வணக்கம் தோழிகளே,

என் பெயர் பிரியங்கா, நான் புதியதாக சேர்ந்துள்ளேன். நான் 24 வாரம் கர்பமாக உள்ளேன். நான் தூங்கும் போது என்னை அறியாமல் நேராக படுத்து விடுகிறேன். இதனால் குழந்தைக்கு ஏதாவது நேரிடுமோ என்று கவலையயாக உள்ளது. தயவு செய்து ஆலோசனை கூறுங்கள்.

முதலில் கவலைப்படுவதை விடுங்கள்.அது இப்போது உங்களுக்கு நல்லது அல்ல. தூக்கத்தில் தெரியாமல் படுப்பதற்கு ஒன்றும் செய்ய முடியாது.அதற்காக கவலைப்படாதீர்கள்.சந்தோஷமாக இருங்கள்.முடிந்த அளவு ஒரு பக்கமாக படுக்க பாருங்கள்.தலைக்காணி வைத்து விடுங்கள் இன்னொரு பக்கம்.அப்ப உங்களால உடனே திரும்பி நேராக படுக்க முடியாது.

குழந்தைக்கு ஒன்றும் ஆகாது.தீர்க்க ஆயுசோட,நோய் நொடி இல்லாம நூறு வருஷம் உங்கள் குழந்தை நல்லா இருக்கும்.உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மருத்துவரை பார்க்கும்போது கேளுங்கள்.

நல்ல படியாக சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றெடுக்க என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.டேக் கேர் ஆப் யுர் ஹெல்த்.

Expectation lead to Disappointment

மிக்க நன்றி தோழி

ஹாய் ப்ரியங்கா குழந்தை வைத்தில் இருக்கும் போது ஒருக்கழித்துதான் படுக்க கூடும் மல்லாக்க படுத்தால் குழந்தை நெஞ்ஜில் ஏரீக்கொல்லும் என்ட்ரு சொல்வார்கல் அதனால் மல்லாக்க படுப்பதை தவிர்க்கனும்

ஒரு இல்லத்தை இல்லமாக்க பெண்ணால் மட்டுமே முடியும்

ஹாய் nasreen basha நன்றி. நான் தற்போது சாய்வாக படுத்துறங்க பழகிக்கொண்டு வருகிறேன்.தற்போது சற்று நிம்மதியாக உள்ளது. நன்றி nasreen.

பிரியங்கா மல்லாக்க படுத்தா குழந்தைக்கு கொடி சுத்திக்கும்னு அந்த காலத்து பெரியவங்க சொல்லுவாங்க அதனால் இனி ஒருக்களித்து படுங்கள் பொதுவகவே பொம்பளைங்க மல்லாக்கு படுக்கக்கூடாதுனு சொல்வாங்க

மேலும் சில பதிவுகள்