பசும் பால் குழப்பம்

என் குழந்தைக்கு 1 வயது ஆகிறது. பசும் பால் குடுக்கிறேன். என் தோழி ஒருத்தி பசும் பாலில் சத்து இல்லை. அதை நிறுத்தி விடு. ஆரோக்கியா பால் கொடு என்கிறாள். எனக்கு குழப்பமாக உள்ளது. பசும் பால் நல்லது தானே?

தண்ணீர் கலந்து தர வேண்டுமா? கொஞ்சம் விளக்குங்கள் ப்ளீஸ்..
<!--break-->

அன்புத்தோழி நீங்கள் இருக்குமிடத்திற்கு அருகிலேயே கறவைமாடுகள் இருந்தால் தனியாக பாத்திரம் கொடுத்து வாங்கிக்கொள்ளுங்கள், இல்லையேல் பால்காரரிடம் சொல்லி தனியாக பாத்திரம் கொடுத்து வாங்கிக்கொள்ளுங்கள். பாக்கட்பால் முடிந்தவரை குழந்த்தைக்கு கொடுக்காமல் இருப்பது நலம். பசும்பாலில் தண்ணீர் கலக்காமல் கொடுப்பது சாலச்சிறந்தது. மருத்துவரிடம் கேட்டு தரமான பால்பவுடர் வாங்கிவைத்துக்கொள்ளுங்கள். திட உணவு வகைகள் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துப் பழக்குங்கள். அனுவம் மிக்க அறுசுவை தோழிகள் தங்களுடைய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். வாழ்த்துக்கள் தோழி!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பலரும் பல மாதிரி சொல்லுவாங்க..உண்மையில் நானும் பார்த்துட்டேன் பசும்பால் உடம்புக்கு ஒத்துக்குவதில்லை பாக்கெட் பால் ஒத்துக்குது..ஆனால் மருத்துவர்களே சொல்வது ஒரே பசுவில் கறக்கப்பட்ட பாலை கொடுப்பது தான் சிறந்தது..பக்கத்துல பால்காரங்ககிட்ட சொல்லி வாங்கி கொடுக்கலாம் சுத்தமா தான் இருக்கான்னு பாத்து வாங்கணும்

பதில் தந்தமைக்கு மிக்க நன்றி. இன்னொரு சந்தேகத்தையும் தீர்த்து வையுங்கள். நான் தினமும் காலையில்
முட்டை தோசை பசும் பாலில் ஊற வைத்து ஊட்டுகிறேன். முட்டையும் பாலும் சேர்த்து குடுக்கலாமா? அஜீரணம்
ஆகுமா?

மேலும் சில பதிவுகள்