எனக்கு ஒரு உதவி

எனக்கு ஒரு உதவி 4மாதக்குழந்தைக்கு செரிலாக் கொடுக்கலாமா வேரு என்ன கொடுக்கலாம் டாக்டரிடம் கேட்டதுக்கு ரெகமென்ட் பன்னமாட்டோம் நீங்கள் வேன்டாக்கொடுங்கன்னு சொல்றாங்க என்ன செய்யலாம்னு சொல்லுங்க

நிஷா அக்கா, நாலு மாத குழந்தைக்கு செரிலாக் கொடுக்க வேண்டாம். கேழ்வரகு கஞ்சி வேண்டுமானால் கொடுக்கலாம். இரவு கேழ்வரகை ஊறவைத்து காலையில் மிக்ஸியில் மைய அரைத்து மெல்லிய காட்டன் துணியில் வடிகட்டி காய்ச்சி விரும்பினால் சர்க்கரை சேர்த்து கொடுக்கலாம்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

தாய்ப் பால் நன்றாக இருந்து , குழந்தையும் ஒழுங்காக குடித்தால் 6 மாதம் வரை பொறுதிருக்கலாம் . இல்லையென்றால் மட்டும் BABY RICE என்று கிடைக்கும் அதை கொடுத்துப் பாருங்கள். எனக்கு தெரிந்து செரிலாக் 6 மாதத்தில் தான் ஆரம்பிப்பார்கள். 4மாதத்தில் கொடுப்பதற்க்கென்று செரிலாக் இருந்தால் (4 months+)
அதை கொடுக்கலாம், ஏனென்றால் சில குழந்தகளுக்கு ஒத்துக் கொள்வதில்லை. எதுவும் முதலில் ஆரம்பிக்கும் போது மிகச் சிறிய அளவில் கொடுத்துப் பாருங்கள் ,சீரணம் ஆகி விட்டால் தொடரலாம்.

நாலு மாதம் என்றால் நெஸ்டம் ரைஸ் தான் என் மருத்துவர் சொன்னார்..அதில தண்ணீரில் கரைத்து கஞ்சி போல கொடுக்க

நிஷாக்கா குழந்தைக்கு நாலு மாதம்தானே அக்கா ஆகுது? எதுக்கு அவசரம்? ஒரு வேளை தாய்ப்பால் குறைவா சுரக்கிறதானா நீங்க இயற்கையா உணவுகள் மூலமோ அல்லது டாக்டரிடம் தாய்ப்பால் நன்றாக சுரக்க மாத்திரையோ தாயை எடுத்துக்க சொல்லுங்க சேயை கஷ்டபடுத்த வேண்டாமே. தாய்ப்பால் நன்றாக சுரக்க மாத்திரையை இப்போதே எடுத்து கொள்வது நல்லது. டாக்டரிடம் அழைத்து செல்லுங்கள். தயவுசெய்து 4 மாதத்தில் இணைஉணவு வேண்டாம் அக்கா குழந்தைக்கு இப்போ.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

தளிகா வானி ஷமினா நித்யா எனக்கு உடனே பதில் அனுப்பினதுகு நன்றிபா தாய்பால் 4நாள்தான் முழுசாய்ருந்துச்சு அதுக்கப்பிறகு பால் சுறக்க மாத்திறை பவ்டர்லாம் எழுதிக்கொடுத்தாங்க இல்ல பிபிலாக்னு ஒரு பவ்டர்பால்தான் கொடுக்கிறோம் அதான் கேடெடேன்

மேலும் சில பதிவுகள்