வலி

சில வேலைகலில் மலம் டைட்டா போகுது. அதோட பின் அடில வலிக்க ஆரம்பிச்சிருது. அந்த வலி நாள் fulla இருக்குது. வலி போக ஏதாவது கை மருத்துவம் தெரிஞ்சா சொல்லுங்க தோழிகளே!

ஃபெரோ ஒரு நாள் முழுதும் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தண்ணீர் குடிங்க குறைந்தபட்சம் 3 லிட்டர் வரை குடிக்கணும்னு டாக்டர் சொல்வாங்க. இன்னைக்கே இப்பவே குடிக்க ஆரம்பிங்க. வெதுவெதுப்பா சுட வெச்சு குடிச்சா இன்னும் நல்லது. உடல்சூடு உண்டாக்கும் உணவுகளை தவிருங்க. மாதுளை பழம் சாப்பிடுங்க. இப்போதைக்கு வலி குறைய ஒரு பாத் டப்பில் சூடுதாங்கும் அளவு சுடுநீரில் டெட்டால் கலந்து கொஞ்சநேரம் உட்காரலாம். வலி குறையும் தொடர்ந்து வலியுடன் மலம்கழித்தால் மூலநோய் சீக்கிரம் வந்துவிடும்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

தண்ணீர் குடிக்குரதுல நான் குறை வைக்குரதில்லப்பா! நான் குடிக்கிற water க்கு அடிக்கடி சிறுநீர் கூட வெளி ஆகும். but எப்பயாவது இப்படி வலி வந்துரும். நேத்து இப்படி வலி வந்துச்சு. இன்னைக்கும் தொடருது. இப்ப டெட்டால்ல உக்கார போரேன்ப்பா. ஏதும் ஆயிராதுல.

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

அன்பு தோழி...

முதல்ல மலச்சிக்கலை சரி பண்ணுங்க. தினம் இரவு படுக்க போகும் போது பால் குடிங்க, பழம் சாப்பிடுங்க. காலை எழுந்ததும் வெது வெதுப்பான நீரை வெறும் வயிற்றில் குடிங்க. இது உடனடியாக மலம் வெளியேர உதவும்.

இதெல்லாம் செய்யும் போதே மருத்துவரை ஒரு முறை பாருங்க. பைல்ஸ் / குடல் இறக்கம் போன்று ஏதும் இல்லை என்பதை உறுதி செய்ய. காரணம் இவை இருந்தாலும் வலி ஏற்படும். அதனால் இது கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று.

நித்யா சொன்னது போல சூடு பிடிக்காம பார்த்துக்கங்க. காரம் கூட குறைங்க. இதனால் கூட சிலருக்கு வலி ஏற்படலாம்.

உங்களுக்கு பிள்ளைகள் இருக்கா என எனக்கு தெரியல... நான் ஒரு புத்தகத்தில் படித்தது... மலச்சிக்கல் இருக்கும் போது கரு உண்டானால் அது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் என்று. அதனால் அதுக்காகவாது இந்த பிரெச்சனையை சரி செய்ய வேண்டும்.

நல்ல ஃபைபர் கண்டண்ட் உள்ள உணவுகள் எடுங்க. கொட்டை வகை, கோதுமை எல்லாம் சேர்த்துக்கங்க மாலை மற்றும் இரவு உணவில்... இதுவும் இந்த பிரெச்சனைக்கு தீர்வாக இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஃபெரோ ஒன்னும் ஆகாது பயப்படாதீங்க. ரணம் இருந்தா கொஞ்சம் எரியுற மாதிரி இருக்கும் பொறுத்துக்கோங்க. அப்போதான் சீக்கிரம் சரியாகும் நீங்க எந்த ஊர்ல இருக்கீங்கன்னு தெரிஞ்சா ஒரு ஆய்ன்மென்ட் சொல்றேன் வாங்கி அப்ளை பண்ணுங்க 2 நாள்ல சரியாயிடும்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஃபெரோ வனிதா அக்கா சொன்னத ஃபாலோ பண்ணுங்க மெடிசன் எடுத்து சரி பண்றதவிட உணவு பழக்கத்தில மாற்றம் செஞ்சு சரிபண்றதுதான் நல்லதுன்னு எனக்கு டாக்டர் சொன்னாங்க. டெய்லி வாழைப்பழம் சாப்பிடுங்க. என்னை டாக்டர் உணவில் புளி சேர்க்காம அதுக்கு பதில் எலுமிச்சை சேர்க்க சொன்னாங்க. நீங்களும் ஒரு வாரம் புளி சேர்க்காம சாப்பிட்டு பாருங்க. நல்ல பலன் தெரியும்

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வாங்க. நிறைய தண்ணீர் குடிங்க மலச்சிக்கல் இருக்காது.

vani எனக்கு marriage ஆகி 2 years ஆகுது. but இன்னும் குழந்தை இல்ல.நீங்க சொல்றது ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. நீங்க சொல்றமாரி டாக்டர் ட்ட check பண்ணிக்கிர்றது ரொம்ப நல்லது. நான் உணவுல கட்டாயம் கட்டுப்பாடு கொண்டு வரணும்.

nithi நான் சவுதி ல இருக்கேன். நீங்க ரெண்டு பெரும் சொன்னத follow பண்ணி பாக்குரேன்ப்பா.

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

நான் வெஜ் தவிர்ப்பது அல்லது குறைப்பது நல்லது..தினம் உடற்பயிற்சி அவசியம்.தினம் கீரை காய்கறிகள் பழங்கள் கண்டிப்பா சேத்துக்குங்க.அத்திப்பழம் சாப்பிடுங்க தினம் ஒண்ணு நைட் டின்னெர்க்கு ஒரு கேரட் நறுக்கி உப்பு மிளகு எலுமிச்சை கலந்து இல்ல பச்சையாவே சாப்பிடுங்க.இப்படி அதிகப்படியான ப்ரச்சனை இருந்தால் கட்டியான ஆகாரம் கம்மிபண்ணி கூழ் கஞ்சி ந்னு எடுத்துக்குங்க

ஓ... அப்போ இது தான் சரியான நேரம். முதல்ல இந்த பிரெச்சனையை முழுசா என்ன காரணம்னு டெஸ்ட் பண்ணி சரி பண்ணிடுங்க. பயப்படாதீங்க... இதெல்லாம் இப்போ நிறைய பேருக்கு உள்ள பிரெச்சனை தான். சரியாகிடும். உணவு முறையில் மாற்றம் செய்யுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thalika !அத்திபழமும் இந்த பிரச்சனைக்கு solution -ஆ ?

ஆமா vani ! நான் கண்டிப்பா டெஸ்ட் எடுக்குறேன்.

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

மேலும் சில பதிவுகள்