கல்பனாவின் அப்பாவுக்காக பிரார்த்தனை

அறுசுவை தோழிகளே நம் அன்பு தோழி கல்பனாவின் அப்பாவுக்கு (கல்பனாசரவணக்குமார்)
உடல்நிலை கொஞ்சம் மோசமாக இருப்பதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருக்கிறார். அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைய நாம் அனைவரும் இறைவனிடம் கூட்டு பிரார்த்தனை செய்வோம்.மேலும் மேலும் பிரார்த்திப்போம் தோழிகளே...

அன்பு தோழி கல்பனா

அப்பாவிற்க்கு நல்ல படி குணமாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

கல்ப்ஸ் அக்கா கவலைபடாதீங்க... நம் அப்பாவின் உடம் முற்றிலும் குணமடைந்து ஆரோக்கியம் பெற நான் அந்த ஆண்டவனிடம் கேட்க்கிறேன்.....

SSaifudeen:)

இந்த இணையத்துக்கு நான் புதிது. என்னுடய முதல் பதிவு. உங்க அப்பா விரைவில் குணமாகி வர எனக்கு பிடித்த முருகா வை vendikuren.

கல்பனா,

அப்பாக்கு விரைவில் பூரணக் குணமடைய எல்லாம்வல்ல இறைவனை மனதார ப்ராத்திக்கிறேன். எல்லாம் சரியாகிடும், நீங்க தெம்பா இருங்க. அம்மாவுக்கு தைரியம் சொல்லுங்க. ‌

அன்புடன்
சுஸ்ரீ

கல்ப்ஸ் அப்பா விரைவில் நன்கு குணமடைய இறைவனிடம் ப்ரார்த்திக்கிறேன்.. நேற்றே பாபாகிட்ட ப்ரே பன்னினேன் கூட்டு பிரார்த்தனை கண்டிப்பா பலன் அளிக்கும் பா கவலைபடாமல் இருங்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கல்ப்ஸ் அக்கா அப்பா நல்லபடியா குணமாகி சீக்கிரமா வீடு திரும்பிடுவார். அம்மாவுக்கு தைரியம் சொல்லுங்க. நீங்களும் தைரியமா இருங்க. அப்பாவுக்காக என் ப்ரார்த்தனைகள் அக்கா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

பயப்படாதீங்க... இத்தனை பேருடைய பிராத்தனை துணி இருக்க அப்பா நிச்சயம் நலமாகிடுவார். தைரியமா இருங்க. என் பிராத்தனைகள் என்றும் உண்டு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கல்பனா,

கவலை படாதீங்க..
அப்பா விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்

என்றும் அன்புடன்,
கவிதா

கல்ப்ஸ்

அப்பாக்கு சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன். கவலை வேண்டாம்..
தைரியமா இருங்க..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கல்பனா... கவலை வேண்டாம் தைரியமா இருங்க... அப்பாவுக்கு சீக்கிரமே உடம்பு சரியாகிடும்... எங்கள் அனைவரின் பிராத்தனைகள் நிச்சையம் உண்டு.

அன்புடன்,
லலிதா

மேலும் சில பதிவுகள்