தொடை பெரிதாக உள்ளது

அன்பு தோழிகளே எனக்கு தொடை மிகவும் பெரிதாக உள்ளது,கால் முட்டியை சுற்றி அதிக சதை விழுந்து விட்டது,இதனால் என்னால் படிகள் இறங்கும் போது,கீழே உட்காரும் போது,எழும்போது வலி இருக்கிறது,தொடை சதையை குறைப்பதற்கு,யாராவது யோகா அல்லது உடற்பயிற்சி இருந்தால் கூறுங்களேன்,இந்த உடற்பயிற்சியை எத்தனை மாதங்கள் செய்தால் குறையும்
மேலும் தொடையின் பின்புறம் மட்டும் மிகவும் டிரையாகவும்,கருப்பாகவும் உள்ளது,அதற்கு ஏதாவது வீட்டு வைத்தியம் இருந்தால் கூறுங்கள் தோழிகளே,பிளீஸ்

-

Arusuvai patri sollugalen

உதவ நின்னைத்த உங்கள் நல்ல உள்ளத்திற்கு முதலில் நன்றி. 2012ம் ஆண்டு போடப்பட்ட கேள்வி இது. அந்தச் சகோதரி உங்கள் பதிலைப் பார்க்க்கும் வாய்ப்புகள் வெகு குறைவு.

நீங்கள் புதியவர். வேறு தளங்களில் உள்ளவற்றை இங்கு காப்பி பேஸ்ட் செய்வது தவறு. அறுசுவை நிபந்தனைகளை ஒரு தடவை படித்துப் பாருங்கள். மாற்றுக ஆப்ஷனில் போய் உங்கள் பதிவை நீக்கிவிடுங்கள். பதிவை முழுவதகாக நீக்க இயலாது. நீங்கள் கொடுத்த தகவல்களை நீக்கலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்