தேங்காய் பால் சாதம்

தேதி: November 8, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (11 votes)

 

பாஸ்மதி அரிசி (அ) பச்சரிசி - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி விழுது - கால் தேக்கரண்டி
தேங்காய் பால் - ஒரு கப்
கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் - தாளிக்க
காய்ந்த மிளகாய் - ஒன்று
உளுந்து, கடலை பருப்பு, முந்திரி, உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய், நெய் - தாளிக்க
கொத்தமல்லி - சிறிது


 

ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கவும்.
பத்து நிமிடம் ஊற வைத்த அரிசியை அதில் சேர்த்து சிறுதீயில் இரண்டு நிமிடம் உடையாமல் வதக்கவும்.
தேங்காய் பால், தேவையான அளவு தண்ணீர், உப்பு, இஞ்சி விழுது சேர்த்து கொதி வந்ததும், ஒரு விசில் வைத்து இறக்கி, பரத்தி ஆற விடவும்
எண்ணெய், நெய் கலவையில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பருப்புகள், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
தாளித்ததை பரத்திய சாதத்துடன் கலந்து நன்கு பரவ கலந்து விடவும்.
கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ்... அந்த கடைசி படத்துக்கே 5 ஸ்டார்ஸ் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

five star given along with vani... very nice dish

wow!..super presentation..healthy recipy..thanx kavitha

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி..

என்றும் அன்புடன்,
கவிதா

வனிதா ,

வருகைக்கும்,வாழ்த்திற்க்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

வெங்கடேஸ்வரி ,

வருகைக்கும்,வாழ்த்திற்க்கும் ,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஷம்னாஸ்,

வருகைக்கும்,வாழ்த்திற்க்கும் ,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

எனக்கு மிகவும் பிடித்த சாதம்.. செய்திருக்கும் விதம் அருமை.. கடைசி படம் மிக மிக அருமை.. வாழ்த்துகள்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

டேஸ்டி சாதம்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரேவதி,

வருகைக்கும்,வாழ்த்திற்க்கும் ,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

முசி,
வருகைக்கும்,வாழ்த்திற்க்கும் ,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

சாதம் நல்லா செய்துருக்கீங்க... நானும் செய்து பார்க்கிறேன்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

super

ஹளிலா,

செய்து பார்த்து சொல்லுங்க..
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

வாஜி,

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

தேங்காய் சாதத்திற்கு 1கப் அரிசி 1கப் பால்னா எவ்வளவு தண்ணீர் எடுக்க வேண்டும். மற்ற சாதத்திற்கு 1கப் அரிசினா 2கப் தண்ணீர் எடுக்க வேண்டும். இதில் தேங்காய் பால் எடுப்பதால் எவ்வளவு தெரியவில்லை

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!