுமொத்த கணவர்மாரும் மனைவிமாரும் வேலைக்கு தங்கள் துணியை நம்பி அனுப்ப மாட்டார்களா... அப்படி என்றால் இந்த பதிவை இடும் நானே வேலைக்கு செல்பவள் தான்.
வேலைக்கு செல்லும் எந்த பெண்ணுக்கும் ஆணுக்கும் பாதகம் விளைவிப்பது என் நோக்கம் இல்லை. நம்மை சுற்றி இப்படி நடக்கிறது
அதை பெருக விடாமல் திருத்தி கொள்ள வேண்டும் என்று தான் இந்த பதிவு...

பெண்களை பற்றி நா கூசாமல் இழிவாக பேச நா பெண் இன எதிரியும் இல்லை. ஆண் பெண் நட்பே கூடாது என்று சொல்லும் பழமைவாதியும் இல்லை. எதுவும் ஒரு வரம்புக்குள் இருந்தால்தான் நல்ல நட்பு வளரும் என்பது என் கருத்து.

ஆணும் பெண்ணும் நல்லொழுக்கத்துடன் இருந்தால்தான் நாளைய வளரும் சமுதாயம் நன்மைபெறும் என்பதுதான் என் கருத்தும்...

அன்புத்தோழிகளுக்கு கண்ணால் பார்த்தையெல்லாம் பதிவிடும் தளம் அல்ல என்பதை தெரிந்து கொண்டேன்.
இதன் மூலம் சமூகத்தில் நிலவும் அவலங்களை நிறுத்தவும் முடியாது. நிறுத்தவும் மாட்டார்கள். தவறாக கூறவில்லை என நினைக்கிறேன்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//அன்புத்தோழிகளுக்கு கண்ணால் பார்த்தையெல்லாம் பதிவிடும் தளம் அல்ல என்பதை தெரிந்து கொண்டேன்.//
அட அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைங்க... இது பொது தளம்.. நா என் கருத்தை சொன்னேன், நீங்க உங்க கருத்தை சொன்னீங்க, அதுபோல வனி அவங்க கருத்தை சொன்னாங்க அவ்வளவே... :)

மற்றபடி கருத்துகளை பதிவு செய்ய கூடாது என்று யாரும் இங்கு சொல்ல முடியாது தோழி... நீங்கள் பார்த்ததை சொன்னதில் எந்த தவறும் இல்லை... பல தவறுகளை பேசாமால் விட்டதால்தான் பெருகி வருகிறது என்பது என் கருத்து.

அருட்செல்வி & தீபா... நான் பவர் போகும் அவசரத்தில் போட்ட பதிவு... அதனால் ஸ்மைலி எல்லாம் மிஸ்ஸிங். நான் கோவமா எல்லாம் போடலீங்கோ... நானும் கிண்டலா தான் போட்டேன் :) ஒழுக்கம் என்பது எப்பவுமே இருவருக்கும் உண்டுன்னு சொன்னேன், அம்புட்டு தான். உண்மையில் அருட்செல்வி போட்ட பதிவை கூட நான் படிக்கல... தீபா போட்டிருந்த அந்த ஒரு வரியை தான் படிச்சு பதிவிட்டேன். தப்பா நினைக்காதீங்க இருவருமே... எல்லாருக்குமே அவங்க கருத்தை சொல்ல இங்கே முழு உரிமை உண்டு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னால் இதை படித்துவிட்டு பதிவு போடாமல் இருக்க முடியவில்லை. இது இந்தியாவில் நடந்தது. ஒருசேலையை கூட காண முடியாது என் அலுவலகத்தில். அன்று அதிசயமாக ஒரு சேலை பெண். மிகவும் சந்தோஷமாக முன்னாடி ஓடி போய் பார்த்தால் , கையில் தம். தம் அடிக்கும் பெண்களுக்கு தங்கள் என்னவோ ஒரு படி மேலே என்கிற நினைப்பு வேற.
இன்னும் நிறைய கண்றாவிகளை பார்க்க நேரிடுகிறது.

அன்புத் தோழிகளுக்கு கிராமத்து சூழ்நிலையில் வளரும்
குழந்தைகளுக்கும்,நகரத்து சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. கிராம சூழ்நிலையில் அதிக கட்டுப்பாடுகளுடன் வளரும் குழந்தைகள் படிப்பதற்கோ வேலைபார்ப்பத்ற்கோ வெளியூர்களுக்கு வரும் சூழ்நிலையில் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை பெறுவதால், தடம்புரளும் வாய்ப்புகள் அதிகம்.

இப்பொழுது நிறைய வீடுகளில் திருமணம் வேண்டாம் என்று கூறும் அளவிற்கு நிலமை மோசமாகி உள்ளது. அயல் நாடுகளில் , தொலக்காட்சி மூலமாகவெல்லாம் தயவு செய்து திருமணம் செய்துகொள்ளுங்கள் என அந்நாட்டு பிரதமரே வேண்டுகோள் விடுக்கும் நிலை உள்ளதல்லவா, அது போன்ற நிலை நம் சந்ததியினர் வளரும்போது உண்டாகி விடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.
குடும்பம் என்னும் அமைப்பு சிதறிப்போகும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் சின்ன சின்ன விஷயத்துக்கு கூட விவாகரத்து பண்ணிக்கொள்கின்றனர்.
குழ்ந்தை இல்லாமல் பண்ணிக்கொள்கிறவர்கள், யாருக்கும் பிரச்சினை இல்லாமல் வேறொரு திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால் குழந்தையுள்ள தம்பதிகள் பிரியும் பொழுது அந்தக்குழந்தையின் நிலை மிகவும் பரிதாபமான ஒன்றாகும்.
இப்பொழுது கிராமப்புறங்களில் இளைஞர், இளைஞிகளே கிடையாது என்று சொல்லும் நிலைதான் உள்ளது.
ஆனால் அவர்களால் நகர்ப்புற வேகத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமல் திணறிப்போகும் நிலை ஏற்படுகிறது.
மென்பொருள் வேலைக்கு பேர் போன முக்கிய நகரத்திலிருந்து இயக்கப்படும் ஸ்லீப்பர் கோச் எனப்படும் பேருந்துகளில் கடைசி சீட்டை தேர்ந்தெடுத்து அமருவதற்கு அத்துணை போட்டி. எதற்க்கென்பது குன்றின் மேலிட்ட விளக்கு போல் அனைவரும் அறிந்ததே!
அதுபோதாதென்று அரசு மதுக்கடை வாசல்களிலும் பூவையர் கூட்டம் அலைமோதுகின்றதே! இந்த துணிவு இவர்களுக்கு எங்கிருந்து வந்தது, யார் கொடுத்த சுதந்திரம்.

கஷ்டப்பட்டு படிக்க வைத்த பெற்றோர்களுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? படிக்க வைத்த உங்களுக்கு நீங்கள் செலவிட்ட தொகைக்கு வட்டிபோட்டு வாங்கிக்கொள்லுங்கள் என்பதுதான் இவர்கள் தரப்பு நியாயமோ?
அந்தக்காலத்தைப்போல் அப்பாவைக் கண்டுபயம், அண்ணணை கண்டு பயம் எனபதெல்லாம் மூடநம்பிக்கையோ? பணத்தைக்கொண்டு மானத்தை வாங்கமுடியுமா? இவர்களுடைய வாழ்நாள் குறிக்கோள் பணம் என்ற ஒன்று மட்டுமேவா?
மேற்கூறியவற்றிலிருந்து விதிவிலக்காக இருப்போரும் உண்டு, நாம் பேசுவது அவர்களைப் பற்றியல்ல,

நெற்பயிர்களுக்கு இடையே தோன்றும் களையை அகற்றாவிட்டால் அது மகசூலில் பெறும் பாதிப்பை உண்டு பண்ணிவிடுமே! கொடுத்த சுதந்திரத்தை ந்ல்வழியில் பயன்படுத்துவோருக்கு இந்த சமுதாயம் என்றுமே தலைவணங்கும் என்பது உறுதி. பெற்றோர்கள் கொடுத்த சுதந்திரத்தை நல்ல முறையில் பயபடுத்தாமல் இருந்திருந்தால் பல நல்ல பெண் தேசத்தலைவர்களையும், பலஎழுத்தாளர்களையும், சமூக ஆர்வலர்களையும் நாம் பெற்றிருக்க முடியாதே.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வனி அறுசுவையின் "இரும்பு மனுஷி" நீங்க போயி கரண்டு போச்சு, தண்னி வரல, மோட்ரு ஓடுலனு......................
உங்க பதிவு எல்லா இழைக்கும் கட்டாயம் தேவை. காரசாரமா இருந்தாதான் அறுசுவை, இல்லேன்னா ஐசுவை ஆகிடும்.

தீபஸ் உள்குட்டி, வெளிக்குட்டிய நல்லா பார்த்துக்கோங்கோ!!!!!!!
இந்தமாதிரி நேரத்துல இந்த மாதிரி விஷயங்கல பார்த்தாலும் பாக்காத மாதிரி போய்டணும்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மேலும் சில பதிவுகள்