ஓமப் பொடி

தேதி: November 12, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (4 votes)

 

கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - ஒரு கப்
ஓமம் - 2 தேக்கரண்டி
வெண்ணெய் - 50 கிராம்
எண்ணெய் - அரை லிட்டர்
உப்பு - 2 தேக்கரண்டி


 

ஓமப் பொடி செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் ஓமத்தை போட்டு 3 நிமிடம் வறுத்து எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
வறுத்து எடுத்து வைத்திருக்கும் ஓமம் ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
அரிசி மாவு, கடலை மாவு இரண்டையும் தனித்தனியாக சலித்துக் கொள்ளவும்.
அதில் பொடி செய்த ஓமத்தை சலித்து அதில் சேர்த்துக் கொள்ளவும்.
சலித்தவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுடன் வெண்ணெய் போட்டு பிசையவும். பிறகு அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசையவும்.
முறுக்கு உரலில் ஓமப்பொடி செய்யும் அச்சியை போட்டு உரல் கொள்ளும் அளவிற்கு மாவை வைக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உரலில் உள்ள மாவை எண்ணெயில் சுற்றிலும் பிழிந்து விடவும்.
பொன்னிறமாக வந்ததும் எடுத்து ஒரு தட்டில் வைத்து மேலே கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து தூவவும்.
இந்த உணவைத் தயாரித்துக் காட்டியவர், திருமதி. ஜெயா ரவி அவர்கள். வகை வகையான சைவ சமையல்கள் செய்வதில் திறன் வாய்ந்தவர். அனைத்து வகை பிராமண உணவுகளையும் சுவைபட தயாரிக்கக் கூடியவர். புது வகை உணவுகளை கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றார்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பண்டிகை ஸ்பெஷல்... சூப்பரா இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நாளா தேடிடுயிருதேன், கண்டிபா செய்து பார்க்கிறேன்,எங்க வீட்டில் திபாவளிக்கு இதுதான் ஸ்பெஷல்,திபாவளி நல்வாழ்துக்கள்

மணிமேகலை

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

எனக்கு ஓமப்பொடி ரொம்ப பிடிக்கும் கடையில் வாங்கி சாப்பிடுவேன் இப்போ அதை வீட்டில் எப்படி செய்வது என்று கற்று தந்து விட்டீங்க ரொம்ப நன்றிக்கா...:)

SSaifudeen:)