தலைவலி - உதவி தேவை

அன்பு தோழிகளே... நேற்று தலைக்கு குளித்ததில் இருந்து தலை வலி. நீர் இருக்குமோ என நினைத்தேன். ரூபி கை வைத்தியம் சொன்னாங்க. செய்தேன். நேற்று பரவாயில்லை. ஆனால் இன்று காலை கண் விழிக்கும் போதே தாங்க முடியாத தலை வலி. வலது பக்கம் மட்டுமே வலி இருக்கிறது.

போதாதுக்கு எழுந்ததில் இருந்து வாந்தியும் சேர்ந்து விட்டது. வயிற்றை பிரட்டி, கை காலெல்லாம் உதருது. இப்போ ஒரு மணி நேரம் முன்னாடி தலை வலிக்கு மாத்திரை போட்டு தூங்கிட்டேன், இப்போ குறைஞ்சிருக்கு. ஆனாலும் வலி முழுமையா போகல. வயிரு இன்னுமும் ஏதோ செய்கிறது.

ஏன் இப்படி திட்டிர்னு? எதாவது வீட்டு வைத்தியம் சொல்லுங்க ப்ளீஸ்...

உதவி ப்ளீஸ்....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி வயிற்றில் அஜீரணம் இருந்தாலும் தலைவலியோடு வாந்தியும் இருக்கும். வயிறு பொருமல் போலவோ வயிற்றில் ஏதோ செய்வது போலவோ இருந்தால் இன்னிக்கு ரொம்ப லைட்டா தயிர்சாதம் அல்லது கஞ்சி போல காரம் எண்ணெய் இல்லமல் சாப்பிடுங்க. எதுவும் சாப்பிடாமல் மட்டும் இருந்திடாதீங்க.

ஜெலூசில் இருந்தால் போட்டுக்கோங்க. நல்ல வெதுவெதுப்பான தண்ணீர் குடிங்க. கேஸ்ட்ரிக் போல இருந்தால் வெது வெதுப்பன தண்ணீரில் கால்கரண்டி பெருங்காயம் சிறிது உப்பு சேர்த்து குடிங்க.

தலைவலிக்கு லைட் டோஸ் பாராசிட்டமால் எடுத்துக்கோங்க. இஞ்சி பற்று போட்டாலும் குறையும். ஆனால் எனக்கு ஸ்கின் பாதிக்கும் அதனால் நான் செய்ய மாட்டேன். நீங்களும் சென்சிட்டிவ் ஸ்கின்ன் னா வேண்டாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வனிதா,

நல்லா தண்ணிய கொதிக்க வைச்சு தைலம் போட்டு ஆவி பிடிங்க ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஆவி பிடிங்க, நல்லா தூங்குக, தலைவலி குறையும் வனிதா,

மணிமேகலைராம்குமார்

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

உடனடி பதிலுக்கு நன்றி கவிசிவா. ரூபி நேற்று ஃபேஸ் புக்கில் இஞ்சி பத்து சொன்னாங்க, எனக்கு ஒன்னும் பண்ணல, ஓரளவு தலைவலி குறைஞ்சுது. நைட் வலிக்கு மாத்திரை இல்லாம தூங்கினேன். காலை ஏன் இப்படி ஆச்சுன்னு தான் புரியல. ஏதும் ஹெவியா சாப்பிடவும் இல்ல. நீங்க சொன்ன மாதிரி இன்னைக்கு லைட்டா சாப்பிடுறேன். வயிறு அப்சட் ஆகல, ஆனா என்னவோ போல இருக்கு. ரொம்ப படுத்துது, ஒன்னும் முடியல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்னும் சரியகலையா? சுக்கு பவுடர் இருந்தால் வெண்நீரில் குழைத்து பத்து போட்டு பாருங்க........வாமிட் க்கு தெரியலை பித்தம் வாந்தியா?லெமன் ஜூஸ் குடித்து பாருங்க..........இல்லேன்னா புதினா இழை10 ,உலர் திராட்சை15 , முழு மல்லி 1ஸ்பூன்,சுக்கு1 இன்ச் துண்டு, தட்டி போட்டு நல்லா கொதிக்க வைத்து கஷாயம் ஆனதும் லெமனும்,தேனும் கலந்து குடித்து பாருங்க...........

நீர் இருக்குமோ? அடுப்பில் சுடு தண்ணி வெச்சுட்டு நிறுத்திட்டேன் இருக்காதுன்னு. ;( மீண்டும் சூடு பண்றேன். நன்றி மணிமேகலை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிக்கா பெப்சி இலனா கொகொ கோலா ல கொஞ்சம் உப்பு போட்டு உடனே குடிச்சிங்கனா தலைவலி போகும் ஸ்டமக் பெயினும் குறயும்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஆமாம் ரூபி, நேற்று நீங்க சொன்ன இஞ்சி வைத்தியம் செய்தேன், கேட்டுது. ஆனா இன்று எதுக்கும் அடங்கல. சுக்கு இருக்கு. புதினா இல்லை. பித்தமா... தெரியல. சாப்பாடு ஏதும் வரல. காலையில் குடிச்ச நீர் மட்டுமே வாமிட் பண்ணேன். கஷாயம் போய் வைக்கிறேன். நன்றி ரூபி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தலைவலி கூடவே ஸ்டமக்கும் வலிச்சா ப்ளாக் டீ கூட லெமன் ஜுஸ் சேர்து ரென்டு மனி நேரதுக்கு ஒரு தடவ குடிசா கிலியர் ஆய்டும்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

எனக்கும் சிலவேளைகளில் இப்படி தலைவலி வாந்தி வயிறு எதோ போல இருப்பது எல்லாம் சேர்ந்து வந்து படுத்தும். மருத்துவர் எனக்கு சொன்ன காரணம் கேஸ்ட்ரிக். வேளாவேளைக்கு ஒழுங்காக சாப்பிடாமல் நன்கு பசி எடுத்து அதுக்கு பின்னாடி சாப்பிட்டால் இந்த பிரச்சினை எனக்கு வரும். ஜெலூசிலும் பாராசிட்டமாலும் எடுத்துக்க சொல்லியிருக்கார்.

தலைநீர் இறங்கி இருக்குன்னா தோழி சொன்ன மாதிரி ஆவி பிடிங்க. தலைக்கு குளித்த உடன் ஆக்ஸ் ஆயில் (axe oil) காதின் பின் புறம், பிடறி மற்றும் உச்சந்தலையில் ஒவ்வொரு சொட்டு தேய்த்தால் நீர் கோர்க்கும் பிரச்சினையே வராது. இங்கே குழந்தைகளுக்கு இது போல் செய்வாங்க. நான் எனக்கும் செய்து நல்ல பலன் இருக்கிறது

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்