வாசிங் மெசின்

வாசிங் மெசின் பயன்படுத்தும் முறை?
வாசிஙமெசினில் வெனிஸ் ( vanish ) பயன்படுதலாமா?
or வாசிங் சோடா பயன்படுதலாமா?
வெனிஸ் ( vanish )பயன்

ஹாய் வாஸிங் மெஸின் ல வாஸிங் சோடா பயன்படுத்த கூடாது என் அத்தை வீல்ட அவங்க இப்டி யுஸ் பனிதான் மிசின் உள்ள இருக்குற வயர்லாம் ஒரு மாதிரி ஸ்மெல் வர ஆரம்பிசு அப்புறம் சர்விஸ் பனாங்க் சோ நீங்க வானிஸ்ஹே யுஸ் பனுங்க சர்ப் போடும் போதெ கொஞ்சம் வானிஸ் ஊத்தி விட்டுங்க .

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

தோழீகளே நான் புதிய வாஷிங்மெஷின் வாங்கலாம் என்றுள்ளேன்.எந்த ப்ராண்ட் வாங்கலாம் என்று அவரவர் அனுபவத்தை கூறுங்கள்

ஏமாறாதே|ஏமாற்றாதே

Washing machine ல் மிதியடிகளை துவைக்கலாமா?. 15 க்கும் மேல் உள்ளது மிதியடி. கையில் துவைக்க கடினமாக உள்ளது.உதவுங்கள் தோழிகளே.

என்ன மாதிரி மிதியடி?
துணியைப் பொறுத்து துவைக்கலாம். பனியன் துணியில் பின்னியவை - பிரச்சினையே இல்லை. ஆனால் முதலில் நன்றாக மண் போக தட்டிவிடுங்கள். அல்லாவிட்டால் மெஷின் கெட்டுப் போகலாம். இது உடனே தெரியாது. மண் தேங்கும் இடத்தில காலப்போக்கில் தேய்மானம் ஏற்படும்.

மெஷின் எவ்வளவு எடை கொள்ளும் என்பதையும் கவனித்துப் போடுங்கள்.

ரப்பர் அடிப்பக்கம் உள்ள rug... கெட்டுப் போகலாம்.
தும்பு மிதியடிக்கு மெஷின் சரிவராது.

‍- இமா க்றிஸ்

மிதியடிகளை வாஷிங்மிஷினில் போடலாம்.. மண் போக நன்றாக தட்டிவிட்டு ஹேண்ட் வாஷிங் பவுடர் போட்டு 2 மணி நேரம் ஊற விடுங்க.. பிறகு அலசி விட்டு போடுவதனாலும் போடலாம்.. தண்ணீரை பிழிந்து விட்டும் போடலாம்...

ஊற வைத்து விடுவதால் அதிலுள்ள மண் முக்கால்வாசி போய்விடும்.. மிஷினுக்கு பிரச்சனை வராது.. :-)

அவந்திகா

நன்றி இமா மா. பனியன் துணியில் பின்னியவை தான் மா. இனி சுலபமாக துவைத்துவிடலாம் என நினைக்கிறேன்.:-):-). தும்பு மிதியடியா?? அப்டினா தேங்காய்நாரில் அல்லது சணலில் பின்னியவையா.?!. அதுவும் இரண்டு உள்ளது..

நன்றி அவந்திகா. ஊற வைத்து போட்டுப்பார்க்கிறேன். தங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி தோழி.

//ஊற வைத்து போட்டுப்பார்க்கிறேன்.// உண்மையில் அதுதான் நல்லது. ஊற வைத்துப் போடச் சொல்லித் தான் நானும் முதலில் தட்டியிருந்தேன். நீங்கள் ஈரத்துடன் அதைத் தூக்கிப் போட வேண்டும். டாப் லோடிங் என்றால் அந்தப் பாரத்தைத் தூக்கிப் போடக் கஷ்டப்படுவீர்களோ என்று தோன்றிற்று.

மிதியடிகளைத் தனியாகக் கழுவுங்கள்.
எங்காவது தையல் பிரிந்திருந்தால் நினைவாக அதைப் பொருத்திவிட்டுப் போடுங்கள்.

தும்பு - தேங்காய்நார் தான். இவற்றை மெஷினில் போட வேண்டாம்.
சுத்தம் செய்ய- முதலில் நன்றாக மண் போகத் தட்டிவிடுங்கள். தும்பு எங்கள் தலைமுடியைச் சேர்த்துவைக்கும். ஸ்டீல் ப்ரஷ் / dog grooming comb கொண்டு முடியை நீக்குங்கள். நனைத்துவிட்டு சோப் பௌடரைத் தூவி இரண்டு பக்கமும் நுரைக்க ப்ரஷ் செய்யுங்கள். ஓடும் நீரில் அலம்பிவிட்டு வெளியே வைத்து நீரை வடிய விடுங்கள். இவற்றை ஊற வைத்தால் வாடை வரலாம்.

சணல் ஊற வைத்தால் விரைவில் உக்கிப் போகும். மெஷினில் போட்டால் விரைவில் கெட்டுப் போகலாம். இதுவும் ஊற வைத்தால் வாடை வரும்.

‍- இமா க்றிஸ்

தங்கள் குறிப்புக்கு மிகவும் நன்றி இமா மா. எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அறுசுவையின் வழியாக கிடைக்கும குறிப்புகள். நன்றி மா. மகிழ்ச்சியுடன் சாரு.

மேலும் சில பதிவுகள்