தோழிகளே பித்த வெடிப்புக்கு எதாவது வீட்டு வைத்தியம் சொல்லுங்களே....

தோழிகளே பித்த வெடிப்புக்கு எதாவது வீட்டு வைத்தியம் சொல்லுங்களே....

கவிதா இரவு படுக்கப்போகும் முன் வெதுவெதுப்பான தண்ணீரில் காலை சுத்தமா கழுவிட்டு காட்டன் துணியால ஈரம் போக துடைச்சிட்டு தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளை குழைத்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில் பூசிவிட்டு படுங்கள். வலியும் ரணமும் சீக்கிரம் சரியாகும். எப்பவும் வீட்டிற்குள்ளும் செருப்பு போட்டு இருங்க.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ரொம்ப நன்றி நித்யா...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

தோழிகளே உங்ககிட்ட இருந்து இன்னும் இன்னும் நிறைய நிறைய எதிர்பாக்குறேன்...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

கவிதா நீங்க வீட்டுவைத்தியம்னு கேட்டதால மஞ்சள்தூள் தேங்காய் எண்ணெய் தேய்க்க சொன்னேன் பா. ஃபார்மஸி மருந்து சொல்லலாமா?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

தேன்மெழுகை உருக்கி அதனுடன் நல்லெண்ணெய் மஞ்சள் கலந்து சூடாக்கி ஆறவைத்தால் ஆயின்மென்ட் பதத்தில் கிடைக்கும். இரவு படுக்கப் போகும் முன் காலை நன்றாக கழுவி துடைத்து விட்டு இதை வெடிப்புகளில் போட்டு படுத்தால் நல்ல குணம் தெரியும். இது ஒரு சித்த மருத்துவர் சொல்லிக் கொடுத்த மருந்து. எங்க வீட்டில் நிறைய பேருக்கு பலன் கொடுத்திருக்கிறது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி தேன்மெழுகு எங்கே கிடைக்கும் கவி?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

mam enaku kal patham muluvathum vedipu athikama ullathu etharkum nan eppadi seithal palan kidikuma pls

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நித்யா.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

meega பித்த வெடிப்புக்கு இது நல்ல பலன் தரும். உங்களுக்கு பாதம் முழுவதும் இருக்குன்னு சொல்றீங்க எதற்கும் நீங்க மருத்துவரை பார்ப்பது நல்லது. சிலருக்கு அலர்ஜியால் கூட பாதம் முழுவதும் வெடிக்கும்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

DOCTOR KITTA KETTATHRKU (MY UDAMBU HEET ATHIKAM ) HEETNALA IRUKU ETHARKU ONNUM PANNA MUDIYATHUNU SOLLITAGA

மேலும் சில பதிவுகள்