என் தோழிக்கு உதவி தேவை

அன்பு தோழிகளே, நான் நீண்ட நாட்களுக்கு பிறகு என் உடன் படித்த தோழி ஒருத்தி இடம் பேசினேன். அவள் மிகவும் பயத்தில் உள்ளால். அவளுக்கு 35 நாட்கள் ஆகிரது. வீட்டில் சிறுநீர் பரிசோதனை செய்ததில் நல்ல படியாக வந்ததாக சொல்லுகிறாள். ஆனால் அவளுக்கு எந்த ஒரு அறிகுரியும் இல்லை என்கிறாள். அதாவது வாந்தி, மயக்கம் எதுவும் இல்லை. எப்போதும் போல் தான் இருபதாக சொல்லுகிறாள். அவள் கவலைக்கு என்ன காரணம் என்றால், அவள் 6 மாததிற்கு முன்பு இதே போல் கருவிற்று, எந்த ஒரு அறிகுறியும் இல்லை, 6 வாரத்தில் ஸ்கேன் செய்த போது டாக்டர் அந்த கரு சரிவர உருவாகவில்லை, வெறும் கருவை சுற்றி இருக்கும் நீர் பை தான் இருக்கிறது, உள்ளே குழந்தை உருவாகவில்லை என்று சொல்லி கலைத்து விட்டார்களாம். இப்போதும் அப்படி ஆகிவிடுமோ என்று பயபடுகிறாள். என்னால் அவளுக்கு ஆருதல் சொல்லமுடியவில்லை. தோழிகளே தாய்மை அடைந்த உங்கள் அனுபவத்தில் இது போன்று யாருகாவது கருவூற்று எந்த அறிகுறியும் இல்லாமல் குழந்தை நல்ல படியா பிறந்துல்லதா. பொதுவாக எப்போது வாந்தி, மயக்கம் ஆரம்பம் ஆகும், வேறு சிறு சிறு அறிகுறிகள் ஏதாவது இருக்கிறதா, தயவு செய்து கூறுங்கள். உங்கள் அனுபவ ஆலோசனை மிகவும் தேவை.

என் இரண்டு பிள்ளைகளுக்கும் எந்த அறிகுறியுமில்லாமல் தான் இருந்தேன்...ஒண்ணுமில்லைன்னா அதிர்ஷ்டசாலின்னு நிம்மதியா இருக்க சொல்லுங்க

salam thalika epdi irkeenga?neengalum dubai la irkeengala?Dubai la endha area neenga?

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

மிகவும் நன்றி தளிகா. இதை நான் அவளிடம் சொன்னால் மிகவும் சந்தோஷ படுவாள்.

வஸ்ஸலாம்.இல்லைங்க துபாயில் இல்லை பக்கத்து ஊரு;)

தோழி எனக்கும் முதலில் அது போல தான் இருந்தது 6ஆவது வாரத்தில் ஸ்கேன் பார்த்த போது கரு இல்லை தண்ணீர் மட்டும் தான் உள்ளது என்று டாக்ட்டர் சொன்னர்கள் 2நாள் பார்ப்போம் தானாக அபார்ட் ஆகிட்டா சரி இல்லைனா அபார்ட் பன்னனும்னு சொன்னாங்க நான் தான் ஒரே பிடிவாதமாக 8 வாரம் கழித்து ஸ்கேன் பர்க்கலாம் அதிலும் எதுவும் இல்லை என்றால் D&C பன்னலாம்னு சொல்லிட்டு வந்தோம் 8ஆவது வார ஸ்கேனில் பேபி ஹார்ட்பீட் வந்து இருந்தது அதை பார்த்து டாக்ட்டர்களுக்கே அதிர்ச்சி அதனால் உங்கள் தோழிக்கு தைரியம் சொல்லுங்கள் எல்லாம் நல்லதாகவே நடக்கும்

உங்களுக்கு எந்த அறிகுறியும் இல்லையா. எப்போதும் போல தான் இருந்தீர்களா?
அப்போ 8 வாரம் வரை பொருமையாக இருக்க சொல்கிறேன்.

இந்த அறிகுறின்னு சொல்லப்படுவது எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது. அதை முதல்ல புரிஞ்சுக்க சொல்லுங்க உங்க தோழியை.எனக்கு ஒவ்வொரு முறையும் 45வது நாள் நெறுங்கும் போது தான் வாந்தி வருவது போல் இருந்தது. அதுவரை இல்லை. என் தங்கைக்கு அதுவும் இல்லை :) அவளுடைய 45வது நாள் நல்ல MGM’ல சுத்திட்டு வந்தோம். ஏன் சொல்றேன்னா.... இதெல்லாம் கர்பத்துக்கு கர்ப்பம் பெண்ணுக்கு பெண் மாறுபடும். அது இல்லை இது இல்லைன்னு எல்லாம் பயம் வேண்டாம். தைரியமா நஃபி சொன்ன மாதிரி இருக்க சொல்லுங்க. எல்லாம் நல்லதே நடக்கும்.

கர்ப்பமா இருக்கும் எல்லாரும் வாந்தி எடுக்கனும், எல்லாருக்கும் மயக்கம் வரனும் அப்படி எல்லாம் எதுவுமே இல்லை. கவலை வேண்டாம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அக்கா நான் அவகிட்ட இங்க அறுசுவை தோழிகள் சொன்னதை சொல்லிட்டேன், இருந்தாலும் அவ முண்ணாடி நடந்தத நினைத்து சிறிது கவலை கொள்கிறாள். எனகே கொஞ்சம் கஷ்டமா இருக்கு அக்கா அவகிட்ட பேசும் பொது.

தோழி உங்கள் தோழியிடம் கூறுங்கள் ,
எனக்கு இப்போது ஏழாவது மாதம் தொடங்க போகிறது ,எனக்கு முப்பத்தைந்து நாளில் டெஸ்ட் செய்த போது கூட வீக்லி பாசிடிவே தெரிந்தது ,இருந்தும் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது ,எனக்கு ஐம்பது நாள் வரையில் எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தது .அறுபதாவது நாள் ஸ்கேன் செய்த பிறகே மருத்துவர் உறுதியாக சொன்னார் ,வீக்லி பாசிடிவ் என்று தெரிந்தும் நான் என் நம்பிக்கையை விடாமல் நாம் கர்ப்பமாக இருக்கிறோம் என்று மனதுக்குள் சந்தோஷமாய் இருந்தேன் ,இதனை இங்கு எதற்கு சொல்கிறேன் என்றால் அவர் கவலைப் பட்டாலே நடக்காததும் கூட நடக்க வாய்ப்புள்ளது என்று சொல்கிறேன் ,அதாவது அப்போது ஆனது போலவே இப்போது ஆகிவிடுமோ என்று பயப்படும் போது பயமே இறுதியில் வென்று அவரை மிகுந்த துன்பப்படுத்தி விடும் என்று சொல்கிறேன் ,நம்பிக்கை வைக்க சொல்லுங்கள் ,கடவுளிடம் நன்கு வேண்டிக் கொள்ள சொல்லுங்கள் .பத்திரமாக இருக்க சொல்லுங்கள் ,கண்டிப்பாக அவர் தாய்மை அடைந்திருப்பார் ,அவர்க்கு நல்லபடியாக இந்த குழந்தை நிலைக்க நாம் அனைவரும் சேர்ந்து வேண்டிக் கொள்வோம் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

மிக்க நன்றி பாரதி, அவளை சந்தோஷமாக இருக்க சொல்கிறேன்.

மேலும் சில பதிவுகள்