என் வேதனைக்கு வலி [கன்சீவ்]

அன்பு தோழிகளே நான் மிகவும் வேதனையில் உள்ளேன். எனக்கு ஒரு சில ஆலோசனை கூறுங்கள். நான் கன்சீவ் ஆகி 80 நாட்கள் ஆனது. டாக்டரிடம் செக்கப் செய்தேன். கருவில் நீர் கோர்த்து உள்ளது. என்று சொன்னதால் அபசன் செய்து விட்டேன். ஆனால் என்னால் தாங்க முடியவில்லை. மீண்டும் சீக்கிரமாக கரு உருவாக என்ன. எவ்வளவு நாள் தள்ளி போட வேண்டும். கரு உருவாகும் வரை என்னால் நிம்மதி ஆக இருக்க முடியவில்லை. வயது 31 . 2 வது குழந்தை

மனசை முதல்ல சமாதானம் பண்ணிக்கங்க. குழந்தை ஆரோக்கியமா பிறக்க தானே செய்தாங்க... நல்ல ஆரோக்கியமான குழந்தை சீக்கிரம் பிறக்கும். கவலை வேண்டாம். ஒரு முறை அபார்ஷன் செய்தால் குறைந்தது 6 மாத இடைவெளி வேண்டும் அடுத்த கரு உண்டாகன்னு சொல்வாங்க. இல்லன்ன கர்ப்பப்பை புண்ணாக இருக்குமாம். அடுத்த குழந்தையில் வளர்ச்சியை அது பாதிக்குமாம். அதனால் மனசையும் சரி செய்துகிட்டு, உடம்பையும் சரி செய்துகிட்டு, மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக அடுத்த குழந்தையை பெற்றெடுங்க. உங்களூக்காக எங்கள் பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நொம்ப நன்றி வனிதா. கர்ப்பப்பை புண் ஆர 6 மாதங்கள் ஆகுமா வனிதா. நான் லவ் மேரேஜ் என்னுடைய அம்மா அப்பா பேச மாட்டார்கள். நான் குழந்தை பெற்று கொண்டால் சேருவார்கள் என்ற எண்ணம் அதிகம் ஆகி என் வேதனை அதிகம் ஆகிறது. அதனால் 6 மாதம் என்னால் தாங்க முடிம தெரியவில்லை

சுகுணா வருத்த படாதிங்க, எல்லாம் சிக்கிரம் சரி ஆகிடும். தவற நினைக்காதிங்க. 2-வது குழந்தை-நு சொல்லி இருக்கீங்க...

எனக்கு ஏறுகனவே ஒரு பையன் இருக்கிறான். வயது 9 , அடுத்தது தான் இப்படி ஆகி விட்டது. வனிதா. எனக்கு வயது 31 , என் பையன் இன்னம் பெரிய பையன் ஆகி விட்டால் அடுத்த குழந்தை பெற்று கொள்ள கஷ்டமாக உள்ளது.

9 வயது தானே... அதெல்லாம் பெரிய வித்தியாசம் இல்லை. இன்னும் ரொம்ப அன்பா இருப்பாங்க :) 30 வயதுக்கு முன்னாடியே ஒரு குழந்தை இருப்பதால் இரண்டாவது உண்டாவதில் சிரமமே இல்லை. பயப்படாம இருங்க. 6 மாதம் இடைவெளி... ஆரோக்கியமான பிள்ளைக்காக. அவசரம் வேண்டாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்