மூக்கின் இடது பக்கத்துவாரத்திலிருந்து

அன்புத்தோழிகளே, எனக்கு இரண்டு குழந்தைகள். முதல் குழந்தை பெண் இப்போது 6 வயது நடக்கிறது. இரண்டாவது ஆண் ஜனவரி வந்தால் 2 வயது. பொண்ணுக்கு 3 வயதிலிருந்தே மூக்கின் இடது பக்கத்துவாரத்திலிருந்து அப்பப்போ இரத்தம் வரும். பையனுக்கு 4 மாதத்திலிருந்தே அதே போல் இடது பக்கத்திலிருந்து வருகிறது. பொண்ணை டாக்டரிடம் காட்டினோம் அவர் ஒரு க்ரீம் தந்தார். பையனை இன்னும் காட்டவில்லை. டாக்டர் ஒன்றும் பயப்பட தேவையில்லை என்றார், இருந்தாலும் எனக்கு பயமாகவே இருக்கு. எதனால் இப்படி வருகிறது? உண்மையிலேயே பயப்படதேவையில்லையா? ப்ளீஸ் பதில் கூறுங்கள்.

யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்

அன்பு சஹோதரி லஷ்மி பிரபா.எப்படி இருக்கீங்க? நீங்கள் சொல்லும் இதே problem என் தங்கை கும் இருந்தது. திடீரென காலையில் எழும்பும் பொழுது படுத்த இடம் முழுவதும் இரத்தமாஹா இருக்கும்.அவள் வளர வளர இந்த பிரச்சனை சரியாகி விட்டது.இதற்கு நீங்க ரொம்ப பயப்பட வேண்டாம்னு தான் நினைக்கிறன். நல்ல உடம்புக்கு குளிச்சி தரக்கூடிய உணவுகள் கொடுங்க எல்லாம் சரியாஹி விடும்மா.

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

நன்றி தோழி,நாங்க நலம், நீங்க எப்படி இருக்கிறீங்க? இப்ப தான் கொஞ்சம் மனசு நிம்மதியா இருக்கு.

மேலும் சில பதிவுகள்