தோழிகளே பித்த வெடிப்புக்கு எதாவது வீட்டு வைத்தியம் சொல்லுங்களே....

தோழிகளே பித்த வெடிப்புக்கு எதாவது வீட்டு வைத்தியம் சொல்லுங்களே....

கொத்தமல்லி துவையல் செய்து சாப்பிடுங்கள் ,பித்தம் குறையும். பித்த வெடிப்பு உள்ள இடத்தில் வாசலின்(Vasaline) தடவுங்கள்,சரியாகும் .காலில் சாக்ஸ் போட்டுக் கொள்ளுங்கள்,பித்த வெடிப்பு வராது.

வெடிப்பு

இது உடல் மற்றும் தோல் வறட்சியால் ஏற்படும். நிறைய தண்ணீர் குடிங்க. பாதத்தை வரண்டு போகாம பார்த்துக்கோங்க. நல்ல மார்ஷரைசிங் கிரீம் வாங்கி படுக்கும் முன் பாதத்தை சுத்தமா கழிவிட்டு தேயிச்சிட்டு படுங்க..வெதுவெதுப்பான நீரில் உப்பும், லெமனும் போட்டு காலை 15 நிமிடம் வைத்து பின் நன்கு துடைச்சிடுங்க.
தண்ணீர் அதிகமா இருக்கும் இடத்தில் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டாம்.
மஞ்சள் ,வேப்பிலை,மருதாணி அரைத்து பூச குணமாகும்.கிருமி நாசினியாகும் . தண்ணீரில் அதிகம் நிற்க வேண்டாம். ரொம்ப ஈரமாகவும் வைக்க வேண்டாம். ஈரம் பட்டால் சீக்கிரம் துடைத்து விடுங்க.. செப்பல் போட்டு நடங்க.. வீட்டிலும் கூட தேவாவின் அழகு குறிப்பில் பாதங்களை பாதுகாக்கும் முறையை படிச்சு பாருங்க. .

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப நன்றி தோழிகளே..கவிசிவா,வாணி,ரம்யா கார்த்திக்..நீங்க சொன்னதை கண்டிப்பா கடைபிடிக்கிறேன்...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மேலும் சில பதிவுகள்