கர்பமாவதை தடுப்பதற்கு ஆலோசனை கூறுங்கள்

நான் பீரியட் தேதிக்கு 6 நாட்கள் முன் கணவருடன் சேர்ந்து இருந்தேன்,இதனால் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உள்ளதா?

எனக்கு இன்னும் பீரியட் வரவில்லை!!!!

எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர்,இங்கு Family planningசெய்யமாட்டேன் என்று விட்டார்கள்,இந்தியாவிற்கு போய்தான் Family Planning செய்ய இருந்தேன்,தோழிகள் உதவுங்கள்

எனக்கு பீரியட் சைக்கிள் 2வது டெலிவரிக்கு பிறகு 32 நாட்களாக மாறிவிட்டது,பீரியட் வருவதற்கு எத்தனை நாட்களுக்கு முன்பு உறவு கொள்வது சரி,கர்பமாவதை தடுப்பதற்கு ஆலோசனை கூறுங்கள்

தோழி நீங்க எந்த நாட்டில் வசிக்கிறீங்க? கர்ப்பத்தடைக்கு நிறைய வழி இருக்கு,நீங்க மாத்திரை எடுத்துக்கலாம், உங்க கணவர் condom பாவிக்கலாம், நீங்க மாசமா இருந்தப்போ ரெகுலர் செக் அப் இற்கு போன டாக்டரிடமே ஆலோசனை கேட்கலாமே, எதுவுமே பாவிக்காம இப்படி இருப்பது கர்ப்பதடைக்கு உத்தரவாதமில்லை, எதற்கும் ஒரு தரம் டாக்டரிடம் செக் பண்ணுங்க.

பதிலளித்ததற்கு ரொம்ப நன்றி லக்ஷ்மி,
நான் பஹ்ரைனில் இருக்கேன்ப்பா
எனக்கு இன்னொரு சந்தேகம்,எனக்கு 1 வருடம் முன்பு நார்மல் டெலிவரி ஆனது(2வது குழந்தை) அதற்கு பிறகு இர்ரெகுலராக பிரீயட் இருக்கிறது அதாவது 35 நாட்கள் ஆகிறது,டெலிவரிக்கு முன்பு 28 நாட்கள் இருந்தது,இது எதனால்,?நிறைய தோழிகள் ஹார்மோன் பிராப்ளம் வந்தால் இப்படி இருக்கும் என்கிறார்கள்,ஹார்மோன் பிரச்சனைக்கு டாப்ளட் எடுத்துகொண்டே இருந்தால் தான் பிளீடிங் வரும் நிறுத்தினால் பழைய கதைதான் என்கிறார்கள் உண்மையா உதவுங்கள் தோழிகளே

ஹாய் மஞ்சு. பீரியெட் பிரச்சனை எனக்கும் இருந்தது, நான் 2 வது குழந்தை பிறந்ததிலிருந்தே கர்ப்பத்தடை மாத்திரை பாவிக்கிறேன் கிட்டதட்ட 2 வருடமாகிறது.அதனால் இப்போ அந்தபிரச்சனை இல்லை.முந்தி இப்படி இருந்ததற்கு தைராய்ட் பிரச்சனை தான் காரணம்.இப்போ டெய்லி தைராய்ட் மாத்திரையும் எடுக்கிறேன். நீங்களும் தைராய்ட் எப்படி இருக்கிறது என்று ஒருதரம் உங்க family dr,idam செக் பண்ண சொல்லுங்க.

மேலும் சில பதிவுகள்