க்ரையிங் பிட்ஸ் (crying fits)என்றால் என்ன தோழிகளே? குழந்தைக்கு வருமாமே. என் குழந்தை அடிக்கடி இரவில் அழுகிறான். பயமாக உள்ளது. தெரிந்தால் சொல்லுங்கள்.
க்ரையிங் பிட்ஸ் (crying fits)என்றால் என்ன தோழிகளே? குழந்தைக்கு வருமாமே. என் குழந்தை அடிக்கடி இரவில் அழுகிறான். பயமாக உள்ளது. தெரிந்தால் சொல்லுங்கள்.
divya
எனக்கு தெரிஞ்ச வரையில் குழந்தைகள் காரணமே தெரியாம ரொம்ப அழறாங்க இல்லையா அதை தான், அந்த அழுகையை தான் அப்படி சொல்வாங்க... சில பிள்ளைகளுக்கு இது அதிகமா இருக்கும். ஆனா அதுக்கு தான் இந்த டெர்ம் பயன்படுத்தறாங்களான்னு எனக்கு உறுதியா சொல்ல முடியல.
இது காரணம் தெரியாமன்னு நாம தான் சொல்றோம்... ஆனா நிச்சயம் காரணம் இருக்கும். என் தங்கை மகள் இப்படி அழுவா... கடைசியில் காரணம் தூக்கம். இப்பவும் அவ அப்படி தான்... 1/2 மணி நேரம் அழுதுட்டு தான் தூங்குவா. கொஞ்சம் வளர்ந்தா சரியா போகும்.
சில பிள்ளைகள் பசி சொல்ல தெரியாம அழும். சில பிள்ளைகள் வயிற்றில் ஏஹ்டும் பிரெச்சனை இருந்தா அழும். சில பிள்ளைகள் காது வலி அப்படி இப்படின்னு அழும். பேச தெரியாத பிள்ளை என்பதால் நமக்கு ஒன்னும் புரியாது.
நல்லா ஆயில் மசாஜ் பண்ணிவிட்டு தூங்க வைங்க :) நல்லா உடம்பு வலி போக சூட நீர் விட்டு குளிக்க வெச்சாலே நல்லா தூக்கம் வரும். இது தான் நீங்க சொல்லும் வார்த்தைக்கு எனக்கு தெரிஞ்ச விஷயம்... மற்ற தோழிகளும் பதில் சொல்வாங்க... பயப்படாதீங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
hi
எப்படி இருக்கிங்க?
வீர் வீரென்று அழுகிறான். கண்கள் மேலே இருக்கும்.
தோழி நீங்கள் நலமா. பதில் அளித்தமைக்கு நன்றி. என் குழந்தைக்கு 1 1/2 வயது ஆகிறது. தூங்கிக் கொண்டு இருப்பவன் திடீர் என்று வீர் வீரென்று அழுகிறான். எங்களை பார்ப்பதே இல்லை. கண்கள் மேலே இருக்கும். 10 நிமிடம் அழுதபின் தான் கொஞ்சம் கொஞ்சமாக எங்களை பார்ப்பான். இதை டாக்டரிடம் சொன்னதும் தான் "crying fits ஆக இருக்க வாய்ப்புள்ளது, அடுத்த முறை அழும் போது நன்றாக கிள்ளி விடுங்கள் அப்போதும் உங்களை பார்க்கவில்லை என்றால் உடனே வாருங்கள்" என்று சொன்னார். அடுத்த முறை செல்லும் போது இது பற்றி விளக்கமாக எழுதுகிறேன். வெளியூர் சென்றிருந்ததால் பதில் அளிக்க முடியவில்லை தோழி. மன்னிக்கவும்.
நான் நலமாக இருக்கிறேன் தோழி.
நான் நலமாக இருக்கிறேன் தோழி. நீங்கள் நலமா.
dhivya
நீங்க சொல்றது எனக்கு புதுசா தான் இருக்கு... :) என் மகன் நீங்க சொல்ற மாதிரி அழுவான். பல முறை. ஆனா கண்களை திறக்கவே மாட்டான். முக்கியமா இது என்னைக்காவது பயந்திருந்தா அன்று இரவு நேரம் இப்படி அழுவான். நான் தூக்கி வெச்சு உலுக்கி விட்டு என்னை பார்க்க சொல்லி சமாதானம் செய்வேன். அப்போ தான் என்னை பார்ப்பான். இதை நான் இதுவரை பெருசா எடுக்கல, காரணம் பயத்தில் அழுகிறதுன்னு நினைப்பேன். இனி கொஞ்சம் உஷாரா தான் கவனிக்கணும். எனக்கு தெரிஞ்ச மருத்துவரை விசாரிச்சு பார்க்கிறேன். தகவ்லுக்கு நன்றி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
crying fits ஆக இருந்தால் தலையில் ஏதோ செய்யணும்னு சொன்னார்
கண்டிப்பா check பண்ணுங்க தோழி. crying fits ஆக இருந்தால் தலையில் ஏதோ செய்யணும்னு சொன்னார். நான் பயத்துல details கேட்காம வந்துட்டேன். என் குழந்தையையும் உலுக்கி தான் எழுப்புவேன். இவனும் கண் திறக்க மாட்டான். அப்படி திறக்க try பண்ணும்போது விழிகள் மேலே இருக்கும். கொஞ்ச நேரத்தில் urine போவான். அதனால் தான் அழுதான்னு நான் நினைத்து கொண்டேன். அது தான் இப்போ தப்பா போய்விட்டது.
divya
நான் விசாரிச்சேங்க.. ஒன்னும் பயம் வேண்டாம். இது குறிப்பா 2 - 3 வயது பிள்ளைகளுக்கு வரலாம். இது ஃபிட்ஸ் வகை இல்லை... இது ஒரு பேனிக் டிஸார்டர். அதாவது குழந்தை எதுக்காவது பயந்திருந்தா, உள்ளுக்குள் அலறி போயிருந்தா இது போல் வரலாம். இதுக்கு ஒன்னும் ஸ்பெஷல் ட்ரீட்மண்ட் இல்லை. இதுக்கு முக்கியமான ஆலோசனை அது போல் பிள்ளை பயப்படாம பார்த்துக்கணும். என்னை இது போல் ஆகுதுன்னு பார்த்து, காரணத்தை அனலைஸ் பண்ணி, அது போல் மீண்டும் நடக்காம பார்த்துகிட்டாலே போதும். சில பிள்ளைகள் வளர்ந்து 15 வயசுக்கு மேல் கூட இது தொடரலாம். அவங்களுக்கு வேணும்னா தெரபி மூலம் அவங்க ஆழ் மனசுல பயம் என்னன்னு கண்டு பிடிச்சு அதை விட்டு வெளியே வர உதவலாம். பயப்படாதீங்க... உங்களுக்கு எதாவது தகவல் கிடைச்சாலும் அவசியம் பகிர்ந்துக்கங்க. நன்றி. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
vanitha mam...
நன்றி தோழி. கண்டிப்பா சொல்றேன். பயந்துகிட்டே இருந்தேன். ரொம்ப நன்றிங்க. உங்க குழந்தைக்கு எத்தனை வயது?
divya
அவனுக்கு 3 வயசு. சரியா 1 1/2 வயசுல இருந்து தான் இந்த பிரெச்சனை இருந்தது. இப்போ பயமும் இல்ல, இந்த பிரெச்சனையும் இல்ல. அதனால் அவன் பயப்படாம பார்த்துக்கங்க. பயம் வேணாம் இதை பற்றின்னு டாக்டர் சொன்னார். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
என் பையனுக்கு இருந்தது
என் பையனுக்கு இருந்தது திடீர்னு அழுவான் அழும் போது கண்கள் மேல் நோக்கி இருக்கும் கைகள் இரண்டும் இருக்கமாக மூடிக்கொள்வான் பின் கால்களையும் நன்றகமூடிக்கொள்வான் அவனாள் ஒன்றும் செய்ய இயலாது 2 நிமிடம் கழித்துதான் பின் இயல்பாவான் இது பிறந்த 1 நாள் முதல் இருந்தது பின் அதை சரியாக கவனித்து வீடியோ எடுத்து டாக்டரிடம் காண்பித்தோம்.பின் தொடர்ந்து 1 வருடம் மாத்திரை சாப்பிட்டு குணம் ஆகியது..................
பயப்படுவதற்காக சொல்லவில்லை
இப்படியும் இப்போது உள்ள குழந்தைகளுக்கு இருக்கிறது.டாக்டரிடம் கேட்டாள் ஒன்றும் இல்லை என்று சொல்லி அனுப்புவார் ஆனால் மீண்டும் வரும் 4 முறை டாக்டரிடம் சென்று பின் ஒரு 35 வருடம் அனுபவம் உள்ள டாக்டர் தான் இதை கண்டு பிடித்தார்
by,
AnuGopi,
Be happy and Make others happy........