க்வில்டு வால் ஆர்ட்

தேதி: November 28, 2012

5
Average: 4.6 (11 votes)

 

கார்டு ஸ்டாக் பேப்பர் - விரும்பிய நிறங்கள்
க்வில்லிங் டூல்
க்வில்லிங் கோம்ப்(Quilling Comb)
க்ளு

 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
கார்டு ஸ்டாக் பேப்பரை கால் அங்குல அளவில் வெட்டி எடுத்துக் கொள்ளவும். இதில் பச்சை மற்றும் மஞ்சள் நிறங்கள் உபயோகித்துள்ளேன். 2 பச்சை ஸ்ட்ரிப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக ஒட்டவும். 2 மஞ்சள் நிற ஸ்ட்ரிப்புகளையும் அதேபோல் ஒட்டவும். ஒட்டிய பச்சை நிற ஸ்ட்ரிப்பையும், மஞ்சள் ஸ்ட்ரிப்பையும் பாதியாக மடித்து படத்தில் உள்ளது போல் வைத்து ஒட்டவும்.
உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இலை மற்றும் கொடி போல் செய்து ஒட்டிக் கொள்ளலாம். இங்கு சாதாரணமாக வளைத்து ஒட்டியுள்ளேன்.
பூவின் இதழ்கள் செய்ய மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற ஸ்ட்ரிப்புகளை ஒன்றன் மேல் ஒன்றை வைத்து ஒரு முனையை மட்டும் ஓட்டவும்.
இப்பொழுது ஆரஞ்ச் நிற ஸ்ட்ரிப்பை க்வில்லிங் கோம்பில் கடைசி 2 கம்பிகளைச் சுற்றி இருக்குமாறு வைத்து படத்தில் உள்ளது போல் ஒட்டவும். 2 ஸ்ட்ரிப்புகளையும் கோம்பின் அடிவழியாக எடுத்து கொண்டுவரவும். இதில் மஞ்சள் ஸ்ட்ரிப்பை மட்டும் படத்தில் காட்டியவாறு 3 மற்றும் 4 வது கம்பிகளின் இடையேயுள்ள இடைவெளியின் வழியாக அடிபக்கமாக விட்டு மேலே இழுக்கவும்.
ஆரஞ்சு நிற ஸ்ட்ரிப்பை 4 மற்றும் 5 வது கம்பியின் இடையேயுள்ள இடைவெளியின் வழியாக அடிபக்கமாக விட்டு மேலே இழுக்கவும். இதேபோல் ஸ்ட்ரிப்களை 5 முறை அடிப்பக்கத்திலிருந்து மேல் பக்கமாக இழுக்கவும். ஒவ்வொரு சுற்றிற்கும் ஒரு கம்பி இடைவெளி விட்டு ஸ்ட்ரிப்புகளை அடி வழியாக விட்டு மேலே இழுக்கவும்.
கடைசியில் ஸ்ட்ரிப் முடியும் இடத்தில் இரண்டையும் ஒன்றாக ஓட்டிவிடவும்.
இதேபோல் தேவையான எண்ணிக்கையில் இதழ்கள் செய்து கொள்ளவும்.
மஞ்சள், ஆரஞ்சு நிற ஸ்ட்ரிப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக வைத்து ஒட்டி க்வில்லிங் டூல் கொண்டு வட்டமாக சுற்றி ஓட்டவும். அதை சுற்றி இதழ்களை வைத்து பூ வடிவில் ஒட்டவும்.
க்ளு காய்ந்ததும் இந்த பூவை செய்து வைத்துள்ள கொடிகள் மேல் வைத்து ஒட்டிவிடவும்.
இதேபோல் செய்த வெவ்வேறு டிசைன்கள் இவை. க்வில்டு வால் ஆர்ட் தயார். க்வில்லிங் கோம்ப் இல்லையென்றால் சீப்பு (ஹேர் கோம்ப்) வைத்தும் செய்யலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வாவ்!!! அசத்திட்டீங்க... எக்ஸ்பர்ட் போல இருக்கு வொர்க். கடைசி படத்தில் நடுவில் இருக்க வொர்க் ரொம்ப ரொம்ப ரொம்ப அழகு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பென்டாஸ்டிக் அருமையா இருக்கு அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

romba alaka iruku nega sonna pepar ella kadaikalilum kidaikuma

இந்த மிஷின் எந்த கடை யில் கிடைக்கும் இக்கலையை எங்குகற்பது PLZ tell me pa

மிகவும் அழகாகவும் வண்ணமயமாகவும் இருக்கு வாழ்த்துக்கள்(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி:)

Kalai

வனி அக்கா ரொம்ப நன்றி :)

Kalai

கனிமொழி நன்றிப்பா :)

Kalai

meega நீங்க எந்த ஊருனு சரியா தெரியல.இந்தியால பெரிய ஸ்டெஷ்னரி கடைகள்ல கண்டிப்பா கிடைக்கும்.வாழ்த்துக்கு நன்றி:)

Kalai

ரொம்ப ரொம்ப அழ..கா இருக்கு கலா.
என் வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

நித்யா Amazon.com,Ebay.com இதுல கட்டாயம் கிடைக்கும்.அதுலயே சில விதமான வளைவுகள் எப்படி செய்யனும்னு உதாரணம் இருக்கும்.அதை வைத்து நாம நம் விருப்பத்துக்கு டிசைன் பன்னிக்கலாம்.வாழ்த்துக்கு நன்றி.

Kalai

அருள் ரொம்ப நன்றிப்பா :)

Kalai

இங்கெயும் உங்க வாழ்த்த பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு..டபுள் நன்றிகள் இமா ஆன்டி ;)

Kalai

ரொம்ப அழகா இருக்கு கலா.. வெறி நைஸ்.. கம்மல் க்வில்லிங் ம் அனுப்புங்க. :)
நானும் சீப்பு வைத்து தான் செய்வேன். வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கலா,
அழகாக நேர்த்தியா இருக்கு!!!!
மேலும் நிறைய குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வாழ்த்துக்கு நன்றி ரம்யா. கம்மல் க்வில்லிங் கட்டாயம் அனுப்பறேன் :)

Kalai

நன்றி கவி :)

Kalai

வாவ்... ப்யூட்டிஃபுல்! ரொம்ப அருமையா செய்திருக்கிங்க கலா, பார்த்திட்டே இருக்கலாம்போல அத்தனை அழகு!... :) வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

nan India (tirunelveli) irukuen engu kidaika vaipu unda

வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி சுஸ்ரீ :)

Kalai

meega நெல்லையில் கட்டாயம் கிடைக்கும்.டவுனில் கோவிலுக்கு எதிர் ரோட்டில் பெரிய ஸ்டேஷனரி கடை ஒன்னு இருக்கு.சாரி பேர் நினைவில்லை.ஜங்சனிலும் கிடைக்கும்.cardstock இல்லைன்னா,construction paper இல்லைன்னா A4 ஷீட்லயும் செய்யலாம்.

Kalai

figure thariyala.please send the photo

great work...

பிரதீபா நன்றிங்க.

Kalai