க்வில்ட் ரோஸ்

தேதி: December 1, 2012

5
Average: 4.1 (9 votes)

 

வண்ண காகிதங்கள் (கார்டு ஸ்டாக்)
வட்டம் போட மூடி - பெரியது ஒன்று, சிறியது ஒன்று
கம்
க்வில்ங் டூல்
கத்தரிக்கோல்

 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
காகிதத்தில் மூடியை வைத்து வட்டம் போட்டு வெட்டிக் கொள்ளவும்.
பின் வட்டத்தின் வெளிப்புறம் இருந்து உட்புறமாக சுற்றி வெட்டவும்.
வெட்டி முடித்ததும் படத்தில் காட்டியபடி இருக்கும்.
பின் வெளிப்புற நுனியில் இருந்து க்வில் செய்யவும்.
சுற்றி வரும் போதே ரோஜாவின் வடிவத்தை காணலாம்.
முழுவதும் சுற்றிய பின், முன்புறம் உள்ள இதழ்களை சற்று அழுத்தினால், அடிப்புறத்தில் சுருள்கள் வெளிப்புறம் வந்தபடி தெரியும். அங்கே முழுவதும் கம் தடவி உட்புற நுனியை வைத்து மூடி ஒட்டவும்.
ஒட்டிய பிறகு அப்படியே நன்கு காயவிடவும்.
கத்தரிக்கோலைக் கொண்டு வெட்டும் போது சமமான இடைவெளியில் வெட்டினால் நாட்டு ரோஸ் கிடைக்கும். தொடக்கத்தில் அகலமாக வெட்டி அதன் பிறகு அகலத்தை குறைத்து வெட்டினால் ரோஸ் மொட்டு கிடைக்கும். இதேபோல் வெட்டப்படும் காகிதத்தின் நீளத்தையும், அகலத்தையும் கலந்தவாறு மாற்றி மாற்றி வெட்டினால் வேறு விதமான ப்ரீட் ரோஸ் போல கிடைக்கும். சிறிய ரோஸ் செய்ய விரும்பினால் காகிதத்தில் சிறிய மூடியால் வட்டம் போட்டு வெட்டிச் செய்யலாம்.
பச்சை வண்ணத்தில் இலை போல வெட்டி அதை சற்று மடித்து அழுத்தவும்.
விரும்பிய எண்ணிக்கையில் ரோஸ் செய்து ஒட்டவும்.
ஒட்டிய பிறகு இடையே இலைகளை ஒட்டவும். அழகான க்வில்ட் ரோஸ்கள் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப அழகா இருக்கு... தக்காளி தோலில் ரோஜா செய்யும் அதே முறை. அழகு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

nega sonna paper chat papara

ரம்யா அக்கா,
உங்கள் பதிவை திருடி சங்கத்தமிழன் இனையத்தில் வெளியிட்டு இருக்காங்க தேங்காய் பால் தலைமுடிக்கு வரப்பிரசாதம்

by,
AnuGopi,
Be happy and Make others happy........

எப்பொழுதும் போல அழகு! இன்னும் வரட்டும். :-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

வெகு அழகு ரோஜாக்கள். இப்படிச் செய்து கிஃப்ட் பார்சல்ஸ் அலங்கரிக்கலாம் என்று தோன்றுகிறது எனக்கு.

‍- இமா க்றிஸ்

மிக மிக அருமை உங்கள் விளக்கமும், ரோஜாவும். வாழ்த்துக்கள் ரம்யா(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கண் கவர் ரோஜா,ரம்யா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அழகான ரோஜாக்கள்....3டி படம் போல் இருக்கிறது...வாழ்த்துக்கள் ரம்யா....

க்வில்ட் ரோஸ் ரொம்ப அழகா தத்ரூபமா இருக்கு அக்கா ஆர்டிபிஷியல் நு சொல்லவே முடியாத அளவுக்கு அருமையா இருக்கு அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

எப்போதும்போல் இதுவும் அழகா இருக்கு ரம்யா,வாழ்த்துக்கள் :)

Kalai

Once flower is done cut a circle with same color as flower and paste it at the bottom of the flower.
It shows that the flower density high.

//எந்த கருவியும் இல்லாமல் இதைச் செய்யலாம்.// என்றீர்கள். என் சின்ன மனிதர்கள் சிலர் இன்று இந்தப் பூக்களை முயற்சி செய்திருகிறார்கள். கையில் கமரா இல்லை; பாடசாலையில் கைபேசி பயன்படுத்த விரும்பவில்லை. சின்னவர்களுக்குத் தடை இருப்பதால் நாங்களும் பயன்படுத்துவது இல்லை. நாளை படம் எடுத்து உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

ஃபேஸ்புக் ஃபான்ஸ் க்ரூப்பில், சின்னவர்கள் செய்த‌ வேலையை இன்று பகிர்ந்திருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்