என் மன வேதனையை போக்குங்கள்

என் அன்பு தோழிகளே,
வணக்கம்.நான் தான் உங்கள் அன்புத்தோழி மாணிக்கவள்ளி .இங்கு நலம்.அனைவரின் நலம் அறிய ஆவல்.என் முதல் பையன் நிகில் என்பதை அனைவரும் அறிவீர். தற்போது இறைவன் எனக்கு இரண்டாவது பொக்கிஷத்தை கொடுத்துள்ளார். எனக்கு பெண் குழந்தை பிறந்து 4 மாதம் ஆகிரது.அவள் பெயர் ஸாசினி.அவளுக்கு உங்கள் அனைவரின் ஆசிர்வதத்தை வேண்டுகிறேன்.இப்போது எனக்கு 3 பிரச்சனைகள்.1)எனக்கு தாய்ப்பால் போதவில்லை எனவே தாய்ப்பாலை அதிகரிக்க என்ன செய்ய .நான் Doctor-ரிடம் கேட்ட போது அவர்கள் Lactare மற்றும் PRO-PL இரண்டயும் குடுத்தாங்க.நானும் இரண்டையும் எடுத்து வருகிறேன். தாய்ப்பால் ஓரளவு போதுமானதாக இருக்கிறது.2).என் குழந்தை பச்சை கலரில் motion போகிறாள். எனக்கு எதனால் என்று தெரியவில்லை.3) இது தான் எனக்கு மிகுந்த மனவேதனையை தருகிறது.என் பையன் Nursery போகிறான்.அவன் எதுவும் சாப்பிடுவதில்லை.குடுத்துவிடுவது எல்லாம் அப்படியே வீடுக்கு வருகிறது. எனக்கு ஆறுதல் கூறாமல் நான் என்ன செய்ய என்று கூறுங்கள்.நான் dubai-யில் உள்ளேன். நான் பிஸ்கட், இட்லி, தோசை,ஆம்லேட்,cheese bread, noodles,apple,grapes,banana எல்லாம் கொடுத்து பார்த்துவிட்டேன்.அவன் சாப்பிடாமல் மிகவும் மெலிந்துவிட்டான்.நான் என்ன செய்ய என்றும் கூறுங்கள்.எனக்கு முன்னால் உள்ள Thread- யை பார்க்க கூட நேரம் இல்லை.தயவுசெய்து சிரமம் பாராமல் என் துயரம் துடையுங்கள்.

உங்கள் அன்புத்தோழி,
மாணிக்கவள்ளிஅமர்நாத்

நாங்கள் அனைவரும் நலமாக உள்ளோம்.என் அக்கா மகனும் இப்படி தான் இருந்தான் அவன் எப்படி உயிர் வாழ்கிறான் என்ற சந்தேகம் கூட எங்களுக்கு அடிக்கடி வரும் அந்த அளவுக்கு எதுவுமே சாப்பிட மாட்டான்...ஆனால் நல்லா சுறுசுறுப்பா இருப்பன். இதனால் எங்கள் பேமிலி டாக்டரிடம் அவனை அழைத்து சென்றோம்.
அவர் பசி எடுக்க ஒரு டானிக் கொடுத்தார் அதை குடித்த உடன் ஆளு பசிக்குதுன்னு வாய் திறந்து கேட்டு சாப்பிட ஆரம்பித்தான் இப்போ பரவா இல்லை.இது உங்களுக்கு சரின்னு பட்டா உங்களுக்கு தெரிந்த டாக்டரிடம் காட்டுங்கள்.இன்னும் தெரிந்த தோழிகள் நிறைய பேர் இருக்காங்க உங்களுக்கு வேண்டிய பதிலை அவங்க வந்து சொல்லுவாங்க.மற்ற இரண்டு கேள்விகளுக்குண்டான பதில் எனக்கு தெரியலைப்பா.

SSaifudeen:)

அன்பு மாணிக்கவல்லி,

உங்கள் மூன்று கேள்விகளுக்கும் பதில் வரிசைப்படி
http://www.arusuvai.com/tamil/node/5108
http://www.arusuvai.com/tamil/node/24221
http://www.arusuvai.com/tamil/node/20140

என்றும் அன்புடன்,
கவிதா

மகன் எப்போதிருந்து இப்படி சாப்பிட மறுக்கிறான்? மகள் பிறந்த பின்னா? அப்படி இருந்தா கொஞ்சம் நேரம் ஒதுக்கி வீட்டில் அவன் அருகில் இருந்து ஊட்டி விடுங்க. நீங்க அவனை கவனிக்கலன்னு எண்ணம் இருக்க வாய்ப்பிருக்கு. கொஞ்சம் அவனுக்கு நேரம் ஒதுக்கி அன்பாய் அவனோடு விளையாடி ஊட்டினால் சாப்பிடுறானா பாருங்க. பள்ளியில் சாப்பிடாவிட்டாலும் வீட்டில் நல்லா சாப்பிட வைங்க. எங்க வீட்டில் 3 குட்டீஸ் தங்கை குழந்தையோடு சேர்த்து. 3ம் ஒன்னா உட்கார வெச்சா சில நேரம் நல்லா சாப்பிட வைக்கலாம், சில நேரம் நாமும் சாப்பிடாம டென்ஷானாகி ஓடிடலாம். அப்படி தான் பிள்லைகள். ஒருவரை காட்டி ஒருவருக்கு ஊட்டி விட பாருங்கள்.

பசி எடுக்காம இருக்க இன்னொரு காரணம் டாக்டர் என் மகனுக்கு சொன்னது... 2 வயதை தாண்டினால் 6 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது குறைந்த 1 வருடத்துக்கு ஒரு முறை வயிற்றில் உள்ள பூச்சிக்கு மருந்து கொடுக்க வேண்டும். அதை உங்கள் மருத்துவரிடம் கேட்டு கொடுங்கள். என் மகனுக்கு இது நல்லா கேட்டுச்சு.

மகளுக்கு பால் கிடைக்க... உணவில் கீரை மற்றும் பூண்டு சேருங்கள். இரவில் பூண்டு உரித்து போட்டு காய்ச்சிய பாலை குடிங்க. டாக்டர் பால் சுரக்க கொடுக்கும் மாத்திரைக்கு ஏதும் பின் விளைவுகள் இருக்கா என கவனிக்கவும். எனக்கு இதை சாப்பிட்டு ஃபீட் பண்ணா என் மகள் தூங்கி வழிவா. உணவே நல்லா மருந்து. மனதளவில் நமக்கு பால் கிடைக்கிறது, நம் குழந்தைக்கு நாம் தான் உணவளிக்க வேண்டும் என்று ஆழமாக எண்ணம் இருக்க வேண்டும். இந்த எண்ணமே பால் கிடக்க செய்யும். 50% உணவும், ஆரோக்கியம் காரணம் என்றால் 50% நம் எண்ணம் தான் பால் கிடைக்க உதவும். காரணம் இந்த ஹார்மோன்கள் நம் மனதையும் சார்ந்ததே.

பச்சை மோஷன்... நீங்க சாப்பிடும் உணவு ஒரு காரணமா இருக்கலாம். இல்லன்னா குழந்தைக்கு வேறு ஃபார்முலா கொடுக்குறீங்களா? அயன் டானிக் ஏதும் கொடுக்கறீங்களா? இவையும் காரணமா இருக்கலாம். இது எதுவும் இல்லை எனில் டாக்டரை ஒரு முறை பார்த்து ஆலோசனை பெருவது நல்லது. பயம் ஒன்றும் வேண்டாம். எப்பவுமே எதையாவது பார்த்து பயந்துகிட்டே இருப்பதை விட சிரமம் பார்க்காம மருத்துவ ஆலோசனை கேட்டுட்டா மனசுக்கு நிம்மதி கிடைக்கும்.

உங்கள் மன வேதனைக்கு காரணம் இரண்டு பிள்ளைகளை சேர்ந்தாப்பல வெச்சு பார்ப்பது. இன்னும் நீங்க அதுக்கு முழுசா தயாராகல. அதுக்கு முதல்ல உங்களை தயார் செய்துக்கங்க. கவலை வேண்டாம். ஒரு காலத்தில் 10 பெத்து ஒன்னா வெச்சு வளர்த்தாங்க... இப்ப இருக்க பிள்ளைகளா இருந்தா நம்மை பயித்தியகாரங்க ஆக்கிடும். :) 2 பிள்ளைகள் தானே... பார்த்துக்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தாய் பால் சுறக்க கிராமங்களில் வயல் நண்டு சமைத்து சாப்பிடுவார்கள். என் அக்கா கூட சாப்பிட்டு நல்ல பலன் உடனே கிடைத்தது. நீங்கள் இருக்கும் இடத்தில் கிடைக்க சாத்தியம் இல்லை. முடிந்தால் முயற்சித்து பாருங்கள். இல்லைஎனில் பூண்டு அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.

ovvoru nodiyaiyum rasithu val

பதிலளித்த அனைத்து தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.நீங்கள் கூறிய ஆலோசனையை செயல்படுத்துகிறேன்.

என் மகன் நான் ஊட்டினால் சாப்பிடுகிறான். 3 1/2 வயது ஆகியும் அவனாக சாப்பிடுவதில்லை.நீங்களாக எடுத்து சாப்பிடுங்கள் என்றால் ஒரே அழுகைதான் சாப்பாடை தொடமாட்டான்.அதற்கு என்ன செய்ய என்று கொஞ்சம் கூறுங்கள்.
ஒரு சிறிய சந்தேகம்.//மகளுக்கு பால் கிடைக்க... உணவில் கீரை மற்றும் பூண்டு சேருங்கள். இரவில் பூண்டு உரித்து போட்டு காய்ச்சிய பாலை குடிங்க//. இதன் முறை மற்றும் எத்தனைமுறை ஒரு நாளுக்கு குடிக்கவேண்டும் என்பதை மட்டும் கூறுங்கள்.நன்றி

உங்கள் அன்புத்தோழி,
மாணிக்கவள்ளிஅமர்நாத்

Hai manickavalli mam epdi irkeenga?
Neengal oottinal payyan saapiduhiran endral veetil irukum samayangalil neengalae ootti vidungal..3 1/2 vayadhu kulandhai thaanaha saapidaathadu oru vishayamae illanga..andha kulandhaiya thannala neenga saapida solradhu tan oru velai andha kulandhaiku saapaatin mel veruppu varuvadharku kaaranamaha irukalam madam..mudindha varai anbaha neengalae kudungal nanraha saapidum...

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

ஹாய் மாணிக்கவள்ளி உங்கள் பதிவை பார்த்தேன், ஒவ்வொருநாளும் காலையில் ஒரு பூண்டு முழுவதையும்(10, 15 பல்லு) சுட்டு சாப்பிட்டு, அத்தோடு பசும்பால் காய்ச்சி குடியுங்கள். வெறும் வயிற்றில் செய்யுங்கள். பிறகு 1மணி நேரம் கழித்து காலை உணவை எடுத்துக்கொள்ளுங்கள். காபி, ரீ இப்போதைக்கு வேண்டாம்.அதிலும் கறுப்புத்தேனீர் தவிருங்கள். ஹார்லிக்ஸ் போல் இலங்கைப் புரடெக்ட்டான நெஸ்ரோமல்ட் எனும் பானம் நல்லது, முடிந்தால் வாங்கி குடியுங்கள். சோம்பு (பெருஞ்சீரகம்) அவித்துக் குடித்தால் நல்லதாம், இங்கே ஜேர்மனியில் சோம்பு ரீ யாக இருப்பதால் நான் அதை குடித்தேன். பூண்டும் பாலும் ரொம்ப முக்கியம்.

தோழியே, பூண்டை பாலிலேயே வேக வைத்து சாப்பிடலாம். முக்கியமாக காலையில் சாப்பிட்டால் நல்ல பலன் அளிக்கும். சுண்டைக்காய், பால் சுறா சாப்பிட்டாலும் பால் சுரக்கும். மனக்கவலை இருந்தால் அது பால் சுரப்பை கட்டுபடுத்தும். அதனால் நீங்கள் கவலையை விட்டு மனதை எப்போதும் சந்தோஷமாக வைத்திருங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்ப்ஸ் சொன்ன மாதிரி தான் அம்மா தருவாங்க. ஆனா எனக்கு அந்த அளவுக்கு பால் குறைபாடில்லை என்பதால் இரவில் மட்டும் தான் குடித்து வந்தேன். தோல் நீக்கி பாலில் ஒரு 5 -6 பல் போட்டு கொதிக்க வெச்சு பூண்டு வெந்ததும் எடுத்து பூண்டை சாப்பிட்டு அந்த பாலையும் குடிங்க. கல்ப்ஸ் சொன்னது போல் காலையில் குடிச்சு பாருங்க.

மீன் ஒரு வகை இதுக்கு நல்லதுன்னு கேட்டிருக்கேன், ஆனா எனக்கு பெயர் நினைவில்லை. மீனவ குடும்பங்களீல் அந்த மீன் தான் தினம் கொடுப்பாங்கன்னு ஒரு மீனவ நண்பர் சொல்லி கேட்டிருக்கேன். அது கல்ப்ஸ் சொன்ன மீனாக தான் இருக்கும்... நீங்க அதையும் எடுத்துக்கங்க.

மகன்... அப்போ உறுதியா அவனுக்கு உங்கள் கவனம் தேவை. அவனை தனியா சாப்பிட சொன்னா அவன் அவனை கவனிக்கலன்னு நினைக்கிறான். 3 1/2 வயது தானே... என் மகளுக்கு 4 1/2... நான் தான் ஊட்டுறேன். அவளா சாப்பிட்டா ஒழுங்கா சாப்பிட மாட்டான்னு. நம்மையே பாருங்க... அம்மா கையால் உருட்டி தந்தா கூட 2 உருண்டை உள்ள போகும். :) அதனால்... இதுக்காக வருந்தாம மகனுக்கு முடிஞ்சவரை நீங்க நல்லா ஊட்டி விடுங்க. இதை செய்ய மறுத்தா குழந்தையால் தான் நீங்க அவனை கவனிக்கலன்னு நினைப்பான்... கோபம் வரும், ஃபீல் பண்ணும் பிள்ளைகள். பாவம் பிஞ்சு மனம்... கொஞ்சம் சிரமம் பார்க்காம உங்க டென்ஷனை அவனிடம் காட்டாம ஊட்டி விடுங்க. ஓக்கேவா??? :) எல்லாம் சரியாகிடும். இன்னும் 6 மாசம்... பாப்பா நடக்க துவங்கினா அண்ணனும், தங்கையும் ஃப்ரெண்ட் ஆயிடுவாங்கா, ஒன்னா விளையாடுவாங்க... நீங்க ஃப்ரீ ஆயிடுவீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு மாணிக்கவல்லி,
தாய்பால் குறைவாக இருக்கிறது அதனை அதிகப்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும். பால் குடிக்கும் போது குழந்தை அழுகிறது. பால் குடிக்க மறுக்கிறது. ஆனால் பாப்பாவுக்கு பசி எடுக்கிறது. மலம், சிறுநீர் கழிக்கும் போது அழுது பின் மோசன் போகிறது.

மேலும் சில பதிவுகள்