பால் பற்கள் விழுவதற்கு

என் மகளுக்கு 8 வயது. இன்னும் பல் விழவில்லை. பால் பற்கள் விழுவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஏனென்றால் என் பையனுக்கு 11 வயதிலும் பல் விழவில்லை. புதிய பற்கள் முளைத்த பிறகு பழைய பால் பற்களை ஒவ்வொன்றாக டாக்டரிடம் சென்று பிடுங்கி எடுத்தோம்.

ஹலோ தோழிலிஸ் யாருக்கும் ஐடியா தோணலியா? பிளீஸ் சீக்கிரம் ஹெல்ப் பண்ணுங்கப்பா.

பிரியா உங்கள் பையனுக்கு பால் பற்கள் இருந்த இடத்திலேயே புதிதாக பற்களும் முளைத்ததா? நீங்கள் பிடுங்கி எடுத்ததாக குறிப்பிட்டுள்ளதால்தான் கேட்கிறேன். உங்கள் மகனுக்கு காட்டிய டாக்டரிடமே உங்கள் மகளையும் அழைத்துப்போங்க. புதிதாக பல் வருவதுபோல அறிகுறி இருக்கான்னு பார்த்து என்ன செய்யலாம்னு கேட்டு அதன்படி செய்ங்க. ஏன்னா நாமளா பல் விழ வைக்க ட்ரை பண்றது ரிஸ்க் அண்ட் குழந்தைக்கு வலியும் சிரமமும் உண்டாகும் அதனால் டாக்டரிடமே கன்சல்ட் பண்ணுங்க பிரியா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

பையனுக்கு பால் பற்களுக்கு பின்னால் புதிய பற்களும் முளைத்து விட்டது. புதிய பற்களுக்கு இடம் இல்லாமல் கோணல்மானலாக இருந்தது. பால் பற்களை ஒவ்வொன்றாக பிடுங்கியபின், 2 வருடங்கள் கழித்து இப்போதான் பற்கள் சரியான வரிசைக்கு வந்துள்ளது. ஒவ்வொரு முறை பல் பிடுங்கும்போதும் காச்சல் வராம இருக்க மருந்து குடுத்தோம். சரியா சாப்பிட முடியாமல் கஸ்டப்பட்டான். என் பெண்ணுடன் படிக்கும் எல்லோருக்கும் பல் விழுந்து விட்டது, இவளுக்கு மட்டும் விழவில்லை, அதனால்தான் கேட்டேன்

பிரியா உங்க பையனுக்கு ஏற்பட்ட மாதிரி பொண்ணுக்கும் ஏற்பட சான்ஸஸ் இருக்கு. சோ நீங்க உடனே டாக்டர கன்சல்ட் பண்ணுங்கப்பா. வரும்முன்னே தடுத்திட்டா அந்த பிள்ளையாவது உங்க பையன் பட்ட மாதிரி கஷ்ட படாம இருக்கும். நமக்கே ஒரு பல் பிடுங்கினா என்ன வலி வலிக்கும்? அது பாவம் சின்ன குழந்தை வேற. தாமதிக்காம டாக்டரிடம் காட்டுங்க. எல்லாம் நல்லா ஆயிடும் கவலை வேண்டாம்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

தேங்க்ஸ் நித்யா பதிவிட்டதற்க்கு. நான் டாக்டரிடம் சென்று பார்க்கிறேன்.

என் அக்கா பையனுக்கும் இதே problemதான் இருந்தது அவனுக்கு டாக்டர் காரட்,போன்ற காய்கரிகள் கடித்து சாப்பிடசொன்னார்.சாப்பாட்டை மென்று முமுங்க சொல்லுங்க.நீங்க ரொம்ப நாள் சாப்பாட்டை மசித்தே கொடுத்திங்களா. ஆனாலும் டாக்டரை பார்பதுதான் முதல் வேலையா
வைத்துக்கொள்ளுங்கள்

ரொம்ப நாள் சாப்பாட்டை மசித்து கொடுக்கவில்லை. அவள் கேரட், சிக்கன், முறுக்கு எல்லாமே கடித்து சாப்பிடுவாள். என் கணவர் நீ ரொம்ப கால்சியம் கொடுத்துட்ட என்று கிண்டலடிக்கிரார்.

என் பையனுக்கு 5 வயதில் பால் பற்கள் ஆடுகிறது? இது நார்மலா ?ப்ளீஸ் பதில் சொல்லவும் !

god is great

மேலும் சில பதிவுகள்